Shuru
Apke Nagar Ki App…
வேடசந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் வீராசாமிநாதன் பொதுமக்கள் முன்னிலையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி கூறி வாக்கு சேகரிப்பு திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் வீராசாமிநாதன் இன்று வேடசந்தூர் பகுதியில் பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாயனூர் அணை திட்டம் திமுக ஆட்சியில் தான் அரசாணை வெளியிடப்பட்டது. ஆட்சி அமைந்த உடன் அந்தத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறி பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Farmers joint Liability Group
வேடசந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் வீராசாமிநாதன் பொதுமக்கள் முன்னிலையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி கூறி வாக்கு சேகரிப்பு திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் வீராசாமிநாதன் இன்று வேடசந்தூர் பகுதியில் பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாயனூர் அணை திட்டம் திமுக ஆட்சியில் தான் அரசாணை வெளியிடப்பட்டது. ஆட்சி அமைந்த உடன் அந்தத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறி பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் களத்தில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் சுழன்று சுழன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர். விஜயகுமார், இன்று மாலை மணப்பாறை நகர பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேருந்து நிலையம், மாரியம்மன் கோவில், அண்ணாவிநகர், எட்டுத் தெரு, காமராஜர்சிலை, காந்திநகர், சேதுரெத்தினபுரம், ராஜீவ் நகர், முத்தன் தெரு பாத்திமா மலை, சந்தியாகுபுரம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளுக்கும் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். பிரச்சாரத்தின்போது வேட்பாளர் டாக்டர்.விஜயகுமார் பேசுகையில், மணப்பாறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிவட்ட சுற்றுசாலை, காவிரி குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை, விபத்துகளை குறைக்க பறக்கும் சாலை, நகரில் பாதாள சாக்கடை அமைத்து சுகாதாரத்தை பேணி காப்பேன் எனவும் வாக்குறுதி அளித்தார். வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.1
- தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் இந்த ஆண்டு வருகிற மே 1 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கொடியேற்றும் நிகழ்வு ஆண்டுதோறும் கண்ணகி கோவில் மலை அடிவாரத்தில் தமிழகப் பகுதியான கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் நடைபெறுவது வழக்கம். இதனை அடுத்து கடந்த ஆண்டு கண்ணகி கோவில் கொடியேற்றம் இரண்டு இடங்களில் நடைபெற்றது. லோயர் கேம்ப் பளியன் குடி மலையடி வார பகுதியில் தனியார் தோட்டத்தில் ஒரு தரப்பினர் கொடியேற்றினார் அதேபோன்று கம்பம் மங்களதேவி அறக்கட்டளை சார்பில் அவர்களது அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த ஆண்டும் லோயர் கேம்ப் பளியன் குடி வனப்பகுதிக்குள் கொடியேற்றம் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை இந்த ஆண்டு மே 1 ஆம் தேதி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா நடைபெற உள்ளது இதனை அடுத்து கம்பம் மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவிற்கான கொடியேற்றும் விழா நடைபெற்றது கண்ணகி உருவம் பொறித்த கொடியுடைய கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதனை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சுமந்து வந்து கொடிமரத்தினை நட்டு மங்களதேவி கண்ணகி புகைப்படம் பதிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது கொடியேற்றத்திற்கு பின்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இந்த நிகழ்வில் ஏராளமான மங்களதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தியும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் காவல் துறையின் சார்பில் மதுரை காவல்துறை காவலர்கள் மற்றும் குஜராத் மாநில ஆயுதப்படை போலீசார், மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து இன்று (ஏப்.19) மாலை தெற்கு வாசல் உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள்.1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூர் சித்திரை மாத தேர் பண்டிகை முன்னிட்டு அருள்மிகு அத்தனூர் அம்மன் திருவீதி உலா நடைபெற்றன விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்1
- திருமயம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு பணி சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதிக்கு ஆதரவாக நேற்று திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் மகளிர் அணியினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில், மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.1
- அவிநாசியில் பாஜக சார்பில் போட்டியிடக்கூடிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்று தேர்தல் பணிமனை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பாராளுமன்றத்தில் மகளிர் சட்ட மசோதாவிற்கு எதிராக வாக்களித்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் உண்மையை மக்கள் புரிந்து கொண்டார்கள். சமூக நீதிப் பேசி ஏமாற்றும் திமுகவை பெண்கள் இனி மன்னிக்க மாட்டார்கள் என பேட்டி அளித்தார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆர். கதிரவனுக்கு ஆதரவாக பண்ணப்பட்டி ஊராட்சியில் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரமானது நேற்று மாலை இரவு வரை பண்ணப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு சோத்துப்பாறை சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு வரும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மற்றும் அங்கு உள்ள விளையாட்டு வீரர்களை சந்தித்து குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அதனைத் தொடர்ந்து மார்க்கெட் வீதியில் உள்ள இறைச்சி கடை மற்றும் காய்கறி கடைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார் மேலும் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து தங்கள் வாக்குகளை குக்கர் சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுங்கள் என கை எடுத்து கும்பிட்டு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் இதில் நகரச் செயலாளர்கள் குபேந்திரன், பாலா, நகர்மன்ற உறுப்பினர் மணி வெங்கடேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அபுதாஹிர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிவசுப்பிரமணியன், அதிமுக நகர செயலாளர் பழனியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.19) காலை கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் , குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.1