Shuru
Apke Nagar Ki App…
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார்! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று (23.04.20 26 ) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சிம்ரன் ஜீத்சிங் காலோன் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார். வளவன் மாவட்ட செய்தியாளர் இராமநாதபுரம் மாவட்டம்
VALAVAN
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார்! தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று (23.04.20 26 ) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சிம்ரன் ஜீத்சிங் காலோன் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார். வளவன் மாவட்ட செய்தியாளர் இராமநாதபுரம் மாவட்டம்
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குப்பதிவிற்காக காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். தமிழரசி ரவிக்குமார் கடந்த மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் வாக்களிப்பு அப்பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. வாக்குச்சாவடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.1
- தமிழகத்தில் இன்று (ஏப்.23) காலை 7 மணி முதல் தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செல்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் 3 ம் நாள் நிகழ்ச்சி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் 63. அவரது மனைவி முத்துலட்சுமி 54. அவரது மகன் ஹரி ராம சரவணன் 33. மகள் சண்முகப்பிரியா 27 ஆகிய நான்கு பேரும் சென்னையில் இருந்து ஹரி ராம சரவணன் காரில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதால் வாக்களிப்பிற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி ஹரி ராம சரவணன் காரை ஓட்டி சென்று கொண்டிருந்த நிலையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது அந்த வழியை சென்று கொண்டிருந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர் நாகேந்திரன் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கியிருந்த நான்கு பேரையும் உயிருடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் ரகுராம் சம்பவ இடத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார் .1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தம்பட்டி பகுதியில் திமுகவினருடைய மோதல். ஒருவருக்கு மண்டை உடைப்பு. மருத்துவமனையில் அனுமதி. அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம். பதட்டமான சூழ்நிலை போலீசார் குவிப்பு.1
- தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியில் அவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினர் கணேஷ் நகரில் உள்ள வேட்பாளரின் வீட்டிற்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 65 லட்சம் ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் முறைப்படி பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாகத் தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பணம் பதுக்கியது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளைப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைத் தென்பாகம் போலீசார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்துத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டிலும் பெரிய அளவிலான தொகை சிக்கியிருப்பது தூத்துக்குடி மாவட்ட தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- Post by மா.சுடலைமணி1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று (ஏப்.22) காலை தங்கப்பல்லாக்கில் சுவாமியும் , அம்மனும் தெற்கு வாசல் வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவற்காய் மண்டபத்திற்கு எழுந்தருளினார்கள். மீண்டும் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு தெற்கு வாசல் சின்னக்கடை தெரு, தொட்டியகிணறு தெரு, தெற்காவணிமூலவீதி, வழியாக நான்கு சித்திரை வீதிகளை பவனி வந்து திருக்கோவில் சென்று அடைந்தது. சுவாமியும் அம்மனும் தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் முன்பாக சென்றபோது அங்கிருந்த இஸ்லாமியர்கள் மத வேற்றுமையை கடந்து ரோஸ்மில்க் வழங்கி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றினார்கள்1