logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியாரும் ஒருங்கே அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிவமேளம் முழங்க, பக்தர்களின் 'சிவாய நம' கோஷம் விண்ணை எட்ட, அம்மையப்பன் திருக்கோவிலைச் சுற்றி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையப்பனை தரிசித்து வழிபட்டனர். வழிபாட்டின் நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷத்தையொட்டி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

1 hr ago
user_Murali
Murali
Salem, Tamil Nadu•
1 hr ago

தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியாரும் ஒருங்கே அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிவமேளம் முழங்க, பக்தர்களின் 'சிவாய நம' கோஷம் விண்ணை எட்ட, அம்மையப்பன் திருக்கோவிலைச் சுற்றி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையப்பனை தரிசித்து வழிபட்டனர். வழிபாட்டின் நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷத்தையொட்டி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ரோஷ்ணி (18) என்ற மாணவி, கடந்த மாதம் நீட் மறுதேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவ, மாணவிகள் தமிழகத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில், உயிரிழந்த மாணவி ரோஷ்ணியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்காமல் கல்வியைத் தனியாருக்கு தாரைவார்க்கும் வேலையை பாஜக அரசு செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார். இதற்காக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், கல்வி தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதால், தனியார் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 1.36 லட்சம் கோடியும், தமிழகத்தில் மட்டும் ரூ. 5 ஆயிரம் கோடியும் மோசடி நடைபெற்று வருவதாகவும், நீட் தேர்வால் தமிழகத்தில் மட்டும் இதுவரை 34 மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் பகிரங்கமாகச் சாடினார்.
    1
    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ரோஷ்ணி (18) என்ற மாணவி, கடந்த மாதம் நீட் மறுதேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவ, மாணவிகள் தமிழகத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில், உயிரிழந்த மாணவி ரோஷ்ணியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்காமல் கல்வியைத் தனியாருக்கு தாரைவார்க்கும் வேலையை பாஜக அரசு செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார். இதற்காக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், கல்வி தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதால், தனியார் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ. 1.36 லட்சம் கோடியும், தமிழகத்தில் மட்டும் ரூ. 5 ஆயிரம் கோடியும் மோசடி நடைபெற்று வருவதாகவும், நீட் தேர்வால் தமிழகத்தில் மட்டும் இதுவரை 34 மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் பகிரங்கமாகச் சாடினார்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் மு. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் தோழர் செ. முருகேசன் சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் தோழர் ஜெ. ராஜா நிறைவுரையாற்றி, ஒன்றிப்பின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் எ. குணசுந்தரி நன்றியுரை வழங்கிய இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் நிலஅளவை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் மு. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் தோழர் செ. முருகேசன் சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் தோழர் ஜெ. ராஜா நிறைவுரையாற்றி, ஒன்றிப்பின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் எ. குணசுந்தரி நன்றியுரை வழங்கிய இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் நிலஅளவை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள முசிறி எம்எல்ஏ அலுவலகத்தில், முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தலைமையில் காவேரி ஒன்றிய நகர செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முசிறி, தாப்பேட்டை, மேட்டுப்பாளையம், தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், பொதுமக்களிடம் குறைகளையும் எம்எல்ஏ விக்னேஷ் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின் போது கட்சி நிர்வாகிகள் பலர் அவருடன் உடனிருந்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள முசிறி எம்எல்ஏ அலுவலகத்தில், முசிறி எம்எல்ஏ விக்னேஷ் தலைமையில் காவேரி ஒன்றிய நகர செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முசிறி, தாப்பேட்டை, மேட்டுப்பாளையம், தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், பொதுமக்களிடம் குறைகளையும் எம்எல்ஏ விக்னேஷ் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின் போது கட்சி நிர்வாகிகள் பலர் அவருடன் உடனிருந்தனர்.
    user_க. சுந்தரேசன்
    க. சுந்தரேசன்
    தொட்டியம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில் திருவிழா இன்றுடன் தொடங்குவதையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இவ்விழாவையொட்டி, மூலவர் மதுரகாளியம்மன், விநாயகர், முருகன் மற்றும் கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டன. இந்தத் திருவிழா பூஜையில் காட்டுப்புத்தூர், காந்திநகர், கணபதிபாளையம், சீதப்பட்டி மற்றும் தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் கோவில் திருவிழா இன்றுடன் தொடங்குவதையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இவ்விழாவையொட்டி, மூலவர் மதுரகாளியம்மன், விநாயகர், முருகன் மற்றும் கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டன.

இந்தத் திருவிழா பூஜையில் காட்டுப்புத்தூர், காந்திநகர், கணபதிபாளையம், சீதப்பட்டி மற்றும் தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    user_Kumar kumar
    Kumar kumar
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி பகுதியில் தங்களது கண் முன்பாகவே தங்களின் வீடு இடிக்கப்படுவதைக் கண்டு மக்கள் கதறி அழுது தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது சொந்த வீடு தங்களது கண் முன்னாடியே இப்படி இடிக்கப்படுகிறதே என்று மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது தங்களது பெருந்துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
    1
    திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி பகுதியில் தங்களது கண் முன்பாகவே தங்களின் வீடு இடிக்கப்படுவதைக் கண்டு மக்கள் கதறி அழுது தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது சொந்த வீடு தங்களது கண் முன்னாடியே இப்படி இடிக்கப்படுகிறதே என்று மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது தங்களது பெருந்துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
    user_Mohanraj
    Mohanraj
    Home help Musiri, Tiruchirappalli•
    12 hrs ago
  • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சி பூமாரியம்மன் கோவில் அருகே இன்று அதிகாலை கரும்பு ஆலைக்கு ரப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் மின்கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தும் லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டார கரும்பு ஆலைகளில் வெல்லம் காய்ச்சுவதற்காக நச்சுத்தன்மை வாய்ந்த ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செருப்பு கழிவுகள் பயன்படுத்தப்படுவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தினமும் லோடு லோடாக செருப்பு கழிவுகள் ஏற்றிச் செல்லப்படும் அவல நிலை தொடர்கிறது. வெல்லம் தயாரிக்கும் போது இந்த செருப்பு கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று கடுமையாக மாசுபடுகிறது. இதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே பெரும் வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
    1
    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சி பூமாரியம்மன் கோவில் அருகே இன்று அதிகாலை கரும்பு ஆலைக்கு ரப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் மின்கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தும் லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டார கரும்பு ஆலைகளில் வெல்லம் காய்ச்சுவதற்காக நச்சுத்தன்மை வாய்ந்த ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செருப்பு கழிவுகள் பயன்படுத்தப்படுவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தினமும் லோடு லோடாக செருப்பு கழிவுகள் ஏற்றிச் செல்லப்படும் அவல நிலை தொடர்கிறது. வெல்லம் தயாரிக்கும் போது இந்த செருப்பு கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று கடுமையாக மாசுபடுகிறது. இதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே பெரும் வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
    user_Murali
    Murali
    Salem, Tamil Nadu•
    1 hr ago
  • கரூர் மாவட்டம் கோவிந்தபாளையத்தில் செந்தில்குமரன் என்பவர் நடத்தி வரும் "பீமா கோச்" என்ற பேருந்து கட்டும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது, அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த சிலர் மது அருந்திவிட்டு, தாங்கள் பயன்படுத்திய வாட்டர் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்த இடத்தில் தீ வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தீ வேகமாகப் பரவி தொழிற்சாலையிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    கரூர் மாவட்டம் கோவிந்தபாளையத்தில் செந்தில்குமரன் என்பவர் நடத்தி வரும் "பீமா கோச்" என்ற பேருந்து கட்டும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது, அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த சிலர் மது அருந்திவிட்டு, தாங்கள் பயன்படுத்திய வாட்டர் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்த இடத்தில் தீ வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தீ வேகமாகப் பரவி தொழிற்சாலையிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாலம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீது திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக மொரப்பூர் நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், தற்போது இக்கோயில் சிதிலமடைந்து, விளக்கேற்றக் கூட பணம் இல்லாமல், மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து சமய அறநிலையத்துறை கட்டிடம்' என்பதற்கான பெயர்ப்பலகை இல்லாதது குறித்து இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும், கோயில் நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படுகிறதா என்றும், புதிய கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்றும் அவர் கேட்டறிந்தார். இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை, நிலப் பிரச்சனை எனக் கூறி போலீசார் நிராகரித்துள்ளனர். இந்த புகாரை உதாசீனம் செய்யும் வகையில் மனு நிராகரிக்கப்பட்டதால், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    1
    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாலம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீது திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக மொரப்பூர் நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், தற்போது இக்கோயில் சிதிலமடைந்து, விளக்கேற்றக் கூட பணம் இல்லாமல், மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து சமய அறநிலையத்துறை கட்டிடம்' என்பதற்கான பெயர்ப்பலகை இல்லாதது குறித்து இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும், கோயில் நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படுகிறதா என்றும், புதிய கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்றும் அவர் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை, நிலப் பிரச்சனை எனக் கூறி போலீசார் நிராகரித்துள்ளனர். இந்த புகாரை உதாசீனம் செய்யும் வகையில் மனு நிராகரிக்கப்பட்டதால், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில், ஜூலை 12 ஞாயிற்றுக்கிழமையான இன்று காசி விஸ்வநாதர், சமேத விசாலாட்சி அம்மையார் மற்றும் நந்தி பகவானுக்குப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில், அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்ட பின்னர், மாலை அணிவித்து, உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து, தூப தீபம் காட்டி வழிபாடு செய்யப்பட்டது. இதில் திரளாக வருகை தந்த பக்தர்கள், நந்தி பகவானை வணங்கி அவரது அருள் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து அங்கு வந்திருந்தவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில், ஜூலை 12 ஞாயிற்றுக்கிழமையான இன்று காசி விஸ்வநாதர், சமேத விசாலாட்சி அம்மையார் மற்றும் நந்தி பகவானுக்குப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில், அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்ட பின்னர், மாலை அணிவித்து, உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து, தூப தீபம் காட்டி வழிபாடு செய்யப்பட்டது. இதில் திரளாக வருகை தந்த பக்தர்கள், நந்தி பகவானை வணங்கி அவரது அருள் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து அங்கு வந்திருந்தவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_USHA INDU
    USHA INDU
    Taxi Driver ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.