Shuru
Apke Nagar Ki App…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 4) திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வேட்பாளர் எஸ்.எஸ்.பி பாருக் திமுக கூட்டணி வேட்பாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட இவரை அறிமுகம் செய்து வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் ஏ.வ.வேலூகலந்து கொண்டார்.
Yuvaraj Yuvaraj
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 4) திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வேட்பாளர் எஸ்.எஸ்.பி பாருக் திமுக கூட்டணி வேட்பாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட இவரை அறிமுகம் செய்து வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் ஏ.வ.வேலூகலந்து கொண்டார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என்ற முக்கியமான பிரச்சார நிகழ்ச்சி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்றது. இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திரு.ராதாகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஓட்டு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல… அது நம்ம எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாய், திரு. KGS சுரேஷ் , திரு. முனிராஜ், திரு. அன்பு, திரு. திருக்குமரன், திரு. கோபிநாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.1
- Post by Vinayagam Vinayagam1
- நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நாட்டுக்கோழி சந்தை நடைபெறுவது வழக்கம். இன்று (ஏப்.05) நடைபெற்ற சந்தையில் சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் நாட்டுக்கோழிகள் ரூ.400 - 1,300 வரை விற்பனையானது. மேலும் இன்று ஒரே நாளில் மொத்தம் ரூ.3.70 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.1
- தர்மபுரி மாவட்டம், தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளர் சௌமியா அன்புமணி பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தர்மபுரி அடுத்துள்ள சோகத்தூர் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்கு சேகரிப்பு திட்டங்கள், பிரசார முறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி, “தர்மபுரி தொகுதியில் மக்கள் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகமாக உள்ளது. இந்த ஆதரவை வாக்குகளாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும், வீடு தோறும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு அளிக்கும் நோக்கில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றால் தொப்பூர் கணவாய் மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பபோம் என்றும் கிடப்பில் போடப்பட்டுள்ளது வத்தல்மலை சுற்றுலா தளம் திட்டத்தை விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள் வேலை திட்டமாக மாற்றப்படும் என்றும் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் கூறினார் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றும், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.1
- Post by JEK MEDIAtamil2
- சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அர்த்தனாரி இன்று சர்ச்சில் உளாள பொதுமக்களிடம் கைச்சின்னத்திற்கு வாக்கு கேட்டார் முதலில் ஸ்டெயின் மேரிஸ் கல்லூரியின் முதல்வர் அருளப்பன்யிடம் ஆசி பெற்றார் மேலும் பாதர் கூறும்பொழுது ஏழைகளின் சின்னம் கைச்சின்னம் உதயசூரியின் சின்னம் என்றும் கூறினார் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று வேட்பாளருக்கு ஆசிர்வாதம் செய்தார் அருகில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர். வி. ஸ்ரீராம் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.1
- சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள, தனியார் வணிக வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு அணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை, எவ்வாறு கையாள்வது என்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி இன்று வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சேலம் தீயணைப்புத்துறை ஊழியர்கள் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- Post by Vinayagam Vinayagam1