அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடப்பதால் மாணவிகள் அச்சம்: திருவாடானை பாரதிநகரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்திற்குள் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளி வளாகத்தில் அவ்வப்போது விஷப் பூச்சிகள் மற்றும் ஊர்வன நடமாட்டம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினமும் பள்ளிக்கு வரும் மாணவிகள் அச்சத்துடனேயே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது.எனவே, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடப்பதால் மாணவிகள் அச்சம்: திருவாடானை பாரதிநகரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்திற்குள் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளி வளாகத்தில் அவ்வப்போது விஷப் பூச்சிகள் மற்றும் ஊர்வன நடமாட்டம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினமும் பள்ளிக்கு வரும் மாணவிகள் அச்சத்துடனேயே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது.எனவே, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதர்கள் மண்டி கிடப்பதால் மாணவிகள் அச்சம்: திருவாடானை பாரதிநகரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்திற்குள் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, பள்ளி வளாகத்தில் அவ்வப்போது விஷப் பூச்சிகள் மற்றும் ஊர்வன நடமாட்டம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினமும் பள்ளிக்கு வரும் மாணவிகள் அச்சத்துடனேயே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது.எனவே, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- தேவகோட்டையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா , சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில், 23-ஆவது வட்டக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், திமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜாஹிர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக, திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அண்ணாவின் மலர் மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணாவின் சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவராலும் சிறப்பிக்கப்பட்டது.1
- என் ஊர் திருவிழா நாளைக்கு கும்பாபிஷேகம் விழா எல்லோரும் வாங்க1
- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்4
- சாயல்குடி தவெக நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார்: ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் பரபரப்பு சாயல்குடி தவெக நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலையத்தில் புகார்: ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் பரபரப்பு! ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாயல்குடி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி அக்கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன், சாயல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ். மணிகண்டன் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் தொடக்கத்திலிருந்தே கட்சிக்காக தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கிராமங்கள் தோறும் இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்தும் இவர்களது களப்பணிகளுக்கு உள்ளூர் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் கட்சியில் இணைய விரும்பிய சில நபர்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கட்சிப் பதவிகள் வழங்குவதற்காகப் பேரம் பேசப்பட்டதாகப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தவெக தொண்டர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பதவி கிடைக்கவில்லை என்பதற்காக பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி உழைத்தவர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்துவதை ஏற்க முடியாது" என்று தவெகவினர் தெரிவித்துள்ளனர். மேலும், கட்சிக்காக உழைக்கும் உண்மையான தொண்டர்களின் உழைப்புக்கு எப்போதும் உரிய மரியாதை அளிக்கப்படும் என்றும் அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். தங்கள் மீதான அவதூறு பரப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக, சாயல்குடி வணிகர் சங்கப் பிரமுகர் பெத்தராஜ் மீது சாயல்குடி காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளிக்கப்பட்டு விசாரணையில் உள்ளது. இதனிடையே, இந்தச் சூழலில் கடலாடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அடிப்படை ஆதாரமற்ற அவதூறுச் செய்திகளைப் பரப்புவதை சம்பந்தப்பட்டவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் தரப்பு எச்சரித்துள்ளது. 1
- முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து முதுகுளத்தூர் அருகே அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து 32 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; சிலருக்கு லேசான காயம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பூசேரி பகுதியில் அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முதுகுளத்தூரில் இருந்து தேரிருவேலி, பூசேரி வழியாக 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூசேரி சுடுகாட்டு பகுதி அருகே பேருந்து வந்தபோது, எதிரே ஆட்டோ மற்றும் கார் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு வழிவிடுவதற்காக பேருந்தை சாலையோரமாக ஒதுக்கியபோது, இன்று பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக இருந்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சில பயணிகளுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சிக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1