logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான இலவச கைப்பந்து பயிற்சி முகாம் கடந்த 4ஆம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. கோடைக்கால சிறப்புப் பயிற்சியாக நடைபெற்ற இந்த முகாம் தற்போது நிறைவடைந்துள்ளது. பயிற்சி நிறைவு விழாவானது மாவட்ட விளையாட்டு மைதானத்திலேயே நடைபெற்றது. இதில் கைப்பந்து கழக மாவட்டச் செயலாளர் தங்கராஜ் பயிற்சி குறித்துப் பேசினார். இணைச் செயலாளர் நிர்மல்குமார் முன்னிலை வகித்தார். தலைவர் M.G. சேகர், அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் மற்றும் கைப்பந்து கழகத் தலைவர் பூக்கடை ரவி ஆகியோர் தலைமை தாங்கி, மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் பொருளாளர் ஜெயபால் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிறைவு விழாவில் ஜெகநாதன், ஜெயராமன், சௌந்தர்ராஜன், மணிவண்ணன், வழக்கறிஞர் அசோக், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், பார்த்திபன், வணங்காமுடி, தனபால், ராம்குமார், பிரபு, மாது, மோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

1 hr ago
user_Periyasamy
Periyasamy
பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
1 hr ago

தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான இலவச கைப்பந்து பயிற்சி முகாம் கடந்த 4ஆம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. கோடைக்கால சிறப்புப் பயிற்சியாக நடைபெற்ற இந்த முகாம் தற்போது நிறைவடைந்துள்ளது. பயிற்சி நிறைவு விழாவானது மாவட்ட விளையாட்டு மைதானத்திலேயே நடைபெற்றது. இதில் கைப்பந்து கழக மாவட்டச் செயலாளர் தங்கராஜ் பயிற்சி குறித்துப் பேசினார். இணைச் செயலாளர் நிர்மல்குமார் முன்னிலை வகித்தார். தலைவர் M.G. சேகர், அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் மற்றும் கைப்பந்து கழகத் தலைவர் பூக்கடை ரவி ஆகியோர் தலைமை தாங்கி, மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் பொருளாளர் ஜெயபால் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிறைவு விழாவில் ஜெகநாதன், ஜெயராமன், சௌந்தர்ராஜன், மணிவண்ணன், வழக்கறிஞர் அசோக், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், பார்த்திபன், வணங்காமுடி, தனபால், ராம்குமார், பிரபு, மாது, மோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான இலவச கைப்பந்து பயிற்சி முகாம் கடந்த 4ஆம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. கோடைக்கால சிறப்புப் பயிற்சியாக நடைபெற்ற இந்த முகாம் தற்போது நிறைவடைந்துள்ளது. பயிற்சி நிறைவு விழாவானது மாவட்ட விளையாட்டு மைதானத்திலேயே நடைபெற்றது. இதில் கைப்பந்து கழக மாவட்டச் செயலாளர் தங்கராஜ் பயிற்சி குறித்துப் பேசினார். இணைச் செயலாளர் நிர்மல்குமார் முன்னிலை வகித்தார். தலைவர் M.G. சேகர், அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் மற்றும் கைப்பந்து கழகத் தலைவர் பூக்கடை ரவி ஆகியோர் தலைமை தாங்கி, மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் பொருளாளர் ஜெயபால் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிறைவு விழாவில் ஜெகநாதன், ஜெயராமன், சௌந்தர்ராஜன், மணிவண்ணன், வழக்கறிஞர் அசோக், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், பார்த்திபன், வணங்காமுடி, தனபால், ராம்குமார், பிரபு, மாது, மோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
    1
    தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான இலவச கைப்பந்து பயிற்சி முகாம் கடந்த 4ஆம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. கோடைக்கால சிறப்புப் பயிற்சியாக நடைபெற்ற இந்த முகாம் தற்போது நிறைவடைந்துள்ளது.

பயிற்சி நிறைவு விழாவானது மாவட்ட விளையாட்டு மைதானத்திலேயே நடைபெற்றது. இதில் கைப்பந்து கழக மாவட்டச் செயலாளர் தங்கராஜ் பயிற்சி குறித்துப் பேசினார். இணைச் செயலாளர் நிர்மல்குமார் முன்னிலை வகித்தார். தலைவர் M.G. சேகர், அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் மற்றும் கைப்பந்து கழகத் தலைவர் பூக்கடை ரவி ஆகியோர் தலைமை தாங்கி, மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் பொருளாளர் ஜெயபால் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த நிறைவு விழாவில் ஜெகநாதன், ஜெயராமன், சௌந்தர்ராஜன், மணிவண்ணன், வழக்கறிஞர் அசோக், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், பார்த்திபன், வணங்காமுடி, தனபால், ராம்குமார், பிரபு, மாது, மோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக நடைபெறும் நாட்டுக்கோழி சந்தை, இன்று (மே 31) நடைபெற்றது. இந்த சந்தையில் கோழிகளின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்தது. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் பங்கேற்ற இந்த சந்தையில், ஒரு நாட்டுக்கோழி ₹480 முதல் ₹1,500 வரை விற்பனையானது. இன்று மொத்தமாக ₹4.20 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
    1
    நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக நடைபெறும் நாட்டுக்கோழி சந்தை, இன்று (மே 31) நடைபெற்றது. இந்த சந்தையில் கோழிகளின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்தது. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் பங்கேற்ற இந்த சந்தையில், ஒரு நாட்டுக்கோழி ₹480 முதல் ₹1,500 வரை விற்பனையானது. இன்று மொத்தமாக ₹4.20 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து பொதுமக்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார். மாவட்டத்தின் ஏழு தொகுதிகளில் கிடைத்த வெற்றியின் மூலம் "சேலம் எப்போதுமே அதிமுகவின் கோட்டை" என்பதை மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளதாக அவர் மிகுந்த பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு உறுதுணையாக உழைத்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் தனது நன்றியை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக்கொண்டார்.
    1
    சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து பொதுமக்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார். மாவட்டத்தின் ஏழு தொகுதிகளில் கிடைத்த வெற்றியின் மூலம் "சேலம் எப்போதுமே அதிமுகவின் கோட்டை" என்பதை மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளதாக அவர் மிகுந்த பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த வெற்றிக்கு உறுதுணையாக உழைத்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் தனது நன்றியை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக்கொண்டார்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மத்திய ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில், ஊத்தங்கரை ஒன்றியம் நொச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உடலுயிர் நல மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இளையராஜா துவக்கி வைத்தார். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை பூவரசன் அஜய், பாலமுருகேசன், அருண், அனிதா ஆகியோர் செய்திருந்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட இணைச் செயலாளர் தாமோதரன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ராமதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமர்நாத், அரசல், சிவா உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த முகாம் மூலம் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மத்திய ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில், ஊத்தங்கரை ஒன்றியம் நொச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உடலுயிர் நல மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இளையராஜா துவக்கி வைத்தார்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை பூவரசன் அஜய், பாலமுருகேசன், அருண், அனிதா ஆகியோர் செய்திருந்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட இணைச் செயலாளர் தாமோதரன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ராமதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமர்நாத், அரசல், சிவா உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த முகாம் மூலம் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    5 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன பர்கூர் சாலையில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தை அதிமுக கழக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி திறந்து வைத்தார். அதிமுக ஒன்றிய கழகச் செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.சி. கோவிந்தராசன் தலைமையில் நடைபெற்ற இந்தத் துவக்க விழாவில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் அசோக்குமார் சிறப்புரையாற்றினார். மேலும், அதிமுகவைச் சேர்ந்த பல நிர்வாகிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன பர்கூர் சாலையில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தை அதிமுக கழக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி திறந்து வைத்தார். அதிமுக ஒன்றிய கழகச் செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.சி. கோவிந்தராசன் தலைமையில் நடைபெற்ற இந்தத் துவக்க விழாவில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் அசோக்குமார் சிறப்புரையாற்றினார். மேலும், அதிமுகவைச் சேர்ந்த பல நிர்வாகிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அமைந்துள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அபரிமிதமாக அதிகரித்துள்ளது. விடுமுறை தினமான இன்று, கல்வராயன் மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்லாமல், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்தனர். நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் குளித்து, இயற்கை அழகை முழுமையாக ரசித்தனர். நீர்வரத்து அதிகரித்திருப்பதால், அருவிப் பகுதி கண்கவர் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இதனால் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. குளிர்ச்சியான காலநிலை மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த சூழலில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட்டு, இனிமையான அனுபவத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பாதுகாப்பான முறையில் குளிக்க வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அமைந்துள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அபரிமிதமாக அதிகரித்துள்ளது. விடுமுறை தினமான இன்று, கல்வராயன் மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்லாமல், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்தனர்.

நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் குளித்து, இயற்கை அழகை முழுமையாக ரசித்தனர். நீர்வரத்து அதிகரித்திருப்பதால், அருவிப் பகுதி கண்கவர் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இதனால் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. குளிர்ச்சியான காலநிலை மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த சூழலில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட்டு, இனிமையான அனுபவத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பாதுகாப்பான முறையில் குளிக்க வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    1 hr ago
  • நாமக்கல் மாவட்டத்தில் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட மதுபாலன் ஐஏஎஸ் அவர்கள் இன்று, மே 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது பதவியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். பதவி ஏற்புக்குப் பின்னர், அவர் பத்திரிகையாளர்களுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
    1
    நாமக்கல் மாவட்டத்தில் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட மதுபாலன் ஐஏஎஸ் அவர்கள் இன்று, மே 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது பதவியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். பதவி ஏற்புக்குப் பின்னர், அவர் பத்திரிகையாளர்களுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • தருமபுரியிலுள்ள சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்காக சுமார் 200 ஆடுகளைக் கொண்டு வந்தனர். சோலை கொட்டாய், செட்டிகரை, நல்லம்பள்ளி, குள்ளனூர், குண்டலபட்டி, நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை, தடங்கம், ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, ராஜா பேட்டை, லளிகம், தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த ஆடுகள் கொண்டு வரப்பட்டன. பொதுமக்கள் மற்றும் பிற வியாபாரிகள் என பலர் ஆடுகளை வாங்க வந்திருந்தனர். சந்தையில் சிறிய ஆட்டுக்குட்டிகள் ₹2,000 முதல் விற்பனையான நிலையில், பெரிய அளவிலான ஆடுகள் ₹20,000 வரை விற்பனை செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக, தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் ₹18 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    1
    தருமபுரியிலுள்ள சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்காக சுமார் 200 ஆடுகளைக் கொண்டு வந்தனர். சோலை கொட்டாய், செட்டிகரை, நல்லம்பள்ளி, குள்ளனூர், குண்டலபட்டி, நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை, தடங்கம், ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, ராஜா பேட்டை, லளிகம், தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த ஆடுகள் கொண்டு வரப்பட்டன. பொதுமக்கள் மற்றும் பிற வியாபாரிகள் என பலர் ஆடுகளை வாங்க வந்திருந்தனர்.

சந்தையில் சிறிய ஆட்டுக்குட்டிகள் ₹2,000 முதல் விற்பனையான நிலையில், பெரிய அளவிலான ஆடுகள் ₹20,000 வரை விற்பனை செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக, தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் ₹18 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.