Shuru
Apke Nagar Ki App…
முக்கண்ணாமலைப்பட்டி கடை வீதியில் அரியவகையாக மரப்பூச்சி அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி கடை வீதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் திடிரென அரியவகையாக மரப்பூச்சி ஒன்று பறந்து வந்து அமர்ந்தது இந்த அரியவகையான இலை பூச்சி உடல் முழுவதும் இலையினாலும் கை, கால் என அனைத்தும் இலையில் உள்ள குச்சி போன்றும் காணப்பட்டது இந்ந அரியவகை பூச்சியை அருகில் இருந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்துசென்றனர்.
Batcha
முக்கண்ணாமலைப்பட்டி கடை வீதியில் அரியவகையாக மரப்பூச்சி அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி கடை வீதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் திடிரென அரியவகையாக மரப்பூச்சி ஒன்று பறந்து வந்து அமர்ந்தது இந்த அரியவகையான இலை பூச்சி உடல் முழுவதும் இலையினாலும் கை, கால் என அனைத்தும் இலையில் உள்ள குச்சி போன்றும் காணப்பட்டது இந்ந அரியவகை பூச்சியை அருகில் இருந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்துசென்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி, பஞ்சபூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தொப்பம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வரும் முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் அப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளில் சிலருக்கு பாலியல் தொந்தரவு செய்தாகவும், அது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரிடம் பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (06.03.26) புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சிறுமிகளின் பெற்றோர்கள் 09.03.2026 பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததன் பேரில் பள்ளிக்கு சென்ற மணப்பாறை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவியா மற்றும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் குழந்தைகள் நல துறையைச் சேர்ந்த அலுவலர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ஆசிரியர் பாஸ்கர் பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதும் அந்த நிகழ்வை பள்ளியின் தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி யாரிடமும் சொல்லாமல் மறைத்த குற்றத்திற்காகவும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- Post by ℬᴀʟᴀ ŧέcԩ1
- திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் முத்தரசி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது,குப்பைக் கிடங்கினால், சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், காற்று மாசு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து, இந்த 16.5 ஏக்கா் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கான இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, குப்பைக் கிடங்கு முன்புள்ள சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.2
- Post by Lingaraju mc6
- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர இஸ்லாமிய முன்னேற்ற நல சங்கம் (முஹல்லா கமிட்டி) சார்பாக 4 ஆம் ஆண்டு பித்ரா எனும் பெருநாள் மளிகை பொருட்கள் இஸ்லாமிய மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை த்ரீ ஸ்டார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் நூறுக்கு மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாட்டினை நகர இஸ்லாமிய நலச்சங்கம் (மொஹல்லா கமிட்டி) நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்து இருந்தனர் இதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளனர்1
- திண்டுக்கல் மாநகராட்சி நாகல்புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி (குட்டவாத்தியார் பள்ளி ) 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு அன்று முதல் இன்று வரை சுமார் நூறு ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி முறையை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு திருவிழா திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் N.A.லட்சுமி மற்றும் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் உமாதேவி பாரதி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த நூற்றாண்டு திருவிழாவில் மாநகராட்சி பள்ளியின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் S.M.C உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவின் இறுதி நிகழ்வாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கான ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பள்ளியின் நீண்டகால வரலாற்றையும் அதன் கல்வி பங்களிப்பையும் நினைவு கூர்ந்தது.1
- வணக்கம் நண்பர்களே, என் பெயர் அருண். நான் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் Shuru App-இல் உள்ள செய்திகளை — அது என் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது மற்றொருவரின் செய்தி ஆக இருந்தாலும் — பல WhatsApp குழுக்கள் மற்றும் Facebook-இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் ₹549 வரை சம்பாதித்த அனுபவமும் எனக்கு உள்ளது. எல்லா நிருபர்களிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் — உங்கள் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது உங்கள் பகுதியில் உள்ள முக்கிய தகவல் ஆக இருந்தாலும், அதை அதிகமான மக்களிடம் கொண்டு செல்லுங்கள். News Sharing மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.1