logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகேயுள்ள ராசா பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பாலாஜி பட்டாசு ஆலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் பட்டாசு ஆலைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சாத்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நத்தத்துப்பட்டி, மாசார்பட்டி, எம். நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; இவர்களில் அதிகமான பெண்கள் அடங்குவர். இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

8 hrs ago
user_K. Arun pandian
K. Arun pandian
Photographer Sattur, Virudhunagar•
8 hrs ago

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகேயுள்ள ராசா பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பாலாஜி பட்டாசு ஆலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் பட்டாசு ஆலைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சாத்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நத்தத்துப்பட்டி, மாசார்பட்டி, எம். நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; இவர்களில் அதிகமான பெண்கள் அடங்குவர். இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

More news from Virudhunagar and nearby areas
  • விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பெரியார் நகர் சிறுவர் பூங்காவில், ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு தினத்தையொட்டியும், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும், மரம் நடு விழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சாத்தூர் நகர் தலைவர் குருசாமி, நகராட்சி ஆணையாளர் ஜெகதீஸ்வரி, தொண்டு நிறுவன அமைப்பினர், சிலம்பம் கலைக்கூட ஆசான் மற்றும் மாணவ மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தொண்டு நிறுவன அமைப்பினர், பொதுமக்கள் ஆர்வத்துடன் விலங்குகளை வளர்ப்போம் என்ற எண்ணத்தில் மாடுகளை சாலைகளில் துரத்திவிடுவது பெரும் ஆபத்தை விளைவிப்பதாகக் குறிப்பிட்டனர். இதேபோன்று, நாய்களை விருப்பப்பட்டு வளர்த்து, பின்பு பராமரிக்க முடியாமல் தெருக்களில் விட்டுவிடுவதால் பல்வேறு இடர்பாடுகளும் பொதுமக்களுக்கு ஆபத்தும் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். இதனால் பொதுமக்கள் முறைப்படி நாய்களை வளர்க்க லைசன்ஸ் பெற்று வளர்க்க வேண்டும் என்றும், ஆர்வத்துடன் நாய்களை வளர்த்து தெருவில் விட்டுவிடுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் சேர்மன், ஆணையாளர், தொண்டு நிறுவன அமைப்பினர் மற்றும் மாணவர்கள் அனைவரும் அப்பகுதியில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்து, பிளாஸ்டிக் ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர். இறுதியாக, சிலம்பக் கலைக்கூட மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான சிலம்பக் கலைகளைச் சுழற்றி வெளிப்படுத்தினர்.
    1
    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பெரியார் நகர் சிறுவர் பூங்காவில், ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு தினத்தையொட்டியும், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும், மரம் நடு விழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சாத்தூர் நகர் தலைவர் குருசாமி, நகராட்சி ஆணையாளர் ஜெகதீஸ்வரி, தொண்டு நிறுவன அமைப்பினர், சிலம்பம் கலைக்கூட ஆசான் மற்றும் மாணவ மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தொண்டு நிறுவன அமைப்பினர், பொதுமக்கள் ஆர்வத்துடன் விலங்குகளை வளர்ப்போம் என்ற எண்ணத்தில் மாடுகளை சாலைகளில் துரத்திவிடுவது பெரும் ஆபத்தை விளைவிப்பதாகக் குறிப்பிட்டனர். இதேபோன்று, நாய்களை விருப்பப்பட்டு வளர்த்து, பின்பு பராமரிக்க முடியாமல் தெருக்களில் விட்டுவிடுவதால் பல்வேறு இடர்பாடுகளும் பொதுமக்களுக்கு ஆபத்தும் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். இதனால் பொதுமக்கள் முறைப்படி நாய்களை வளர்க்க லைசன்ஸ் பெற்று வளர்க்க வேண்டும் என்றும், ஆர்வத்துடன் நாய்களை வளர்த்து தெருவில் விட்டுவிடுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் சேர்மன், ஆணையாளர், தொண்டு நிறுவன அமைப்பினர் மற்றும் மாணவர்கள் அனைவரும் அப்பகுதியில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்து, பிளாஸ்டிக் ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர். இறுதியாக, சிலம்பக் கலைக்கூட மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான சிலம்பக் கலைகளைச் சுழற்றி வெளிப்படுத்தினர்.
    user_K. Arun pandian
    K. Arun pandian
    Photographer Sattur, Virudhunagar•
    8 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கோமதிநாயகம் தனது குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த ₹1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதேபோன்று, கோவில்பட்டி கணேஷ் நகர் நான்காவது தெருவைச் சேர்ந்த ஜான்கோராணியின் வீட்டிலும் திருட்டு நடந்துள்ளது. ஜான்கோராணி சென்னையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டுப் பணிப்பெண் ராஜேஸ்வரி செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ராஜேஸ்வரி உடனடியாக வீட்டு உரிமையாளர் மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், வீட்டிலிருந்த 41 இன்ச் டிவி திருடு போனது தெரியவந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கோமதிநாயகம் தனது குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த ₹1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதேபோன்று, கோவில்பட்டி கணேஷ் நகர் நான்காவது தெருவைச் சேர்ந்த ஜான்கோராணியின் வீட்டிலும் திருட்டு நடந்துள்ளது. ஜான்கோராணி சென்னையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டுப் பணிப்பெண் ராஜேஸ்வரி செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ராஜேஸ்வரி உடனடியாக வீட்டு உரிமையாளர் மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், வீட்டிலிருந்த 41 இன்ச் டிவி திருடு போனது தெரியவந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • இன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திக் மற்றும் போலீஸார், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பரூம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் ஓட்டப்பிடாரம் நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் மகேஷ் குமார் (19), வ.உ.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர்களான ராசுக்குட்டி மகன் அறிவுமதி (எ) அழகு (23) மற்றும் பாஸ் (எ) பாலமுருகன் (22) ஆகியோர் அடங்குவர். அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    இன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திக் மற்றும் போலீஸார், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பரூம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் ஓட்டப்பிடாரம் நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் மகேஷ் குமார் (19), வ.உ.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர்களான ராசுக்குட்டி மகன் அறிவுமதி (எ) அழகு (23) மற்றும் பாஸ் (எ) பாலமுருகன் (22) ஆகியோர் அடங்குவர். அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (ஜூன் 19) இரவு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு தங்கத்தேர் வழிபாடு நடைபெற்றது. தவெக நிர்வாகிகள் சசி முருகன் மற்றும் ரேஷன் கடை கார்த்திக் ஆகியோரின் ஏற்பாட்டில் நடந்த இந்த வழிபாட்டில், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரினை இழுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
    1
    தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (ஜூன் 19) இரவு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு தங்கத்தேர் வழிபாடு நடைபெற்றது. தவெக நிர்வாகிகள் சசி முருகன் மற்றும் ரேஷன் கடை கார்த்திக் ஆகியோரின் ஏற்பாட்டில் நடந்த இந்த வழிபாட்டில், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரினை இழுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    22 hrs ago
  • சமோசாவுக்கு மஞ்சள் நிறத்தையும் பளபளப்பையும் கொடுக்க ஒரு நபர் ஏதோ ஒரு ரசாயன திரவத்தைப் பூசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவால் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த பெரும் விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. வலைத்தளவாசிகள், ஒரு சில தவறான வியாபாரிகளின் இத்தகைய நடவடிக்கைகளால் நேர்மையாக உழைக்கும் மற்ற வியாபாரிகளும் பாதிக்கப்படுவதாக தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சமோசா விரும்பி சாப்பிடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்த வீடியோ ஒரு எச்சரிக்கையாக வெளிவந்துள்ளது.
    1
    சமோசாவுக்கு மஞ்சள் நிறத்தையும் பளபளப்பையும் கொடுக்க ஒரு நபர் ஏதோ ஒரு ரசாயன திரவத்தைப் பூசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவால் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த பெரும் விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. வலைத்தளவாசிகள், ஒரு சில தவறான வியாபாரிகளின் இத்தகைய நடவடிக்கைகளால் நேர்மையாக உழைக்கும் மற்ற வியாபாரிகளும் பாதிக்கப்படுவதாக தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சமோசா விரும்பி சாப்பிடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்த வீடியோ ஒரு எச்சரிக்கையாக வெளிவந்துள்ளது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தில், தேனி - மதுரை நெடுஞ்சாலை ஓரம் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் தூய்மைப் பணியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மேற்கொண்டது. நிலத்தடி நீரையும், இயற்கையையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த பணியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். அவர் நவீன இயந்திரத்தைக் கொண்டும், ஜேசிபி வாகனத்தையும் நேர்த்தியாக இயக்கி புதர் மண்டிப் போயிருந்த கருவேல மரங்களை வேரோடு அகற்றினார். வைகோவின் இந்த சுறுசுறுப்பான செயல்பாட்டைக் கண்டு அங்கிருந்த கட்சியினரும், பொதுமக்களும் உற்சாகமடைந்தனர். மதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலர் இந்தப் பணியில் திரளாகக் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தமிழக சட்டசபையில் எந்தத் தீர்மானம் போட்டாலும், அதற்கு முட்டுக்கட்டை போட்டு தமிழகத்துக்குக் கேடு விளைவிப்பதே மத்திய அரசுதான் என்று குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கு காவிரி மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வரக்கூடாது என்பதுடன், மேகதாது அணையை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து கடந்த 2012ஆம் ஆண்டிலேயே முதன்முதலில் போராட்டம் நடத்தியது மதிமுகதான் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் ஒரு நல்ல தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒருசேர இணைந்து, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கொண்டு வந்திருப்பதாக வைகோ தெரிவித்தார். ஆனால், கர்நாடக அரசு மட்டும் தனித்து இதைச் செய்யவில்லை என்றும், இதற்கு முழுக்க முழுக்கப் பின்புலமாக இருந்து இயக்குவது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய சர்க்கார்தான் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், கடந்த 2014 டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடந்த ஒரு ரகசியக் கூட்டத்தில், கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாகவும், அப்போது 'நீங்கள் மேகதாது அணையை கட்டுங்கள், நாங்கள் தடுக்க மாட்டோம், நீங்கள் கட்டிக்கொண்டே இருங்கள்' என்று மத்திய சர்க்கார் பச்சைக்கொடி காட்டியதாகவும் வைகோ கூறினார். இந்தச் சதித்திட்டத்தை 'தி இந்து' ஆங்கில நாளிதழ்தான் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தியது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
    2
    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தில், தேனி - மதுரை நெடுஞ்சாலை ஓரம் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் தூய்மைப் பணியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மேற்கொண்டது. நிலத்தடி நீரையும், இயற்கையையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த பணியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். அவர் நவீன இயந்திரத்தைக் கொண்டும், ஜேசிபி வாகனத்தையும் நேர்த்தியாக இயக்கி புதர் மண்டிப் போயிருந்த கருவேல மரங்களை வேரோடு அகற்றினார். வைகோவின் இந்த சுறுசுறுப்பான செயல்பாட்டைக் கண்டு அங்கிருந்த கட்சியினரும், பொதுமக்களும் உற்சாகமடைந்தனர். மதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலர் இந்தப் பணியில் திரளாகக் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தமிழக சட்டசபையில் எந்தத் தீர்மானம் போட்டாலும், அதற்கு முட்டுக்கட்டை போட்டு தமிழகத்துக்குக் கேடு விளைவிப்பதே மத்திய அரசுதான் என்று குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கு காவிரி மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வரக்கூடாது என்பதுடன், மேகதாது அணையை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து கடந்த 2012ஆம் ஆண்டிலேயே முதன்முதலில் போராட்டம் நடத்தியது மதிமுகதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் ஒரு நல்ல தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒருசேர இணைந்து, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கொண்டு வந்திருப்பதாக வைகோ தெரிவித்தார். ஆனால், கர்நாடக அரசு மட்டும் தனித்து இதைச் செய்யவில்லை என்றும், இதற்கு முழுக்க முழுக்கப் பின்புலமாக இருந்து இயக்குவது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய சர்க்கார்தான் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், கடந்த 2014 டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடந்த ஒரு ரகசியக் கூட்டத்தில், கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாகவும், அப்போது 'நீங்கள் மேகதாது அணையை கட்டுங்கள், நாங்கள் தடுக்க மாட்டோம், நீங்கள் கட்டிக்கொண்டே இருங்கள்' என்று மத்திய சர்க்கார் பச்சைக்கொடி காட்டியதாகவும் வைகோ கூறினார். இந்தச் சதித்திட்டத்தை 'தி இந்து' ஆங்கில நாளிதழ்தான் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தியது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சிக்குட்பட்ட, சுரண்டை - திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில், பங்களா சுரண்டை கீழ்புறம், பரங்குன்றா புறம் விலக்கு அருகே உள்ள ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி அருகில் உள்ள மெயின்ரோட்டில், தாமிரபரணி குடிநீர் குழாய் மெயின் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தினசரி பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, இந்த பைப்லைன் உடைப்பை சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து, பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமாறு சமூக ஆர்வலர் வேல்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சிக்குட்பட்ட, சுரண்டை - திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில், பங்களா சுரண்டை கீழ்புறம், பரங்குன்றா புறம் விலக்கு அருகே உள்ள ஸ்ரீ ஜெயேந்திரா பள்ளி அருகில் உள்ள மெயின்ரோட்டில், தாமிரபரணி குடிநீர் குழாய் மெயின் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தினசரி பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, இந்த பைப்லைன் உடைப்பை சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து, பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமாறு சமூக ஆர்வலர் வேல்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகேயுள்ள ராசா பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பாலாஜி பட்டாசு ஆலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் பட்டாசு ஆலைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சாத்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நத்தத்துப்பட்டி, மாசார்பட்டி, எம். நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; இவர்களில் அதிகமான பெண்கள் அடங்குவர். இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகேயுள்ள ராசா பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பாலாஜி பட்டாசு ஆலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயம் அடைந்தவர்கள் பட்டாசு ஆலைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சாத்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நத்தத்துப்பட்டி, மாசார்பட்டி, எம். நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; இவர்களில் அதிகமான பெண்கள் அடங்குவர்.

இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
    user_K. Arun pandian
    K. Arun pandian
    Photographer Sattur, Virudhunagar•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.