logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரிடம் குரும்பபாளையம் பொதுமக்கள் புகார் மனு அளித்தல் கோவை மதுக்கரையில் இயங்கி வரும் பணியாரம் சிமெண்ட் ஆலையினால் வெளிவரும் தூசினால் மக்கள் சுவாச பிரச்சினை உருவாகிறது என குரும்பபாளையம் பொதுமக்கள் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி அவர்களை சந்தித்து நேரில் மனு அளித்தனர்.விண்ணப்பத்தை பரிசீலனை செய்த எஸ் பி வேலுமணி எம்எல்ஏ அவர்கள் இது சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.

1 hr ago
user_Veeran Suguna
Veeran Suguna
Carpenter பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
1 hr ago
6ce0ad5e-1cab-4553-9f17-708fa7dbff98

தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரிடம் குரும்பபாளையம் பொதுமக்கள் புகார் மனு அளித்தல் கோவை மதுக்கரையில் இயங்கி வரும் பணியாரம் சிமெண்ட் ஆலையினால் வெளிவரும் தூசினால் மக்கள் சுவாச பிரச்சினை உருவாகிறது என குரும்பபாளையம் பொதுமக்கள் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி அவர்களை சந்தித்து நேரில் மனு அளித்தனர்.விண்ணப்பத்தை பரிசீலனை செய்த எஸ் பி வேலுமணி எம்எல்ஏ அவர்கள் இது சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.

More news from Tamil Nadu and nearby areas
  • பாட்டியின் சாதனை. சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.
    1
    பாட்டியின் சாதனை.
சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    17 hrs ago
  • விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    4
    விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 
10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். 
இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    1
    தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர்  பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி  அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில்  கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    user_Dpm news
    Dpm news
    Photographer தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • *தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும், குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலர், குடிநீர் எடுத்துவிடும் நபர் உள்ளிட்டோர் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகளை கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை அப்படியே கடைகள் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதால் வீடுகளுக்கு குடிநீரே வருவதில்லை என்றும் குற்றம்சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடமலைகுண்டு - வருசநாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டு புறமும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    1
    *தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி, பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்*
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக  முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும்,
குடிநீர் கேட்டால் ஊராட்சி செயலர், குடிநீர் எடுத்துவிடும் நபர் உள்ளிட்டோர் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்புகளை கொடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை அப்படியே கடைகள் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதால் 
வீடுகளுக்கு குடிநீரே வருவதில்லை என்றும் குற்றம்சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து உடனடியாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடமலைகுண்டு - வருசநாடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டு புறமும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தேனியில் விமர்சியாக நடந்தது தேனியில் செயல்பட்டு வரும் இந்து எழுச்சி முன்னணி அமைப்பு சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் செண்டா மேளம் முழங்க அரிசி கொம்பன் யானை முன் நின்று வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைக்க இந்த ஊர்வலமானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்று பாலம் வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
    1
    இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தேனியில் விமர்சியாக நடந்தது
தேனியில் செயல்பட்டு வரும் இந்து எழுச்சி முன்னணி அமைப்பு சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் செண்டா மேளம் முழங்க அரிசி கொம்பன் யானை முன் நின்று வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைக்க இந்த ஊர்வலமானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்று பாலம் வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். இக்கண்திருஸ்டி கணபதி இராஜகணபதியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது‌ போல் சிலை அமைந்திருந்தது. இன்று கணபதிக்கு சிறப்புபூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    2
    ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். 
இக்கண்திருஸ்டி கணபதி
இராஜகணபதியாய்  சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது‌ போல் சிலை அமைந்திருந்தது. 
இன்று கணபதிக்கு  சிறப்புபூஜைகள் செய்து  வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
    user_Elangovan
    Elangovan
    Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    21 hrs ago
  • வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டுபுறமும் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது கூட்டுகுடிநீர் திட்டத்திலிருந்து தங்கம்மாள்புரம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுத்து முழுவதுமாக எடுத்து கொள்வதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்புகளுக்கு குடிநீரே வழங்கப்படவில்லை என்றும் இதை கேட்டால் குடிநீர் எடுத்து விடும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களும், ஊராட்சி பணியாளர்களும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் குற்றம் சாட்டி தொடர்ச்சியாக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு காவல்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் குடிநீர் கேட்டு நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    1
    வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 
இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டுபுறமும் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது 
கூட்டுகுடிநீர் திட்டத்திலிருந்து தங்கம்மாள்புரம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை 
புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுத்து முழுவதுமாக எடுத்து கொள்வதால் 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்புகளுக்கு குடிநீரே வழங்கப்படவில்லை என்றும் இதை கேட்டால் குடிநீர் எடுத்து விடும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களும், ஊராட்சி பணியாளர்களும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் குற்றம் சாட்டி 
தொடர்ச்சியாக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 
சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு காவல்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்ததையடுத்து 
போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் 
குடிநீர் கேட்டு நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    45 min ago
  • ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம் திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    4
    ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில்
விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம்
திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது.  
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர்.  
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.