Shuru
Apke Nagar Ki App…
கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி புத்தூர் பகுதியில் வசிக்கும் 58 வயதுடைய காந்தியின் மகன் விஸ்வநாதன் (29), ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கலெக்சன் ஏஜெண்ட்டாகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வேலைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற அவர், மாலையாகியும் வீடு திரும்பவில்லை. விஸ்வநாதன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எனினும், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Selva
கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி புத்தூர் பகுதியில் வசிக்கும் 58 வயதுடைய காந்தியின் மகன் விஸ்வநாதன் (29), ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கலெக்சன் ஏஜெண்ட்டாகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வேலைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற அவர், மாலையாகியும் வீடு திரும்பவில்லை. விஸ்வநாதன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எனினும், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அமைந்துள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அபரிமிதமாக அதிகரித்துள்ளது. விடுமுறை தினமான இன்று, கல்வராயன் மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்லாமல், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்தனர். நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் குளித்து, இயற்கை அழகை முழுமையாக ரசித்தனர். நீர்வரத்து அதிகரித்திருப்பதால், அருவிப் பகுதி கண்கவர் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இதனால் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. குளிர்ச்சியான காலநிலை மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த சூழலில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட்டு, இனிமையான அனுபவத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பாதுகாப்பான முறையில் குளிக்க வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.1
- நாமக்கல் மாவட்டத்தில் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட மதுபாலன் ஐஏஎஸ் அவர்கள் இன்று, மே 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது பதவியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். பதவி ஏற்புக்குப் பின்னர், அவர் பத்திரிகையாளர்களுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.1
- தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான இலவச கைப்பந்து பயிற்சி முகாம் கடந்த 4ஆம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. கோடைக்கால சிறப்புப் பயிற்சியாக நடைபெற்ற இந்த முகாம் தற்போது நிறைவடைந்துள்ளது. பயிற்சி நிறைவு விழாவானது மாவட்ட விளையாட்டு மைதானத்திலேயே நடைபெற்றது. இதில் கைப்பந்து கழக மாவட்டச் செயலாளர் தங்கராஜ் பயிற்சி குறித்துப் பேசினார். இணைச் செயலாளர் நிர்மல்குமார் முன்னிலை வகித்தார். தலைவர் M.G. சேகர், அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் மற்றும் கைப்பந்து கழகத் தலைவர் பூக்கடை ரவி ஆகியோர் தலைமை தாங்கி, மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் பொருளாளர் ஜெயபால் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிறைவு விழாவில் ஜெகநாதன், ஜெயராமன், சௌந்தர்ராஜன், மணிவண்ணன், வழக்கறிஞர் அசோக், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், பார்த்திபன், வணங்காமுடி, தனபால், ராம்குமார், பிரபு, மாது, மோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.1
- நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக நடைபெறும் நாட்டுக்கோழி சந்தை, இன்று (மே 31) நடைபெற்றது. இந்த சந்தையில் கோழிகளின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்தது. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் பங்கேற்ற இந்த சந்தையில், ஒரு நாட்டுக்கோழி ₹480 முதல் ₹1,500 வரை விற்பனையானது. இன்று மொத்தமாக ₹4.20 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.1
- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டில் உள்ள விண் நகரில் கடந்த மூன்று மாதங்களாக பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து செல்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக பொதுமக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.2
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த தாதகவுண்டம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ புது மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.1
- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மத்திய ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில், ஊத்தங்கரை ஒன்றியம் நொச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உடலுயிர் நல மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இளையராஜா துவக்கி வைத்தார். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை பூவரசன் அஜய், பாலமுருகேசன், அருண், அனிதா ஆகியோர் செய்திருந்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட இணைச் செயலாளர் தாமோதரன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ராமதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமர்நாத், அரசல், சிவா உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த முகாம் மூலம் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் தேர் திருவிழாவின்போது, இன்று மே 31 காலை 10:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஹர்ஷவர்தன் (18) என்ற இளைஞர் உயிரிழந்தார். தேரின் சக்கரத்திற்கும் அருகில் இருந்த சுவற்றிக்கும் இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டதால் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார். இதே விபத்தில் சஷ்டிகன் (19) என்ற மற்றொரு இளைஞருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த ஹர்ஷவர்தனின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.1