📰 செய்தி அறிக்கை: வள்ளியூரில் பிரம்மாண்ட 'திராவிடப் பொங்கல்' மாரத்தான்! வள்ளியூர் | ஜனவரி 2026: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திராவிடச் சிந்தனைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வள்ளியூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் பிரம்மாண்ட "திராவிடப் பொங்கல் மாரத்தான் 2026" நடைபெற உள்ளது. முக்கியத் தகவல்கள்: நாள்: 09.01.2026 (வெள்ளிக்கிழமை) நேரம்: காலை 6.30 மணி பிரிவுகள்: ஆண்களுக்கு 9 KM மற்றும் பெண்களுக்கு 5 KM. சிறப்பம்சம்: வயது வரம்பின்றி அனைவரும் பங்கேற்கலாம். நுழைவுக் கட்டணம் கிடையாது. பரிசுகள்: முதலிடம் பிடிப்பவர்களுக்கு ₹25,000, இரண்டாம் இடம் ₹10,000 மற்றும் மூன்றாம் இடம் ₹5,000 உடன் பதக்கங்கள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் டி-சர்ட் மற்றும் பதக்கங்கள் உண்டு. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு அவர்கள் மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் ம. கிரகாம்பெல் அவர்கள் போட்டிகளைத் துவக்கி வைக்கின்றனர். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை வள்ளியூர் வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் அலெக்ஸ் அப்பாவு முன்னெடுத்துள்ளார். ✍️ திராவிடச் சிந்தனை : களத்தில் ஆடு தமிழா! நீதிக்கட்சி விதைத்த சமத்துவக் காட்டில் நிமிர்ந்து ஓடு தமிழா - உன் ஜாதி மத விலங்குகளை உடைத்து சரித்திரம் படைக்க ஓடு தமிழா! தை மகளின் வருகையிலே திராவிடப் பொங்கல் முழக்கமிடும்! களத்தில் ஓடும் கால்கள் எல்லாம் கலைஞர் கொள்கை சுமந்து வரும்! ஏற்றத்தாழ்வு இல்லாத ஓட்டம் இது எல்லோருக்கும் எல்லாம் எனும் பாடம் இது! வள்ளியூர் மண்ணில் வீரம் சேர்ப்போம் வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்!
📰 செய்தி அறிக்கை: வள்ளியூரில் பிரம்மாண்ட 'திராவிடப் பொங்கல்' மாரத்தான்! வள்ளியூர் | ஜனவரி 2026: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திராவிடச் சிந்தனைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வள்ளியூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் பிரம்மாண்ட "திராவிடப் பொங்கல் மாரத்தான் 2026" நடைபெற உள்ளது. முக்கியத் தகவல்கள்: நாள்: 09.01.2026 (வெள்ளிக்கிழமை) நேரம்: காலை 6.30 மணி பிரிவுகள்: ஆண்களுக்கு 9 KM மற்றும் பெண்களுக்கு 5 KM. சிறப்பம்சம்: வயது வரம்பின்றி அனைவரும் பங்கேற்கலாம். நுழைவுக் கட்டணம் கிடையாது. பரிசுகள்: முதலிடம் பிடிப்பவர்களுக்கு ₹25,000, இரண்டாம் இடம் ₹10,000 மற்றும் மூன்றாம் இடம் ₹5,000 உடன் பதக்கங்கள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் டி-சர்ட் மற்றும் பதக்கங்கள்
உண்டு. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு அவர்கள் மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் ம. கிரகாம்பெல் அவர்கள் போட்டிகளைத் துவக்கி வைக்கின்றனர். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை வள்ளியூர் வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் அலெக்ஸ் அப்பாவு முன்னெடுத்துள்ளார். ✍️ திராவிடச் சிந்தனை : களத்தில் ஆடு தமிழா! நீதிக்கட்சி விதைத்த சமத்துவக் காட்டில் நிமிர்ந்து ஓடு தமிழா - உன் ஜாதி மத விலங்குகளை உடைத்து சரித்திரம் படைக்க ஓடு தமிழா! தை மகளின் வருகையிலே திராவிடப் பொங்கல் முழக்கமிடும்! களத்தில் ஓடும் கால்கள் எல்லாம் கலைஞர் கொள்கை சுமந்து வரும்! ஏற்றத்தாழ்வு இல்லாத ஓட்டம் இது எல்லோருக்கும் எல்லாம் எனும் பாடம் இது! வள்ளியூர் மண்ணில் வீரம் சேர்ப்போம் வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்!
- சுசீந்திரம் எட்டாம் கொடையை முன்னிட்டு நடைபெற்ற வில்லுப்பாட்டு1
- மகனை படுகொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனையும் தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள செங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்னன் மனைவி ராஜா மணி தம்பதியருக்கு அஜித்குமார் (வயது 27) என்ற மகன் இருந்து வந்துள்ளார். அஜித் குமார் எந்த வேலைக்கும் போகாத நிலையில் நாள்தோறும் வீட்டிற்கு வந்து தாய் தந்தையுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், தந்தை இல்லாத நேரத்தில் தாயிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த தாய், தந்தை இருவரும் சேர்ந்து மகன் அஜித்குமாரை கயிற்றால் கழுத்தை இருக்கியதோடு அறிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக வீரபாண்டி காவல் நிலையத்தில் தாய், தந்தை இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவு பெற்று மகனை கொலை செய்த குற்றத்திற்காக தாய், தந்தை இருவருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் குற்றவாளியான தந்தை அபிமன்னனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாத கால சிறை தண்டனையும், இரண்டாவது குற்றவாளியான தாய் ராஜாமணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு பத்தாயிரம் ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத கால சிறை தண்டனையும் விதித்ததோடு, தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.1
- தேனி அருகே தாடிச்சேரியில் திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டி: தங்கம் தமிழ்செல்வன் எம்.பி தொடங்கி வைத்தார்! தேனி அருகே தாடிச்சேரியில் திமுகவின் தேனி வடக்கு மாவட்டம் தேனி வடக்கு ஒன்றியம் சார்பாக திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது இந்த கபடி போட்டியில் தாடிச்சேரி, சிவலிங்க நாயக்கன்பட்டி ,கோட்டூர் சீலையம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் பங்கேற்றனர்.இந்த விழாவின் இரண்டாம் நாள் கபடி போட்டியினை தேனி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளருமாகிய தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்று கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாடிய கபடி வீரர்கள் ஆடுகளத்தில் சிறப்பான முறையில் விளையாடினார்கள் இந்தப் போட்டியில் சிறப்பான முறையில் மூன்றாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 15,000 மற்றும் சுழல் கோப்பையும் இரண்டாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு 20,000 மற்றும் சுழல் கோப்பையும், முதல் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 25000 மற்றும் சுழல் கோப்பையும் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி வழங்கி சிறப்பித்தார்.மேலும் இந்த நிகழ்வில் தேனி வடக்கு ஒன்றிய விவசாய அமைப்பாளர் ரவி, கிளை செயலாளர்கள் தவசி, பாக்கியம், தேனி வடக்கு ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் போத்திராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருக ஜெகதீஸ் ,ஆதிதிராவிட நல குழு அணி அமைப்பாளர் பால்ராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பட்டிய அணி துணை அமைப்பாளர் தமிழரசன் ,திமுக பிரதிநிதிகள் சூரத் தேவன், ராஜவேல் சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள்,விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவிற்கு வருகை புரிந்த பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனீ வடக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது1
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.1
- நிலக்கோட்டை: பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை வரலாறு காணாத உயர்வு - மல்லிகை கிலோ ரூ.10000க்கு விற்பனை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தைப்பொங்கல் பண்டிகை, தை அமாவாசை, சுபமுகூர்த்த நாட்கள் வருவதையொட்டி மற்றும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.10,000, முல்லை ரூ.3000, ஜாதிப்பூ ரூ.2500க்கு, கனகாம்பரம் ரூ.2000 என அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாகி வருகிறது விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- நவீன சுகாதார வளாகம் திறப்பு விழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கோரமண்டல் உர தொழிற்சாலை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைக்க இன்று (ஜன.9) சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் வருகை தந்தார். தொடர்ந்து, அரசு பள்ளி மாணவியை கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார்.1
- தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று நடந்தது நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏகே. கமல் கிஷோர் தலைமை வகித்தார் தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் பொங்கல் தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தார் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- கன்னியாகுமரி மாவட்டம் திருப்பரப்பு அருகே களியல் ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளது முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் ஆற்றில் ஒரு கோழியை விட்டுள்ளனர்.1
- விஜய் நடித்து வெளியாகி உள்ள ஜனநாயகம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பெரியகுளம் பவளம் தியேட்டர் முன்பு விஜய் கட் அவுட் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளனர்1