Shuru
Apke Nagar Ki App…
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர் லட்சுமணன் தாக்கல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த லட்சுமணன் செய்தியாளர்களை சந்திக்கையில் தாராபுரம் தனித் தொகுதியில் 50 ஆண்டு காலமாக அருந்ததிர் சமுதாய மக்களுக்கு எந்தவித வாய்ப்பும் வழங்கப்படவில்லை எனவும். தற்பொழுது தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த கட்சியான கம்யூனிஸ்ட் தனது முடிவினை தன்னிச்சையாக எடுத்து தாராபுரம் இடைத்தேர்தலில் களம் காண இருப்பதாக கூறினார். மேலும் தனது வெற்றியானது அருந்ததியர் சமுதாய மக்களின் வெற்றி எனவும். தன்னை வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தனது குரல் சட்டமன்றத்தில் மக்களுக்காக ஒலிக்கும் எனவும் கூறினார்.
Dpm news
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர் லட்சுமணன் தாக்கல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த லட்சுமணன் செய்தியாளர்களை சந்திக்கையில் தாராபுரம் தனித் தொகுதியில் 50 ஆண்டு காலமாக அருந்ததிர் சமுதாய மக்களுக்கு எந்தவித வாய்ப்பும் வழங்கப்படவில்லை எனவும். தற்பொழுது தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த கட்சியான கம்யூனிஸ்ட் தனது முடிவினை தன்னிச்சையாக எடுத்து தாராபுரம் இடைத்தேர்தலில் களம் காண இருப்பதாக கூறினார். மேலும் தனது வெற்றியானது அருந்ததியர் சமுதாய மக்களின் வெற்றி எனவும். தன்னை வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தனது குரல் சட்டமன்றத்தில் மக்களுக்காக ஒலிக்கும் எனவும் கூறினார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நரம்பியல் பிரிவினை நேரில் பார்வையிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது தேனி மாவட்டம் கம்பம். இந்த கம்பம் நகராட்சியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளா பகுதிகளில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளி நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். இதற்கிடையே பல ஆண்டுகளாக கம்பத்தில் நரம்பியல் தொடர்பான மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் நரம்பு தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர் இப்பகுதி மக்கள். மேலும் மாற்றுத்திறனாளிகள் இங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று நரம்பியல் மருத்துவம் பார்ப்பதில் மிகவும் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதால் கம்பத்தில் நரம்பியல் மருத்துவம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கம்பம் அரசு மருத்துவமனையில் மாதம் ஒருமுறை நரம்பியல் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று துவங்கப்பட்ட இந்த பிரிவினை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா நேரில் பார்வையிட்டு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சமூக நீதி நாளை முன்னிட்டு கம்பம் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பொதுமக்களுடன் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.இந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.1
- இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பாமக சார்பில் வீர வணக்கம். செப்டம்பர் 17 இட ஒதுக்கீடு போராட்டத்தில் என்னுயிர் நீர்த்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் பாட்டாளி பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட சார்பில் சுரேஷ் தலைமையில் கடந்த 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் சாலை மறியல் போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு மற்றும் 21 சமூகநீதிப் போராட்ட தியாகிகள் தங்களது இன்னுயிரை நீத்தனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சமூகநீதி நாளாகவும், தியாகிகள் நினைவு நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று கரூர் மாவட்ட மேற்கு பாட்டாளி மக்கள் கட்சி சுரேஷ் மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 21 தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மாவட்ட, நகர, ஒன்றிய பா.ம.க நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள் , பாஜகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி, வீரவணக்கத்தைச் செலுத்தினர்.1
- க.விலக்கு GHல் சிகிச்சைக்கு வருவோரிடம் பணம் வசூல் செய்பவர் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தேனி கலெக்டர் அறிவிப்பு தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் தேனி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர் அவ்வாறு சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளிடம் அன்புள்ள ஊழியர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு மூன்று நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இந்த குழுவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்பவர்கள் மீது புகார் அளிக்கலாம் என தேனி கலெக்டர் டாக்டர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்1
- தேனி மாவட்டம் முழுவதும் மழை... வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு... அணை நீர்மட்டமும் 41 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி தேனி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக இதுவரை 5 மாவட்டங்களின் நீர்ஆதாரமாக விளங்கும் வைகை அணை முன் எப்போதும் இல்லாத அளவில் அடியோடு வறண்டது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் திறக்கப்படும் முதல்போக பாசனத்திற்கான தண்ணீர் இதுவரையில் திறக்கப்படவே இல்லை. அதே நேரம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் மூலம் வைகை அணை சீராக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து பல மாதங்களுக்கு பிறகு அதிகரித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 260 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 608 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோல 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டமும் 41 அடியாக உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வருகிற 21ந்தேதி வரையில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இனிவரும் நாட்களில் வைகை அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேனி மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவது 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.1
- நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா1
- மணப்பாறையில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள் விழா தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் எம்எல்ஏ அவர்கள், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி அணி அமைப்பாளர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா வேட்பு மனு தாக்கல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடைத்தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவையும் தாராபுரம் ஒன்றாக நகராட்சி அந்தஸ்து பெற்றது எனவும் இன்றைக்கு கோவை பெரிய தொழில் நகரமாகவும் எண்ணற்ற வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் அடையாததையும் சுட்டிக்காட்டினார். மேலும் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்ற சத்தியபாமா வாக்களித்த மக்களை ஏமாற்றி தவெகவில் இணைந்ததாகவும் கூறினார். பரந்தூர் விமான நிலையம் அமைவதால் அப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் தரிசுநிலமாக மாறுமே தவிர தற்போது அப்பகுதியில் சிப்காட் அமைவதால் நிலத்தடி நீர் மாசு காற்று மாசு அப்பகுதியே அழியக்கூடிய சூழ்நிலை உருவாகும். அப்பகுதி மக்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக அலைய வேண்டிய நிலை உருவாகும் எனவும் கூறினார். மேலும் முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்றதால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் கூறினார்.1
- பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை தேனி மாவட்டம் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் இந்நிலையில் பெரியகுளம் பகுதியில் பெய்து வந்த நிலையில் இன்று பிற்பகல் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள தாமரைக்குளம், லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி, கைலாச பட்டி, சரத்துப்பட்டி, எ. புதுப்பட்டி, பங்களா பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு வெளுத்து வாங்கிய கனமழை பெய்துள்ளது தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்ததால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர் இதில் இன்று மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் பாஜக சார்பில் கரூரில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் முருகன் ஆலயத்தில் சிறப்பு பூஜை – 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் ஆலயத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1