வியாபாரிகளை மிரட்டும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்! சேலத்தில் பரபரப்பு... சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 57வது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடை உரிமையாளர்கள், மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் அப்பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் மாநகராட்சியில் உரிமம் பெற்று தருவதாக கூறி பல்லாயிரம் ரூபாய் ஒவ்வொரு கடைகளிலும் வசூல் செய்துள்ளதாகவும், ஆனால் தங்களுக்கு இதுவரை லைசென்ஸ் பெற்று தராமல் ஏமாற்றி வருகிறார் இது குறித்து அவரிடம் கேட்டால், என்னை பகைத்துக் கொண்டால் யாரும் கடை நடத்த முடியாது என மிரட்டி வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது எனவே மாநகராட்சி ஆணையாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.
வியாபாரிகளை மிரட்டும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்! சேலத்தில் பரபரப்பு... சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 57வது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடை உரிமையாளர்கள், மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் அப்பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் மாநகராட்சியில் உரிமம் பெற்று தருவதாக கூறி பல்லாயிரம் ரூபாய் ஒவ்வொரு கடைகளிலும் வசூல் செய்துள்ளதாகவும், ஆனால் தங்களுக்கு இதுவரை லைசென்ஸ் பெற்று தராமல் ஏமாற்றி வருகிறார் இது குறித்து அவரிடம் கேட்டால், என்னை பகைத்துக் கொண்டால் யாரும் கடை நடத்த முடியாது என மிரட்டி வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது எனவே மாநகராட்சி ஆணையாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.
- வியாபாரிகளை மிரட்டும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்! சேலத்தில் பரபரப்பு... சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 57வது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடை உரிமையாளர்கள், மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் அப்பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் மாநகராட்சியில் உரிமம் பெற்று தருவதாக கூறி பல்லாயிரம் ரூபாய் ஒவ்வொரு கடைகளிலும் வசூல் செய்துள்ளதாகவும், ஆனால் தங்களுக்கு இதுவரை லைசென்ஸ் பெற்று தராமல் ஏமாற்றி வருகிறார் இது குறித்து அவரிடம் கேட்டால், என்னை பகைத்துக் கொண்டால் யாரும் கடை நடத்த முடியாது என மிரட்டி வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது எனவே மாநகராட்சி ஆணையாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.1
- ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.1
- ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... ராசிபுரம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....1
- தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ சிவசக்தி மீது புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்தை வீரகனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அரவிந்தன் மற்றும் நடத்துனர் சதீஷ் ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏ.டி.சி. அதிகாரி வெங்கடேஷ், அந்த தனியார் பேருந்தை வழிமறித்ததாகவும், அரசு பேருந்து சென்ற பின்னரே தனியார் பேருந்தை இயக்க வேண்டும் என கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டுனர் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வந்து உள்ளார், அப்போது ஓட்டுநர் அரவிந்தனை சரமாரியாக தாக்கி உள்ளார் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகள் வெளியே செல்லும் வழித்தடத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் கூறுகையில், “எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திடீரென ஓட்டுநரை தாக்கி உள்ளார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாவட்ட எஸ் பி ககு புகார் அளிக்க உள்ளார் என்று தெரிவித்தனர். மேலும் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென தாக்கியதால் மனவேதனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தனியார் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு1
- ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.1
- ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்! ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.1
- தூத்துக்குடி வ.உ.சி.துறை முகத்தில்புதிய சாதனை!335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள சரக்கு பெட்டகக் கப்பல் கையாளப்பட்டுள்ளது.! தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.1
- சேலத்தில் தனியார் நிறுவனத்திற்கு சென்ற ஆவின் பால்! சிக்கிய நபர்... சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது ஆவின் பால் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பால் நிலையத்தில் இருந்து ஏஜென்ட் ஒருவர் தனியார் நிறுவனத்திற்கு 500 லிட்டர் ஆவின் பாலை எடுத்துச் சென்றபோது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த செய்தியாளர்கள் பாலை எடுத்துச் சென்ற வாகனத்தை மடக்கிப்பிடித்து பாலை எடுத்துச் சென்ற நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்ததால் ஆவின் பால் மேல அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் மேலதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.1