தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை: முதல்வர் விஜய் பேச வேண்டும்! திருப்பூர் சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில் கே.கனகராஜ் பேச்சு! தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை: முதல்வர் விஜய் பேச வேண்டும்! திருப்பூர் சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில் கே.கனகராஜ் பேச்சு! திருப்பூர், இடதுசாரி கட்சி ஊழியர்களை குறி வைத்து சுற்றறிக்கை அனுப்பி மிரட்டி அச்சுறுத்தப் பார்த்த பிரச்சனையில் தலைமைச் செயலாளர் சாய் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து திங்களன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேச வே்ண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் கூறினார். திருப்பூரில் சனிக்கிழமை மாநகராட்சி அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கே.கனகராஜ் கூறியதாவது: தமிழக வெற்றி கழகம் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரி மூன்று முறை சந்தித்தும் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. அவர்கள் ஆட்சி அமைக்க இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்த பிறகு ஆளுநர் மாளிகையில் 118 பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்த போதும், ஆளுநர் உடனடியாக பதில் சொல்லவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர், வெற்றி பெற்ற எங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க கடிதம் கொடுக்கும் வரை அங்கிருந்து செல்வதற்கு வாய்ப்பில்லை என்று சொன்ன பிறகு தான், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து ஆளுநர் கடிதம் கொடுத்தார். இந்த ஆட்சி அமைய ஆதரவு கொடுத்தது மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தால் தான் முதல்வர் விஜய் அரசு மே 10ஆம் தேதி பதவியேற்க முடிந்தது. போராட்டம் நடத்துவது என்பது அரசமைப்புச் சட்டம் சாதாரண மக்களுக்கு கொடுத்திருக்கும் அடிப்படை உரிமை. இது காலனி ஆட்சியை எதிர்த்து நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தால் கிடைத்தது. எங்கள் தோழர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு போன்றவர்கள் போராடித்தான் இது கிடைத்தது. சங்கரய்யா 8 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். இந்தப் போராட்டத்தினால் தான் இந்தியர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவிக்கு வர முடிந்தது. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உட்கார்ந்து இருக்கும் இருக்கை, எங்கள் கட்சி பங்கேற்ற சுதந்திரப் போராட்டத்தால் தான் கிடைத்தது. தலைமைச் செயலாளர், டிஜிபி என எந்த உயர் அதிகாரிகளாக இருந்தாலும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனாலும் இந்த அதிகார வர்க்கம் காலனி ஆட்சியைப் போல அடக்கி ஆளும் வேலையை செய்து கொண்டே இருக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகார வர்க்கம் அநியாயம், அத்துமீறல், தான்தோன்றித்தனத்துடன் செயல்படக் கூடாது. மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. மக்களின் உரிமையை நிலைநாட்டும் இயக்கமாக செங்கொடி இயக்கம் எப்போதும் இருக்கும். போராடுவது எங்கள் உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது. தலைமைச் செயலாளர் சாய்குமார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிமையாக செயல்படுகிறாரா? இந்தியாவின் தேசிய கட்சியின் ஊழியர்களை கண்காணிப்போம் என்று சொல்வது, அரசாங்கத்துக்கு தெரியாமல் நடக்கிறது என்றால் இந்த அரசாங்கம் நடக்கவில்லை என்று அர்த்தம். குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி மீதும், தலைமைச் செயலாளர் சாய் குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங் பரிவார் ஆட்களை அரசு நிர்வாகத்தில் நியமிப்பது சரியல்ல. ஜந்தர் மந்தர் போராட்டத்தை சீருடை இல்லாத போலீசாரை அனுப்பி அடக்கி ஒடுக்க பார்த்தார்கள். ஆனால் மோடி, அமித் ஷாவின் அடக்குமுறை செல்லுபடி ஆகவில்லை. அந்தப் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் பதவி விலக நேரிட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் ராணுவம், காவல்துறை ஆகியவற்றின் அடக்குமுறைகளை சந்தித்த இயக்கம் செங்கொடி இயக்கம். அதேபோல் எமர்ஜென்சி கால அடக்கமுறையையும் சந்தித்திருக்கிறோம். பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் அதை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றது இந்த இயக்கம். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு முயன்ற போதும் மக்கள் போராட்டம் நடத்தி அதை முறியடித்தோம். எனவே இந்தப் பூச்சாண்டி எங்களிடம் செல்லாது. போராடும் மாணவர்கள், இளைஞர்களை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக கையாண்டிருக்கிறார்கள். காவல்துறை மீது நாங்கள் வழக்கு போட்டால் அவர்கள் சீருடை, லத்தி, தொப்பி இல்லாமல் அலையும் நிலை ஏற்படும். அந்த நிலையை, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளை நாங்கள் அறிவோம். போராட்ட உரிமையை பாதுகாப்பதற்கு தெம்பும் திராணியும் எங்களிடம் உண்டு. திங்கள் கிழமை சட்டமன்றம் கூடும்போது முதலமைச்சர் இது குறித்து பேச வேண்டும். தலைமைச் செயலாளர், வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாள் போராட்டத்தோடு விட்டு விடுவோம் என்று நினைக்க வேண்டாம். திமுக ஆட்சியில் இருந்த போதும் எங்களுக்கு இரண்டு எம்எல்ஏக்கள் தான். சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பனிரெண்டு மணி நேர வேலை என்பதை திரும்பப் பெற வைத்தோம். சாம்சங் தொழிற்சங்க பதிவை போராடி வெற்றிப் பெற்றோம். இந்த அரசு, அதிகாரிகளை கட்டவிழ்த்து விடுவது பெருமை அல்ல. அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் சொல்வதற்கு ஆமாம் சாமி போடக்கூடாது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்... என்று மற்றவர்களைப் போல் சவால் விட மாட்டோம். ஆனால் செய்ய வேண்டியதை கட்டாயம் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வோம். இவ்வாறு கே.கனகராஜ் பேசினார்.
தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை: முதல்வர் விஜய் பேச வேண்டும்! திருப்பூர் சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில் கே.கனகராஜ் பேச்சு! தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை: முதல்வர் விஜய் பேச வேண்டும்! திருப்பூர் சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில் கே.கனகராஜ் பேச்சு! திருப்பூர், இடதுசாரி கட்சி ஊழியர்களை குறி வைத்து சுற்றறிக்கை அனுப்பி மிரட்டி அச்சுறுத்தப் பார்த்த பிரச்சனையில் தலைமைச் செயலாளர் சாய் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து திங்களன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேச வே்ண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் கூறினார். திருப்பூரில் சனிக்கிழமை மாநகராட்சி அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கே.கனகராஜ் கூறியதாவது: தமிழக வெற்றி கழகம் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரி மூன்று முறை சந்தித்தும் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. அவர்கள் ஆட்சி அமைக்க இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்த பிறகு ஆளுநர் மாளிகையில் 118 பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்த போதும், ஆளுநர் உடனடியாக பதில் சொல்லவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர், வெற்றி பெற்ற எங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க கடிதம் கொடுக்கும் வரை அங்கிருந்து செல்வதற்கு வாய்ப்பில்லை என்று சொன்ன பிறகு தான், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து ஆளுநர் கடிதம் கொடுத்தார். இந்த ஆட்சி அமைய ஆதரவு கொடுத்தது மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தால் தான் முதல்வர் விஜய் அரசு மே 10ஆம் தேதி பதவியேற்க முடிந்தது. போராட்டம் நடத்துவது என்பது அரசமைப்புச் சட்டம் சாதாரண மக்களுக்கு கொடுத்திருக்கும் அடிப்படை உரிமை. இது காலனி ஆட்சியை எதிர்த்து நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தால் கிடைத்தது. எங்கள் தோழர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு போன்றவர்கள் போராடித்தான் இது கிடைத்தது. சங்கரய்யா 8 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். இந்தப் போராட்டத்தினால் தான் இந்தியர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவிக்கு வர முடிந்தது. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உட்கார்ந்து இருக்கும் இருக்கை, எங்கள் கட்சி பங்கேற்ற சுதந்திரப் போராட்டத்தால் தான் கிடைத்தது. தலைமைச் செயலாளர், டிஜிபி என எந்த உயர் அதிகாரிகளாக இருந்தாலும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனாலும் இந்த அதிகார வர்க்கம் காலனி ஆட்சியைப் போல அடக்கி ஆளும் வேலையை செய்து கொண்டே இருக்கிறது. மக்கள் வரிப்பணத்தில்
சம்பளம் வாங்கும் அதிகார வர்க்கம் அநியாயம், அத்துமீறல், தான்தோன்றித்தனத்துடன் செயல்படக் கூடாது. மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. மக்களின் உரிமையை நிலைநாட்டும் இயக்கமாக செங்கொடி இயக்கம் எப்போதும் இருக்கும். போராடுவது எங்கள் உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது. தலைமைச் செயலாளர் சாய்குமார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிமையாக செயல்படுகிறாரா? இந்தியாவின் தேசிய கட்சியின் ஊழியர்களை கண்காணிப்போம் என்று சொல்வது, அரசாங்கத்துக்கு தெரியாமல் நடக்கிறது என்றால் இந்த அரசாங்கம் நடக்கவில்லை என்று அர்த்தம். குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி மீதும், தலைமைச் செயலாளர் சாய் குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங் பரிவார் ஆட்களை அரசு நிர்வாகத்தில் நியமிப்பது சரியல்ல. ஜந்தர் மந்தர் போராட்டத்தை சீருடை இல்லாத போலீசாரை அனுப்பி அடக்கி ஒடுக்க பார்த்தார்கள். ஆனால் மோடி, அமித் ஷாவின் அடக்குமுறை செல்லுபடி ஆகவில்லை. அந்தப் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் பதவி விலக நேரிட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் ராணுவம், காவல்துறை ஆகியவற்றின் அடக்குமுறைகளை சந்தித்த இயக்கம் செங்கொடி இயக்கம். அதேபோல் எமர்ஜென்சி கால அடக்கமுறையையும் சந்தித்திருக்கிறோம். பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் அதை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றது இந்த இயக்கம். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு முயன்ற போதும் மக்கள் போராட்டம் நடத்தி அதை முறியடித்தோம். எனவே இந்தப் பூச்சாண்டி எங்களிடம் செல்லாது. போராடும் மாணவர்கள், இளைஞர்களை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக கையாண்டிருக்கிறார்கள். காவல்துறை மீது நாங்கள் வழக்கு போட்டால் அவர்கள் சீருடை, லத்தி, தொப்பி இல்லாமல் அலையும் நிலை ஏற்படும். அந்த நிலையை, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளை நாங்கள் அறிவோம். போராட்ட உரிமையை பாதுகாப்பதற்கு தெம்பும் திராணியும் எங்களிடம் உண்டு. திங்கள் கிழமை சட்டமன்றம் கூடும்போது முதலமைச்சர் இது குறித்து பேச வேண்டும். தலைமைச் செயலாளர், வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாள் போராட்டத்தோடு விட்டு விடுவோம் என்று நினைக்க வேண்டாம். திமுக ஆட்சியில் இருந்த போதும் எங்களுக்கு இரண்டு எம்எல்ஏக்கள் தான். சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பனிரெண்டு மணி நேர வேலை என்பதை திரும்பப் பெற வைத்தோம். சாம்சங் தொழிற்சங்க பதிவை போராடி வெற்றிப் பெற்றோம். இந்த அரசு, அதிகாரிகளை கட்டவிழ்த்து விடுவது பெருமை அல்ல. அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் சொல்வதற்கு ஆமாம் சாமி போடக்கூடாது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்... என்று மற்றவர்களைப் போல் சவால் விட மாட்டோம். ஆனால் செய்ய வேண்டியதை கட்டாயம் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வோம். இவ்வாறு கே.கனகராஜ் பேசினார்.
- பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கோலாகலம்... திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது மேலும் இந்த நிகழ்வில். ஏராளமான, பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கோவை மாவட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள திவ்யா ஹாலில் ஆலோசனை கூட்டம் நடைபெ ற்றது இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்பாளர் பொறுப்பாளர் லோகநாதன் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி கட்சி வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கினார் இதில் மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- உதகையில் மீலாது விழா உதகை நகர மிலாது கமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர், நீலகிரி மாவட்டத்தில் இன்று உதகை நகர மிலாது கமிட்டியின் சார்பில் 1501 வது நபிகள் நாயகனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மிலாது விழா நிகழ்ச்சி உதகை பெரிய பள்ளிவாசல் முகப்பில் விழா நிகழ்ச்சியை மிலாடி கமிட்டியின் மாவட்டத் தலைவர் ஷாபாய் தலைமையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிருந்தா இ கா.ப., ஆகியோர் மதநல்லிணக்க பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர், நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஜாபித் சேட், உதகை நகராட்சி தலைவி வாணிஸ்வரி, நகரத் துணைத் தலைவர் ரவிக்குமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் அபு தயிர், மிலாது கமிட்டியின் நிர்வாகிகள் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்1
- திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- சுந்தரேஸ்வரர்சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடராஜர் பெருமானை தரிசித்துச் சென்றனர்* தேனி அருகே பங்களாமேடு பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி தினத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள் பாலிக்கும் நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நடராஜர் பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தூபம் காட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டிய பின்பு ஷோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நடராஜர் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டை கண்டு தரிசித்துச் சென்றனர்1
- சீப்பாலக்கோட்டை அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலக செயல்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீப்பாலகோட்டையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் வைத்தியநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வில் அங்கன்வாடி மையத்திற்கு வருகின்ற குழந்தைகள் வருகை குறித்தும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் நேரில் ஆய்வு செய்தார் அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அலுவலக செயல்பாடுகள் குறித்தும் அங்குள்ள பதிவேடுகள் குறித்தும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்1
- வாடகை உயர்வு கேட்டு ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் தேனி மாவட்டத்தில் வாடகை உயர்வு கேட்டு ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் 3 நாள் அடையாள வேலை நிறுத்தம். தேனி மாவட்ட ஹைட்ராலிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வாடகை உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி 3 நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள் விலை உயர்வால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, குறைந்தபட்ச வாடகை 1 மணி நேரத்திற்கு ரூ.1,500 வழங்க வேண்டும், 2 மணி நேரத்திற்குள்ளான வாடகையாக ரூ.4,500/ மற்றும் டிரைவர் படி ரூ. 800 சேர்த்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் இந்த வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர். ஆகஸ்ட் 26, 27 மற்றும் 28 என தேனி மாவட்டத்தில் நடைபெறும் இந்த 3 நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஜேசிபி, ஹிட்டாச்சி, கிரேன் உள்ளிட்ட ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் வாகன உரிமையாளர் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் தேனி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களுடன் கருவேல்நாயக்கன்பட்டியில் ஒன்றினைந்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் கூறுகையில், தேனி மாவட்டத்தில் மாவட்டத்தில் மட்டும் ஹைட்ராலிக் இயந்திரங்களான ஜேசிபி, கிரேன், ஹிட்டாச்சி என பல வகைகளில் 9 ஆயிரம் வாகனங்கள் உள்ளதாகவும், பாலம், கட்டிடங்கள் கட்டுவதற்கும் மட்டுமல்லாமல் விவசாய தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதனால், வாகன உரிமையாளர் மட்டுமல்லாமல் ஆப்பரேட்டர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த விலை உயர்வை அரசு உட்பட அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கோடு மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். பேட்டி - காந்திராஜன் ( மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - ஹைட்ராலிக் உரிமையாளர்கள் கூட்டமைப்பு)1
- குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.1