தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் 3 மணி நேரமாக சாலை மறியல் தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: 3மணி நேரமாக கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்து போராட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தலையாமழை கிராமத்தில் அடிப்படை வசதியான குடிநீர் கேட்டு, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலையாமழை கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டும், கடந்த 6 மாதங்களாக ஒரு சொட்டு குடிநீர் கூட விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே டேங்கர் லாரி மூலம் வழங்கப்படும் தண்ணீரும் போதுமானதாக இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிநீருக்காக சுமார் 5 கிலோமீட்டர் தூரமுள்ள சோழவித்தியாபுரம் கிராமத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவலநிலை நிலவுகிறது. இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் வைத்திருப்பவர்கள் மட்டுமே சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், வெளி ஊர்களுக்கு சென்று தண்ணீர் பிடிப்பதால் கிராமங்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. குளிப்பதற்கும் குடிப்பதற்கும் போதிய தண்ணீர் இன்றி பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்துப் பெண்கள், நாகப்பட்டினம் - மேலப்பிடாகை உட்சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, காலி குடங்களை தலையில் சுமந்தவாறு சாலையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் உடனடியாக வராததால், பெண்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தலையான்மழை கிராம மக்களின் குடிநீர் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் மற்றும் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

- புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்4
- ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடப்பதால் மாணவிகள் அச்சம்: திருவாடானை பாரதிநகரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்திற்குள் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளி வளாகத்தில் அவ்வப்போது விஷப் பூச்சிகள் மற்றும் ஊர்வன நடமாட்டம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினமும் பள்ளிக்கு வரும் மாணவிகள் அச்சத்துடனேயே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது.எனவே, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: மணப்பாறையில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உற்சாகமாக ஊர்வலம் நடைபெற்றது. மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், ராஜகிரி வழியாக வந்து காமராஜர் சிலையைச் சுற்றி, மணப்பாறை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது, "பேரறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக!", "டாக்டர் கலைஞரின் புகழ் ஓங்குக!", "முதலமைச்சர் தளபதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" மற்றும் "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" உள்ளிட்ட பல்வேறு கழகக் கோஷங்களைத் தொண்டர்கள் விண்ணதிர எழுப்பினர். பேருந்து நிலையத்தை அடைந்த ஊர்வலத்தினர், அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பேருந்து நிலையம் முன்புறம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்குப் பள்ளித் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டர்களுடன் இணைந்து கோஷங்களை எழுப்பினார். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.1
- முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.1
- முசிறியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தினம் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழா அதிமுகவினர். இனிப்பு வழங்கி கொண்டாட்டம். முசிறியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை 118 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு கைகாட்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் நிகழ்வில். முன்னால் அமைச்சர் டிபி பூனாச்சி, முன்னால் எம்எல்ஏக்கள் மல்லிகா சின்னசாமி, செல்வராஜ், முசிறி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிறார் மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட அவைத் தலைவர் ஈஞ்சூர் ராமு, மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், நகரப் பொருளாளர் ராஜேந்திரன், பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம்ஜிஆர், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.1
- தலைமலை பட்டிஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் தலைமலைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ சென்னிமலை ஆண்டவர் ஆலயத்தில் புதிதாக எழுந்து அருள்பாலிக்க உள்ள அருள்மிகு அஷ்டபுஜமங்கள வாராஹி அம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக முடிந்தது.அதனைத் தொடர்ந்து 48 வது நாள் மண்டல பூஜைகள் நடைபெற்று சுவாமிகள் யாகம் செய்து மண்டல பூஜைகள் நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் அன்னதானம் பிரசாதம் வழங்கினர்1
- சாயல்குடி தவெக நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார்: ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் பரபரப்பு சாயல்குடி தவெக நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார்: ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் பரபரப்பு! ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாயல்குடி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி அக்கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன், சாயல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ். மணிகண்டன் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் தொடக்கத்திலிருந்தே கட்சிக்காக தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கிராமங்கள் தோறும் இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்தும் இவர்களது களப்பணிகளுக்கு உள்ளூர் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் கட்சியில் இணைய விரும்பிய சில நபர்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கட்சிப் பதவிகள் வழங்குவதற்காகப் பேரம் பேசப்பட்டதாகப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தவெக தொண்டர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பதவி கிடைக்கவில்லை என்பதற்காக பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி உழைத்தவர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்துவதை ஏற்க முடியாது" என்று தவெகவினர் தெரிவித்துள்ளனர். மேலும், கட்சிக்காக உழைக்கும் உண்மையான தொண்டர்களின் உழைப்புக்கு எப்போதும் உரிய மரியாதை அளிக்கப்படும் என்றும் அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். தங்கள் மீதான அவதூறு பரப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக, சாயல்குடி வணிகர் சங்கப் பிரமுகர் பெத்தராஜ் மீது சாயல்குடி காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளிக்கப்பட்டு விசாரணையில் உள்ளது. இதனிடையே, இந்தச் சூழலில் கடலாடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அடிப்படை ஆதாரமற்ற அவதூறுச் செய்திகளைப் பரப்புவதை சம்பந்தப்பட்டவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் தரப்பு எச்சரித்துள்ளது. 1