logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா

5 hrs ago
user_DHINESH KUMAR
DHINESH KUMAR
Local News Reporter Namakkal, Tamil Nadu•
5 hrs ago

நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா

More news from தமிழ்நாடு and nearby areas
  • தொட்டியம் வழக்கறிஞர் சங்க விழாவில் சங்கத் தலைவர் கார்த்திக் முசிறி எம்எல்ஏ வை விக்னேஷிடம் புதிய நீதிமன்றம் கட்டிடம் கட்டி தர கோரிக்கை வைத்தார் திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர் சங்க முப்பெரும் விழா சங்கத் தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது விழாவில் பேசிய சங்கத் தலைவர் கார்த்தி முசிறி எம்எல்ஏ விக்னேஷிடம் நீதிமன்ற கட்டிடம் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர் நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    1
    தொட்டியம் வழக்கறிஞர் சங்க விழாவில் சங்கத் தலைவர் கார்த்திக் முசிறி எம்எல்ஏ வை விக்னேஷிடம் புதிய நீதிமன்றம் கட்டிடம் கட்டி தர கோரிக்கை வைத்தார்
திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர் சங்க முப்பெரும் விழா சங்கத் தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது விழாவில் பேசிய சங்கத் தலைவர் கார்த்தி முசிறி எம்எல்ஏ விக்னேஷிடம் நீதிமன்ற கட்டிடம் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர் நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஓட்டுனர் உரிமம் டிஜிட்டல் சேவையை துவக்கி வைத்த அமைச்சர் பார்த்திபன்! தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்ற விதியின் 110 கீழ் அறிவித்தபடி பொதுமக்கள் இனி தங்களுடைய வாகன பதிவு சான்றிதழ் மற்றும் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல தேவை இல்லை அதற்கு மாறாக டிஜிட்டல் சேவை மூலம் தங்களுடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்ததை தொடர்ந்து இன்று சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் இந்த டிஜிட்டல் சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஆவணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் லலீத் ஆதித்ய நீலம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    1
    ஓட்டுனர் உரிமம் டிஜிட்டல் சேவையை துவக்கி வைத்த அமைச்சர் பார்த்திபன்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்ற விதியின் 110 கீழ் அறிவித்தபடி பொதுமக்கள் இனி தங்களுடைய வாகன பதிவு சான்றிதழ் மற்றும் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல தேவை இல்லை அதற்கு மாறாக டிஜிட்டல் சேவை மூலம் தங்களுடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்ததை தொடர்ந்து இன்று சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் இந்த டிஜிட்டல் சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஆவணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர்  லலீத் ஆதித்ய நீலம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    12 hrs ago
  • தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ சிவசக்தி மீது புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்தை வீரகனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அரவிந்தன் மற்றும் நடத்துனர் சதீஷ் ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏ.டி.சி. அதிகாரி வெங்கடேஷ், அந்த தனியார் பேருந்தை வழிமறித்ததாகவும், அரசு பேருந்து சென்ற பின்னரே தனியார் பேருந்தை இயக்க வேண்டும் என கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டுனர் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  ஆத்தூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வந்து உள்ளார், அப்போது ஓட்டுநர் அரவிந்தனை சரமாரியாக தாக்கி உள்ளார் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகள் வெளியே செல்லும் வழித்தடத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் கூறுகையில், “எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திடீரென ஓட்டுநரை தாக்கி உள்ளார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாவட்ட எஸ் பி ககு புகார் அளிக்க உள்ளார் என்று தெரிவித்தனர். மேலும் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென தாக்கியதால் மனவேதனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்  தனியார் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு
    1
    தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ சிவசக்தி மீது புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை


ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்தை வீரகனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அரவிந்தன் மற்றும் நடத்துனர் சதீஷ் ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏ.டி.சி. அதிகாரி வெங்கடேஷ், அந்த தனியார் பேருந்தை வழிமறித்ததாகவும், அரசு பேருந்து சென்ற பின்னரே தனியார் பேருந்தை இயக்க வேண்டும் என கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டுனர் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  ஆத்தூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வந்து உள்ளார், அப்போது ஓட்டுநர் அரவிந்தனை சரமாரியாக தாக்கி உள்ளார் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகள் வெளியே செல்லும் வழித்தடத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் கூறுகையில், “எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திடீரென ஓட்டுநரை தாக்கி உள்ளார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாவட்ட எஸ் பி ககு புகார் அளிக்க உள்ளார் என்று தெரிவித்தனர்.
மேலும் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென தாக்கியதால் மனவேதனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்  தனியார் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • மணப்பாறையில் இரண்டாவது நாளாக நீடித்த சாலை மறியல் நிறைவு சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை செய்த வழக்கில் சமரசம்! ​திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சீட்டு நிறுவனப் பிரச்சனை காரணமாக விக்னேஸ்வரன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ​முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி முதல் நாளில் உறவினர்கள் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், இன்று 2-வது நாளாக மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. ​போராட்டத்திற்கான காரணம்: தற்கொலைக்குக் காரணமான இரண்டு நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சரியான முறையில் சேர்க்கப்படவில்லை எனக் கூறி, விக்னேஸ்வரனின் மனைவியும், அவருடைய குழந்தையும், உறவினர்களும் இன்று மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ​காவல்துறை விளக்கம் & முடிவு: சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கின் FIR நகலை உறவினர்களிடம் காண்பித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் மற்றும் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் குறித்து தெளிவுபடுத்தி தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். ​காவல்துறையின் விரிவான விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    1
    மணப்பாறையில் 
 இரண்டாவது நாளாக நீடித்த சாலை மறியல் நிறைவு சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை செய்த வழக்கில் சமரசம்!
​திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சீட்டு நிறுவனப் பிரச்சனை காரணமாக விக்னேஸ்வரன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
​முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி முதல் நாளில் உறவினர்கள் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், இன்று 2-வது நாளாக மீண்டும் போராட்டம் தொடர்ந்தது.
​போராட்டத்திற்கான காரணம்: தற்கொலைக்குக் காரணமான இரண்டு நபர்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சரியான முறையில் சேர்க்கப்படவில்லை எனக் கூறி, விக்னேஸ்வரனின் மனைவியும், அவருடைய குழந்தையும், உறவினர்களும் இன்று மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
​காவல்துறை விளக்கம் & முடிவு: சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கின் FIR நகலை உறவினர்களிடம் காண்பித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் மற்றும் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் குறித்து தெளிவுபடுத்தி தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.
​காவல்துறையின் விரிவான விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா வேட்பு மனு தாக்கல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடைத்தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவையும் தாராபுரம் ஒன்றாக நகராட்சி அந்தஸ்து பெற்றது எனவும் இன்றைக்கு கோவை பெரிய தொழில் நகரமாகவும் எண்ணற்ற வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் அடையாததையும் சுட்டிக்காட்டினார். மேலும் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்ற சத்தியபாமா வாக்களித்த மக்களை ஏமாற்றி தவெகவில் இணைந்ததாகவும் கூறினார். பரந்தூர் விமான நிலையம் அமைவதால் அப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் தரிசுநிலமாக மாறுமே தவிர தற்போது அப்பகுதியில் சிப்காட் அமைவதால் நிலத்தடி நீர் மாசு காற்று மாசு அப்பகுதியே அழியக்கூடிய சூழ்நிலை உருவாகும். அப்பகுதி மக்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக அலைய வேண்டிய நிலை உருவாகும் எனவும் கூறினார். மேலும் முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்றதால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் கூறினார்.
    1
    தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா வேட்பு மனு  தாக்கல் 
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடைத்தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து நாம் தமிழர் வேட்பாளர்  கார்த்திகா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவையும் தாராபுரம் ஒன்றாக நகராட்சி அந்தஸ்து பெற்றது எனவும் இன்றைக்கு கோவை பெரிய தொழில் நகரமாகவும் எண்ணற்ற வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தாராபுரம் தொகுதி 50 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் அடையாததையும் சுட்டிக்காட்டினார். மேலும் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்ற சத்தியபாமா வாக்களித்த மக்களை ஏமாற்றி தவெகவில் இணைந்ததாகவும் கூறினார். பரந்தூர் விமான நிலையம் அமைவதால் அப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் தரிசுநிலமாக மாறுமே தவிர தற்போது அப்பகுதியில் சிப்காட் அமைவதால் நிலத்தடி நீர் மாசு காற்று மாசு அப்பகுதியே அழியக்கூடிய சூழ்நிலை உருவாகும். அப்பகுதி மக்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக அலைய வேண்டிய  நிலை உருவாகும் எனவும் கூறினார். மேலும் முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்பேற்றதால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் கூறினார்.
    user_Dpm news
    Dpm news
    Photographer தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • சீலை பிள்ளையார் புத்தூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீலை பிள்ளையார் புதூர் காவேரி ஆற்றில் இன்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது காட்டுப்புத்தூர் ஸ்ரீராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் நாய்யநல உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று மூன்றாவது நாள் காவிரி ஆற்றில் பக்தர்கள் பூஜை செய்து விநாயகர் சிலையை கரைத்தனர்
    1
    சீலை பிள்ளையார் புத்தூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீலை பிள்ளையார் புதூர் காவேரி ஆற்றில் இன்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது காட்டுப்புத்தூர் ஸ்ரீராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் நாய்யநல உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று மூன்றாவது நாள் காவிரி ஆற்றில் பக்தர்கள் பூஜை செய்து விநாயகர் சிலையை கரைத்தனர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • வியாபாரிகளை மிரட்டும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்! சேலத்தில் பரபரப்பு... சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 57வது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடை உரிமையாளர்கள், மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் அப்பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் மாநகராட்சியில் உரிமம் பெற்று தருவதாக கூறி பல்லாயிரம் ரூபாய் ஒவ்வொரு கடைகளிலும் வசூல் செய்துள்ளதாகவும், ஆனால் தங்களுக்கு இதுவரை லைசென்ஸ் பெற்று தராமல் ஏமாற்றி வருகிறார் இது குறித்து அவரிடம் கேட்டால், என்னை பகைத்துக் கொண்டால் யாரும் கடை நடத்த முடியாது என மிரட்டி வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது எனவே மாநகராட்சி ஆணையாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.
    1
    வியாபாரிகளை மிரட்டும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்! சேலத்தில் பரபரப்பு...
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 57வது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடை உரிமையாளர்கள், மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் அப்பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் மாநகராட்சியில் உரிமம் பெற்று தருவதாக கூறி பல்லாயிரம் ரூபாய் ஒவ்வொரு கடைகளிலும் வசூல் செய்துள்ளதாகவும், ஆனால் தங்களுக்கு இதுவரை லைசென்ஸ் பெற்று தராமல் ஏமாற்றி வருகிறார் இது குறித்து அவரிடம் கேட்டால், என்னை பகைத்துக் கொண்டால் யாரும் கடை நடத்த முடியாது என மிரட்டி வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது எனவே மாநகராட்சி ஆணையாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    14 hrs ago
  • மணப்பாறையில் சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை: பங்குதாரர்களைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் ​திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சீட்டு நிறுவனப் பிரச்சினையில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ​சம்பவத்தின் பின்னணி: மணப்பாறை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் சீட்டு நிறுவனம் (Chit Fund) ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், நொச்சிமேட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் விக்னேஸ்வரன் திடீரெனத் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டார். சீட்டு நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் அதன் பங்குதாரர்களுடன் நிலவிய பிரச்சனை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. ​சாலை மறியல் போராட்டம்: விக்னேஸ்வரனின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விக்னேஸ்வரனின் தற்கொலைக்குக் காரணமான சீட்டு நிறுவனப் பங்குதாரர்களை உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன்புள்ள மணப்பாறை - விராலிமலை மாநில நெடுஞ்சாலையில் உறவினர்கள் திடீரெனச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ​போக்குவரத்து பாதிப்பு காவல்துறை பேச்சுவார்ததை இந்தத் திடீர் போராட்டத்தால் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். ​சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையேற்று உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    மணப்பாறையில் சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை: பங்குதாரர்களைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
​திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சீட்டு நிறுவனப் பிரச்சினையில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
​சம்பவத்தின் பின்னணி:
மணப்பாறை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் சீட்டு நிறுவனம் (Chit Fund) ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், நொச்சிமேட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் விக்னேஸ்வரன் திடீரெனத் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டார். சீட்டு நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் அதன் பங்குதாரர்களுடன் நிலவிய பிரச்சனை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
​சாலை மறியல் போராட்டம்:
விக்னேஸ்வரனின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விக்னேஸ்வரனின் தற்கொலைக்குக் காரணமான சீட்டு நிறுவனப் பங்குதாரர்களை உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன்புள்ள மணப்பாறை - விராலிமலை மாநில நெடுஞ்சாலையில் உறவினர்கள் திடீரெனச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
​போக்குவரத்து பாதிப்பு காவல்துறை பேச்சுவார்ததை
இந்தத் திடீர் போராட்டத்தால் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.
​சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையேற்று உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • துவரங்குறிச்சி அருகே முதியவர் வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழப்பு திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் அதிகாரம் அஞ்சல் சடவேலாம்பட்டி ஆண்டி(60). இவர் மனைவியுடன் வசித்து வரும் நிலையில், இறந்து போன நபரின் மனைவி சின்னம்மாள் என்பவரின் தம்பியின் மனைவி பழனியம்மாள் என்பவருக்கும் இடையில் நகை கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது . அது தொடர்பாக இறந்து போன நபர்,அவரது மனைவி சின்னம்மாள் மற்றும் வெள்ளையம்மாள் இவரது மருமகன் பழனிச்சாமி ஆகியோர் நகை கொடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் இறந்து போன நபர் துவரங்குச்சியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் இன்று சுமார் 3.30 மணிக்கு வீட்டிற்கு வந்து வீட்டின் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதையடுத்து நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தனது கணவரின் இறப்பிற்கு காரணம் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டி இறந்து போன நபர் மனைவி கொடுத்த புகார் மனுவை பெற்று நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நபரது பிரேதமானது மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
    1
    துவரங்குறிச்சி அருகே முதியவர் வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழப்பு 
திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் அதிகாரம் அஞ்சல் சடவேலாம்பட்டி ஆண்டி(60). 
இவர் மனைவியுடன் வசித்து வரும் நிலையில், இறந்து போன நபரின் மனைவி சின்னம்மாள் என்பவரின் தம்பியின் மனைவி பழனியம்மாள் என்பவருக்கும் இடையில் நகை கொடுக்கல் வாங்கல்  பிரச்சனை இருந்து வந்துள்ளது . அது தொடர்பாக  இறந்து போன நபர்,அவரது மனைவி சின்னம்மாள் மற்றும் வெள்ளையம்மாள் இவரது மருமகன் பழனிச்சாமி ஆகியோர் நகை கொடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் இறந்து போன நபர் துவரங்குச்சியில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் இன்று சுமார் 3.30 மணிக்கு வீட்டிற்கு  வந்து வீட்டின் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதையடுத்து நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தனது கணவரின் இறப்பிற்கு காரணம் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டி இறந்து போன நபர் மனைவி கொடுத்த புகார் மனுவை பெற்று நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த நபரது பிரேதமானது மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.