Shuru
Apke Nagar Ki App…
திருமயம் ம் அருகே உள்ள மெய்யபுரத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மகளிர் அணியினர் திருமயம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு பணி சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதிக்கு ஆதரவாக நேற்று திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் மகளிர் அணியினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில், மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.
Mayilvaganan
திருமயம் ம் அருகே உள்ள மெய்யபுரத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மகளிர் அணியினர் திருமயம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு பணி சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதிக்கு ஆதரவாக நேற்று திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் மகளிர் அணியினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில், மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருமயம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு பணி சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதிக்கு ஆதரவாக நேற்று திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் மகளிர் அணியினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில், மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.1
- மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.2
- மணப்பாறையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குத்துவிளக்கு பூஜையுடன் சித்திரை மாத திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் நிகழ்ச்சி வரும் (ஏப்- 26) அன்று நடைபெற உள்ளது. இதில் மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ள கோவில் அறங்காவலர் ஆர்விஎஸ். மணி அறிவுறுத்தியுள்ளார்.1
- சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.37 லட்சத்து 32 ஆயிரத்து 257 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நிர்வாக மாஜிஸ்திரேட் மற்றும் பறக்கும் படைத் தலைவர் கோ.சந்தன பெருமாள் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், A.சரவணக்குமார் என்பவரிடமிருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் முத்திரையிடப்பட்ட பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சிவகங்கை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 7 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தியும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் காவல் துறையின் சார்பில் மதுரை காவல்துறை காவலர்கள் மற்றும் குஜராத் மாநில ஆயுதப்படை போலீசார், மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து இன்று (ஏப்.19) மாலை தெற்கு வாசல் உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள்.1
- அதன் ஒரு பகுதியாக, இன்று திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.லட்சுமிபுரம், ம.ரெட்டியாபட்டி, புதூர், சிலுக்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் சந்தித்து வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து, அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினார். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள புதிய திட்டங்களையும் பொதுமக்களிடம் பகிர்ந்து, ஆதரவை கோரினார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளையும் கவனமாக கேட்டு, அவற்றை தீர்க்க உறுதி அளித்தார். அவரது வருகையையொட்டி பல இடங்களில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மலர்மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் திரண்டு, உற்சாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் திருச்சுழி தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.1
- Post by P.G.m Paintings1
- மணப்பாறை தொகுதியில் தவெக சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆர். கதிரவன் நேற்று இரவு மணப்பாறை அடுத்த அனியாப்பூர் அருகே என்.பூலாம்பட்டியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பரப்புரை ஆற்றி வாக்குகள் சேகரித்தனர். இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான தவெகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.1