Shuru
Apke Nagar Ki App…
கல்வித்துறை அமைச்சர் வாக்கு சேகரிப்பு மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.
Lakshmanan
கல்வித்துறை அமைச்சர் வாக்கு சேகரிப்பு மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.
More news from தமிழ்நாடு and nearby areas
- சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் களத்தில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் சுழன்று சுழன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர். விஜயகுமார், இன்று மாலை மணப்பாறை நகர பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேருந்து நிலையம், மாரியம்மன் கோவில், அண்ணாவிநகர், எட்டுத் தெரு, காமராஜர்சிலை, காந்திநகர், சேதுரெத்தினபுரம், ராஜீவ் நகர், முத்தன் தெரு பாத்திமா மலை, சந்தியாகுபுரம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளுக்கும் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். பிரச்சாரத்தின்போது வேட்பாளர் டாக்டர்.விஜயகுமார் பேசுகையில், மணப்பாறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிவட்ட சுற்றுசாலை, காவிரி குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை, விபத்துகளை குறைக்க பறக்கும் சாலை, நகரில் பாதாள சாக்கடை அமைத்து சுகாதாரத்தை பேணி காப்பேன் எனவும் வாக்குறுதி அளித்தார். வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.19) காலை கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் , குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூரில் திமுக மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெற்றன வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்புகள் கேட்டும் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை பற்றியும் மகளிர் காண ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன நிகழ்வில் திமுக நிர்வாகிகள் செயலாளர்கள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.37 லட்சத்து 32 ஆயிரத்து 257 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நிர்வாக மாஜிஸ்திரேட் மற்றும் பறக்கும் படைத் தலைவர் கோ.சந்தன பெருமாள் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், A.சரவணக்குமார் என்பவரிடமிருந்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் முத்திரையிடப்பட்ட பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சிவகங்கை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 7 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- அதன் ஒரு பகுதியாக, இன்று திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.லட்சுமிபுரம், ம.ரெட்டியாபட்டி, புதூர், சிலுக்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் நேரில் சென்று மக்களுடன் சந்தித்து வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் மக்களை நேரடியாக சந்தித்து, அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கினார். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள புதிய திட்டங்களையும் பொதுமக்களிடம் பகிர்ந்து, ஆதரவை கோரினார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளையும் கவனமாக கேட்டு, அவற்றை தீர்க்க உறுதி அளித்தார். அவரது வருகையையொட்டி பல இடங்களில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் மலர்மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர். சில இடங்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் திரண்டு, உற்சாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு, வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் திருச்சுழி தொகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.1
- ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாச்சியார் புரம் கிராமத்தில் இன்று ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மேளதாளம் முழங்க கிரேன் மூலம் மாலை அணிவித்தும் வால் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆர். கதிரவனுக்கு ஆதரவாக பண்ணப்பட்டி ஊராட்சியில் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரமானது நேற்று மாலை இரவு வரை பண்ணப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று (ஏப்.19) நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நடிகை குஷ்பு கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை கோவில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை என்று குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு இதுகுறித்த ரூல்ஸ் தெரியவில்லை. விவரம் தெரியாமல் ஏதும் சொல்லக்கூடாது. ரூல்ஸ் தெரிந்த பின்பு அதற்கான விளக்கத்தை அளிப்பதாக கூறி கோயிலுக்குள் சென்றார்.1
- திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி மேற்கு ஒன்றியத்தின் P.புதுப்பட்டி, சித்து மூன்றடைப்பு, தோப்பூர், அல்லிக்குளம், கிழவனேரி, கழுவனச்சேரி, சொக்கம்பட்டி, பந்தனேந்தல், கனக்கனேந்தல், கரியனேந்தல் உள்ளிட்ட பல பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தங்கம் தென்னரசு வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டினார். வாக்கு சேகரிப்பிற்காக சென்ற அவருக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும், சிறுமிகள் மலர் கொடுத்தும், பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். P புதுப்பட்டி பகுதியை திருச்சுழி தாலுகாவில் இருந்து காரியாபட்டி தாலுகாவிற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த அவர், முன்னதாக ஊராட்சிகள் மறு வரையறை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில் வருவாய் கிராமங்களை மறு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே வருவாய்த் துறை அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த கோரிக்கை நியாயமானது என்பதையும் அவர் குறிப்பிட்டார். மேலும், சித்து மூன்றடைப்பு பகுதியில் குண்டாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, ரூ.25 கோடி மதிப்பீட்டில் அணை கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதை நினைவுபடுத்தி, அதனை நிறைவேற்ற உறுதி தெரிவித்தார்.10