முதல் நாளிலே முதல்வர் விஜய்க்கு தங்களது " ரியாக்ஷனை " வெளிப்படுத்திய இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெறுவதை தவெக உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று (மே 10) வெளியிட்டுள்ள அறிக்கையில்,, “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப் பெரும் கட்சியாக வந்த தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வந்தார். குறுக்கு வழியில் ஆட்சியமைக்க பல்வேறு வழிகளில் நடந்த முயற்சிகளை முறியடிக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வெற்றி பெற்ற, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் கலந்தாலோசித்து வழங்கிய ஆதரவின் அடிப்படையில் இன்று (10.05.2026) தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அரசின் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு, வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும். ‘வந்தேமாதரம்’ ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் இந்தத் தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது. நாளை (11.05.2026) சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக கூடும் சட்டப் பேரவைக் கூட்டத்திலும், அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப் பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், தற்காலிக பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்கிறது.”என்று கூறப்பட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விடுதலை சிறுத்தைகளும் முதல்வர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் தமிழக வெற்றி கழகம் எந்த தவறு செய்தாலும் தட்டிக் கேட்க தயங்க மாட்டார்கள் கண்டனம் முழங்க தவற மாட்டார்கள் தெருத்தெருவாக கூட்டங்கள் நடத்தி முதல்வர் விதையின் தவறுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவார்கள்.
முதல் நாளிலே முதல்வர் விஜய்க்கு தங்களது " ரியாக்ஷனை " வெளிப்படுத்திய இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெறுவதை தவெக உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று (மே 10) வெளியிட்டுள்ள அறிக்கையில்,, “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப் பெரும் கட்சியாக வந்த தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வந்தார். குறுக்கு வழியில் ஆட்சியமைக்க பல்வேறு வழிகளில் நடந்த முயற்சிகளை முறியடிக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வெற்றி பெற்ற, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் கலந்தாலோசித்து வழங்கிய ஆதரவின் அடிப்படையில் இன்று (10.05.2026) தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அரசின் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு, வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு
இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும். ‘வந்தேமாதரம்’ ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் இந்தத் தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது. நாளை (11.05.2026) சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக கூடும் சட்டப் பேரவைக் கூட்டத்திலும், அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப் பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், தற்காலிக பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்கிறது.”என்று கூறப்பட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விடுதலை சிறுத்தைகளும் முதல்வர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் தமிழக வெற்றி கழகம் எந்த தவறு செய்தாலும் தட்டிக் கேட்க தயங்க மாட்டார்கள் கண்டனம் முழங்க தவற மாட்டார்கள் தெருத்தெருவாக கூட்டங்கள் நடத்தி முதல்வர் விதையின் தவறுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவார்கள்.
- காரியாபட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம் தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். முக்குரோட்டில் தொடங்கிய பேரணியில் மேளதாளங்களுடன் வந்த தொண்டர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.1
- தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.2
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதை வரவேற்று இனிப்புகள் வழங்கி, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- 2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது *2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது* *4 நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடமும், மதுரை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது* தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் 2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்றது தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது இன்று 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்று முடிந்தது இந்த போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு வயது வாரியாக பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி முதலாவது இடம் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றது, அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது தொடர்ந்து இரண்டாம் இடத்தில் காஞ்சிபுரம் அணியும் மற்றும் மூன்றாம் இடத்தில் மதுரை அணியும் வெற்றி பெற்றது போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுச் சான்றிதல் வழங்கப்பட்டது இந்த போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். இதனைக் கொண்டாடும் விதமாக, பெரியகுளம் பகுதியில் வெற்றிக் கழகத்தினர் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.1
- இலுப்பூரில் சிலம்ப பஞ்சபூதா உலக சாதனைக நிகழ்ச்சி நடந்தது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சிலம்பத்தில் பஞ்சபூதா உலக சாதனைகள் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியை இலுப்பூர் டிஸ்பி திவ்யா, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார் இதில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியாக 5 கிலோமீட்டர் நடந்தே சென்று சிலம்பம் சுற்றுதல் 2 மணி நேரம் தொடர்ந்து நின்ற நிலையில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்1
- அறிந்து_கொள்வோம்Vsவாழ்ந்து_காட்டுவோம் !!! கேட்பதை தெளிவாக கேட்போம் !!!1
- ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தமிழக வெற்றிக்கழக கட்சியினர் கொண்டாட்டம் *தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றதை வரவேற்று - ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தமிழக வெற்றிக்கழக கட்சியினர் கொண்டாட்டம்* 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டதை வரவேற்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.ஆண்டிப்பட்டி பேரூர் கழக செயலாளர் சின்னராசா தலைமையில் பட்டாசு வெடித்து சாலையில் நடந்து சென்ற மற்றும் பேருந்துகளில் பயணிகளாக சென்ற பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜய் வாழ்க என்றும் தமிழக வெற்றிக்கழகம் வாழ்க என்றும் கோஷம் எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1