logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள ராஜ் மஹாலில் அகில பாரத இந்து மகாசபாவின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருப்பரங்குன்றம் மலையில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த தீபமேற்றும் வழிபாட்டை மீண்டும் நடத்த வேண்டும் என்றும், இந்துக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரா. முருகேசன் ஜீ உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

3 hrs ago
user_N balu Nbalu
N balu Nbalu
Journalist Thoothukkudi, Tuticorin•
3 hrs ago
06e302eb-3578-4dbc-8a16-cd3e0de606dd

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள ராஜ் மஹாலில் அகில பாரத இந்து மகாசபாவின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருப்பரங்குன்றம் மலையில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த தீபமேற்றும் வழிபாட்டை மீண்டும் நடத்த வேண்டும் என்றும், இந்துக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரா. முருகேசன் ஜீ உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More news from Tuticorin and nearby areas
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    1
    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    15 min ago
  • தூத்துக்குடி மாநகராட்சி பாளை ரோட்டில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு அருகே, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மற்றும் அவர்களின் சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 'பிரண்ட்ஸ் காபி கபே' என்ற புதிய கடை தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய காபி கடையை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள் நேரில் கலந்துகொண்டு, நாடா வெட்டி முறைப்படி திறந்து வைத்துத் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இக்கடையின் திறப்பு விழா நிகழ்ச்சியில், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், சங்கத்தின் தலைவர் மருதப்பெருமாள், செயலாளர் ஜெயராஜ் மற்றும் பொருளாளர் செல்வகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவர்களுடன் சங்கத்தின் பல்வேறு முக்கிய உறுப்பினர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத் தன்னிறைவுக்கு வழிவகுக்கும் இந்தச் சிறப்பான முயற்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
    1
    தூத்துக்குடி மாநகராட்சி பாளை ரோட்டில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு அருகே, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மற்றும் அவர்களின் சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 'பிரண்ட்ஸ் காபி கபே' என்ற புதிய கடை தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய காபி கடையை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள் நேரில் கலந்துகொண்டு, நாடா வெட்டி முறைப்படி திறந்து வைத்துத் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இக்கடையின் திறப்பு விழா நிகழ்ச்சியில், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், சங்கத்தின் தலைவர் மருதப்பெருமாள், செயலாளர் ஜெயராஜ் மற்றும் பொருளாளர் செல்வகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவர்களுடன் சங்கத்தின் பல்வேறு முக்கிய உறுப்பினர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத் தன்னிறைவுக்கு வழிவகுக்கும் இந்தச் சிறப்பான முயற்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    24 min ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி செக்காரக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட நடுச்செக்காரக்குடி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சருமான பெ.மதன்ராஜா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் முன்னிலையில் ஏராளமானோர் தங்களை தவெக வில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து செக்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கறவை மாட்டுலோன்களை அமைச்சர் மதன்ராஜா வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளி ஒருவர் வழங்கிய மனுவை அமைச்சர் கனிவுடன் பெற்றுக் கொண்டார். பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மதன்ராஜா, கருங்குளம் யூனியனுக்கு உட்பட்ட ஐந்து ஊராட்சிகளில் குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும், பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என்றும் கூறினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், பொறுப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    3
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி செக்காரக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட நடுச்செக்காரக்குடி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சருமான பெ.மதன்ராஜா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் முன்னிலையில் ஏராளமானோர் தங்களை தவெக வில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து செக்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கறவை மாட்டுலோன்களை அமைச்சர் மதன்ராஜா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளி ஒருவர் வழங்கிய மனுவை அமைச்சர் கனிவுடன் பெற்றுக் கொண்டார். பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மதன்ராஜா, கருங்குளம் யூனியனுக்கு உட்பட்ட ஐந்து ஊராட்சிகளில் குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும், பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என்றும் கூறினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், பொறுப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    45 min ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று நடத்தப்பட்டது. இப்போட்டியில் பெரிய மாடு பிரிவில் 9 வண்டிகளும், சின்ன மாடு பிரிவில் 20 வண்டிகளும் பங்கேற்றன. இதில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்து கொண்டன. இப்போட்டிகளை தொழிலதிபர்கள் கோவை லட்சுமணன், ஐரவன்பட்டி முருகேசன், பொன்முருகன், தங்ககுமார், ராமச்சந்திரன், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி பாசறை கவியரசன் மற்றும் வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெரிய மாட்டு வண்டி பிரிவில் சீவலப்பேரி துர்காம்பிகா மாட்டு வண்டி முதல் பரிசான ரூபாய் ஒரு லட்சத்தை தட்டிச் சென்றது. நாகம்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், சிவகங்கை மாவட்டம் OA பில்டர் மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், ஆர் சி ஆர் சித்திரங்குடி மாட்டுவண்டி நான்காவது பரிசையும் பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் உடப்பன்பட்டி சுப சின்னையா காபி பார் மாட்டு வண்டி முதல் பரிசையும், துரைசாமிபுரம் ஆர் எஸ் சுரேஷ் குமார் அய்யங்கார் பேக்கரி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், ஆப்பனூர் நாகநாதன் பிரதர்ஸ் பால்பண்ணை மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், மோகன் சாமி குமார் மாட்டு வண்டி நான்காவது பரிசையும் வென்றன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று நடத்தப்பட்டது.

இப்போட்டியில் பெரிய மாடு பிரிவில் 9 வண்டிகளும், சின்ன மாடு பிரிவில் 20 வண்டிகளும் பங்கேற்றன. இதில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்து கொண்டன. இப்போட்டிகளை தொழிலதிபர்கள் கோவை லட்சுமணன், ஐரவன்பட்டி முருகேசன், பொன்முருகன், தங்ககுமார், ராமச்சந்திரன், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி பாசறை கவியரசன் மற்றும் வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பெரிய மாட்டு வண்டி பிரிவில் சீவலப்பேரி துர்காம்பிகா மாட்டு வண்டி முதல் பரிசான ரூபாய் ஒரு லட்சத்தை தட்டிச் சென்றது. நாகம்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், சிவகங்கை மாவட்டம் OA பில்டர் மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், ஆர் சி ஆர் சித்திரங்குடி மாட்டுவண்டி நான்காவது பரிசையும் பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் உடப்பன்பட்டி சுப சின்னையா காபி பார் மாட்டு வண்டி முதல் பரிசையும், துரைசாமிபுரம் ஆர் எஸ் சுரேஷ் குமார் அய்யங்கார் பேக்கரி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், ஆப்பனூர் நாகநாதன் பிரதர்ஸ் பால்பண்ணை மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், மோகன் சாமி குமார் மாட்டு வண்டி நான்காவது பரிசையும் வென்றன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையான சன்னதி தெருவில், பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இன்று விடுமுறை நாள் என்பதால் காலையிலிருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர். பேருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலையான சன்னதி தெருவில் இன்று காலை முதல் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி வருகிறது. அதிலும் குறிப்பாக மனித கழிவுகளும் சேர்ந்து வெளியேறுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். உள்ளூர் மக்களும் வெளியே சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், சன்னதி தெருவின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் ஆக்கிரமிப்புகளால் நிறைந்துள்ளன. இதன் காரணமாகவே, வேறு வழியின்றி பக்தர்கள் அந்த சாக்கடை கழிவுநீரிலேயே மிதித்து நடந்து சென்று முருகனை தரிசிக்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. எனவே, திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட ஆட்சி தலைவரும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து கழிவுநீரை அப்புறப்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    1
    முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையான சன்னதி தெருவில், பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இன்று விடுமுறை நாள் என்பதால் காலையிலிருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

பேருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலையான சன்னதி தெருவில் இன்று காலை முதல் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி வருகிறது. அதிலும் குறிப்பாக மனித கழிவுகளும் சேர்ந்து வெளியேறுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். உள்ளூர் மக்களும் வெளியே சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், சன்னதி தெருவின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் ஆக்கிரமிப்புகளால் நிறைந்துள்ளன. இதன் காரணமாகவே, வேறு வழியின்றி பக்தர்கள் அந்த சாக்கடை கழிவுநீரிலேயே மிதித்து நடந்து சென்று முருகனை தரிசிக்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.

எனவே, திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட ஆட்சி தலைவரும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து கழிவுநீரை அப்புறப்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    user_ThigazhYaazhan
    ThigazhYaazhan
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளம் ஊராட்சி பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதால், அந்த நீரை குடிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, ஊராட்சி மன்றம் உடனடியாக இதில் தலையிட்டு தங்கள் பகுதிக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வாகைகுளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளம் ஊராட்சி பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதால், அந்த நீரை குடிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, ஊராட்சி மன்றம் உடனடியாக இதில் தலையிட்டு தங்கள் பகுதிக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வாகைகுளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • பழனி முருகன் கோயிலில் துணிக்கடை விளம்பரத்திற்காக அருவருக்கத்தக்க வகையில் ரீல்ஸ் வீடியோ எடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த வேதனை அளிப்பதாக இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார். பணம் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள் என்ற காரணத்தால் எவருக்கும் சலுகை காட்டாமல், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தேவஸ்தான நிர்வாகமும் மற்றும் அரசும் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், பழனி தேவஸ்தானம் ரீல்ஸ் எடுப்பவர்களுக்கும், சினிமா நடிகைகளுக்கும் மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்குகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தேவஸ்தான நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    1
    பழனி முருகன் கோயிலில் துணிக்கடை விளம்பரத்திற்காக அருவருக்கத்தக்க வகையில் ரீல்ஸ் வீடியோ எடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த வேதனை அளிப்பதாக இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார். பணம் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள் என்ற காரணத்தால் எவருக்கும் சலுகை காட்டாமல், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தேவஸ்தான நிர்வாகமும் மற்றும் அரசும் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பழனி தேவஸ்தானம் ரீல்ஸ் எடுப்பவர்களுக்கும், சினிமா நடிகைகளுக்கும் மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்குகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தேவஸ்தான நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    2 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், 28 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஊமைத்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திக் (28) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி பலியானவர் ஆவார். இவருக்குத் திருமணமாகி வெறும் மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. கார்த்திக் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், 28 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஊமைத்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திக் (28) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி பலியானவர் ஆவார். இவருக்குத் திருமணமாகி வெறும் மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கார்த்திக் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.