Shuru
Apke Nagar Ki App…
வாடிப்பட்டியில் தி.மு.க.கூட்டனி சார்பாக மைய அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று காலை வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் தி.மு.க. கூட்டணி சார்பாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நகர் செயலாளர் சேர்மன் .மு.பால்பாண்டி மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் மற்றும் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடது கம்னியூஸ்ட் மற்றும் கூட்டணியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
தங்க சுரேஷ்
வாடிப்பட்டியில் தி.மு.க.கூட்டனி சார்பாக மைய அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று காலை வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் தி.மு.க. கூட்டணி சார்பாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நகர் செயலாளர் சேர்மன் .மு.பால்பாண்டி மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் மற்றும் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடது கம்னியூஸ்ட் மற்றும் கூட்டணியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- இன்று காலை வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் தி.மு.க. கூட்டணி சார்பாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நகர் செயலாளர் சேர்மன் .மு.பால்பாண்டி மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் மற்றும் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடது கம்னியூஸ்ட் மற்றும் கூட்டணியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்1
- மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல் மதுரை, மார்ச் 16 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.3
- *சக்கிமங்கலத்தில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து - 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்* மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சியில் மதுரை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது. குடோன் உரிமையாளர் சக்தி வெளியூர் சென்றிருந்த நிலையில் அருகில் வயல்வெளியில் எரிந்து கொண்டிருந்த தீ ஆனது காற்றுக்கு மளமளவென பரவி குடோனில் பற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக பற்றி எரிந்த தீ குடோன் முழுவதுமாக எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்தது. இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் உத்தரவின்படிசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வெங்கடேசன், அசோக்குமார் மற்றும் SSO கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நான்கிருக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளை வரவைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குடவுன் முழுவதும் எரிந்து தீக்கிரையாகி விட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. எரிந்த பொருட்களின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என குடோன் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் முகமது இஸ்ரத் சார்பு ஆய்வாளர்கள் மணிமாறன் தமிமுன்அன்சாரி கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் பாபு வருவாய் ஆய்வாளர் வீரசெழியன் சத்தியமங்கலம் ஊராட்சி செயலாளர் திருமூர்த்தி தலையாரி துரைராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து சுலைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்4
- திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.1
- தேர்தல் நடைமுறைஅமல் -பொதுமக்கள் மனுக்கள் வாங்க மனுப் பெட்டி ரெடி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதுவழக்கம். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் தேர்தல் விதிமுறை உள்ளவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள மனு பெட்டியில் தங்கள் மனுக்களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன1
- Post by Natarajan Pitchaimani1
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவிடுகின்றனர் அதன் ஒரு பகுதியாக மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் டோல்கேட்டில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தில் வந்த பறக்கும் படை அலுவலர் ராஜாராம் தலைமையில் இரண்டு உதவி அலுவலர்கள் ஒரு வீடியோ பதிவாளர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அணியினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேனியில் இருந்து மதுரை செல்லும் இருசக்கர வாகனம் கார் சரக்கு வாகனம் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி காருக்குள்ளாகவும் காரின் பின்புற டிக்கியிலும் காரில் உள்ளவர்களின் பைகளிலும் தேர்தல் விதிமுறைப்படி ஐம்பதாயிரம் மேற்பட்ட ரொக்க பணம் மேலும் 10,000 மேற்பட்ட பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர் . இதேபோன்று ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளின் மூன்று அணிகளாக பறக்கும் படையினர் தீவிர சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து இன்று பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்1