Shuru
Apke Nagar Ki App…
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9சட்டபேரவைகளிலும் தேர்தல் விதிமீறல் புகார் எண்கள் அறிவிப்பு தமிழகமெங்கும் வரும் (ஏப்ரல் 23ந்தேதி) சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டும். இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்தல்,பொருட்கள், மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
Usha arun News
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9சட்டபேரவைகளிலும் தேர்தல் விதிமீறல் புகார் எண்கள் அறிவிப்பு தமிழகமெங்கும் வரும் (ஏப்ரல் 23ந்தேதி) சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டும். இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்தல்,பொருட்கள், மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
More news from Tamil Nadu and nearby areas
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- தமிழக வெற்றிக்கழக சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சபரி என்பவருக்கு ஆதரவாக கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா இன்று வடுகபட்டி பகுதியில் பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அப்போது தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை போதைப் பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர் தமிழகம் முழுவதும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதால் இளைஞர்கள் மாணவர்களின் மது பழக்கத்துக்கு அடிமையாகி அவர்கள் வாழ்க்கை சீர்குலைந்துள்ளது திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விசில் சின்னத்துக்கு வாக்களித்து தளபதி விஜய் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்1
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக, பிரபல நகைச்சுவை நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது குறித்து நடிகர் பெஞ்சமின் கூறும் போது அமைச்சர் ஈடுபட்ட தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது மருத்துவர்களின் தீவிர முயற்சியால் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முழுவதும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.1
- Post by சந்திரசேகர். D2
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது. வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.1
- மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அதே பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா ராணி வீரப்பன் திடீரென தனது ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியோ அல்லது பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவித்ததாகவோ கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வித்யா ராணியை அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (ஏப்.20) காலை அவர் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது தள்ளுவண்டி கடையில் வடை சுட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குகளை கேட்டார். உடன் திமுக பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்டசெயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் சக்திவேல் இன்று பெரியகுளம் பகுதிகளா உள்ள தண்டு பாளையம் பட்டாளம்மன் கோவில் அம்பேத்கர் நகர் வள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வசிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுவதால் தங்கள் வாக்குகளை பானை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என வாக்கு சேகரித்தார் மேலும் திமுக அரசின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்1
- சேலம் கோரிமேட்டில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு பாமக தலைவர் அன்புமணி, சேலம் வடக்கு தொகுதியில் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் உள்ள ராஜேந்திரன் இதுவரை இந்த தொகுதிக்கு என்ன செய்துள்ளார், கொள்ளையடிப்பவர்களுடன் கூட்டி வைத்துக் கொண்டு கமிஷன் வாங்கி அவர்களுக்கு ஆதரவாக தான் செயல்பட்டுக் கொண்டு உள்ளார். இந்தத் தொகுதி முன்னேற்றத்திற்காக இதுவரை எந்த நன்மையும் செய்யாத அவர், மறுபடியும் தேர்தலில் நிற்பதற்கு உங்களிடம் வாக்கு கேட்டு வந்தால் அவரை துரத்தி அடிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளது சேலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1