logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், 28 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஊமைத்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திக் (28) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி பலியானவர் ஆவார். இவருக்குத் திருமணமாகி வெறும் மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. கார்த்திக் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 hrs ago
user_கோ.ரெங்கசாமி
கோ.ரெங்கசாமி
கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
4 hrs ago

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், 28 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஊமைத்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திக் (28) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி பலியானவர் ஆவார். இவருக்குத் திருமணமாகி வெறும் மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. கார்த்திக் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று நடத்தப்பட்டது. இப்போட்டியில் பெரிய மாடு பிரிவில் 9 வண்டிகளும், சின்ன மாடு பிரிவில் 20 வண்டிகளும் பங்கேற்றன. இதில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்து கொண்டன. இப்போட்டிகளை தொழிலதிபர்கள் கோவை லட்சுமணன், ஐரவன்பட்டி முருகேசன், பொன்முருகன், தங்ககுமார், ராமச்சந்திரன், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி பாசறை கவியரசன் மற்றும் வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெரிய மாட்டு வண்டி பிரிவில் சீவலப்பேரி துர்காம்பிகா மாட்டு வண்டி முதல் பரிசான ரூபாய் ஒரு லட்சத்தை தட்டிச் சென்றது. நாகம்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், சிவகங்கை மாவட்டம் OA பில்டர் மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், ஆர் சி ஆர் சித்திரங்குடி மாட்டுவண்டி நான்காவது பரிசையும் பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் உடப்பன்பட்டி சுப சின்னையா காபி பார் மாட்டு வண்டி முதல் பரிசையும், துரைசாமிபுரம் ஆர் எஸ் சுரேஷ் குமார் அய்யங்கார் பேக்கரி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், ஆப்பனூர் நாகநாதன் பிரதர்ஸ் பால்பண்ணை மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், மோகன் சாமி குமார் மாட்டு வண்டி நான்காவது பரிசையும் வென்றன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று நடத்தப்பட்டது.

இப்போட்டியில் பெரிய மாடு பிரிவில் 9 வண்டிகளும், சின்ன மாடு பிரிவில் 20 வண்டிகளும் பங்கேற்றன. இதில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்து கொண்டன. இப்போட்டிகளை தொழிலதிபர்கள் கோவை லட்சுமணன், ஐரவன்பட்டி முருகேசன், பொன்முருகன், தங்ககுமார், ராமச்சந்திரன், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி பாசறை கவியரசன் மற்றும் வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பெரிய மாட்டு வண்டி பிரிவில் சீவலப்பேரி துர்காம்பிகா மாட்டு வண்டி முதல் பரிசான ரூபாய் ஒரு லட்சத்தை தட்டிச் சென்றது. நாகம்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், சிவகங்கை மாவட்டம் OA பில்டர் மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், ஆர் சி ஆர் சித்திரங்குடி மாட்டுவண்டி நான்காவது பரிசையும் பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் உடப்பன்பட்டி சுப சின்னையா காபி பார் மாட்டு வண்டி முதல் பரிசையும், துரைசாமிபுரம் ஆர் எஸ் சுரேஷ் குமார் அய்யங்கார் பேக்கரி மாட்டு வண்டி இரண்டாவது பரிசையும், ஆப்பனூர் நாகநாதன் பிரதர்ஸ் பால்பண்ணை மாட்டு வண்டி மூன்றாவது பரிசையும், மோகன் சாமி குமார் மாட்டு வண்டி நான்காவது பரிசையும் வென்றன. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • விருதுநகர் ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அமிர்தக்குமார், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களை வாட்டி வதைக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 'உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில்' 10% பங்களிப்புத் தொகை பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், தேர்தல் காரணமாக அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் சாடினார். மேலும், கடந்த 01.04.2003-க்கு முன்பு நடைமுறையில் இருந்த 'பழைய ஓய்வூதிய திட்டத்தை' எந்தவொரு மாற்றுத் திட்டமும் இன்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் இறுதி இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) உயர்வை உடனே வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் மற்றும் தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார். தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே ஆவதால், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் முதன்மையான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவார் என்று முழுமையாக நம்புவதாக அமிர்தக்குமார் தெரிவித்தார். இதற்காக முதலமைச்சரை இருமுறை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதிகாரிகளுடன் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீராத பட்சத்தில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்டப் போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    1
    விருதுநகர் ஒய்.எம்.சி.ஏ ஹாலில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் அமிர்தக்குமார், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களை வாட்டி வதைக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 'உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில்' 10% பங்களிப்புத் தொகை பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், தேர்தல் காரணமாக அதுவும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் சாடினார். மேலும், கடந்த 01.04.2003-க்கு முன்பு நடைமுறையில் இருந்த 'பழைய ஓய்வூதிய திட்டத்தை' எந்தவொரு மாற்றுத் திட்டமும் இன்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் இறுதி இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) உயர்வை உடனே வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் மற்றும் தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, புதிய அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே ஆவதால், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் முதன்மையான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவார் என்று முழுமையாக நம்புவதாக அமிர்தக்குமார் தெரிவித்தார். இதற்காக முதலமைச்சரை இருமுறை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதிகாரிகளுடன் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீராத பட்சத்தில், சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்டப் போராட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    user_க.பாலசுப்பிரமணியன்
    க.பாலசுப்பிரமணியன்
    Photographer சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் மற்றும் மாவட்ட கலெக்டர் விஷுமகாஜன் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், ஜல்ஜீவன் மிஷன், பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், சுயஉதவிக் குழுக்களுக்கான நிதி உதவிகள், சீர்மிகு நகரத்திட்டம் (ஸ்மார்ட் சிட்டி), அம்ரூத் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள், மின்விநியோகத் திட்டங்கள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் மற்றும் பயிர்க்காப்பீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன. மாவட்டத்தில் தற்போது நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப்பணிகளை அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கனிமொழி எம்.பி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன், கருணாநிதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் மற்றும் அரசுத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் மற்றும் மாவட்ட கலெக்டர் விஷுமகாஜன் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், ஜல்ஜீவன் மிஷன், பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், சுயஉதவிக் குழுக்களுக்கான நிதி உதவிகள், சீர்மிகு நகரத்திட்டம் (ஸ்மார்ட் சிட்டி), அம்ரூத் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள், மின்விநியோகத் திட்டங்கள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் மற்றும் பயிர்க்காப்பீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன.

மாவட்டத்தில் தற்போது நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப்பணிகளை அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கனிமொழி எம்.பி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன், கருணாநிதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் மற்றும் அரசுத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    11 hrs ago
  • தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்றைய இரவு நிலவரப்படி தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால், அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றனர்.
    1
    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்றைய இரவு நிலவரப்படி தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால், அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றனர்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், 28 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஊமைத்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திக் (28) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி பலியானவர் ஆவார். இவருக்குத் திருமணமாகி வெறும் மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. கார்த்திக் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், 28 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் ஊமைத்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திக் (28) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி பலியானவர் ஆவார். இவருக்குத் திருமணமாகி வெறும் மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கார்த்திக் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.