Shuru
Apke Nagar Ki App…
சுசீந்திரம் எட்டாம் கொடையை முன்னிட்டு நடைபெற்ற வில்லுப்பாட்டு
KK NEWS
சுசீந்திரம் எட்டாம் கொடையை முன்னிட்டு நடைபெற்ற வில்லுப்பாட்டு
More news from தமிழ்நாடு and nearby areas
- .*மூணாரில் உள்ள எராவிகுளம் தேசிய வன உயிரியியல் பூங்காவில் ஏராளமான வரையாடுகள் உள்ள நிலையில் வரையாடுகளின் இனப்பெருக்க காலம் தொடங்கி உள்ளதால் பிப்-01 ஆம் தேதி முதல் மார்ச் - 31 ஆம் தேதி வரை வன உயிரியியல் பூங்கா அடைக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவிப்பு. கேரள இடுக்கி மாவட்டத்தின் முக்கிய தேசிய வனவிலங்கு சரணாலயம் வருகின்ற பிப்ரவரி முதல் மார்ச் வரை இரண்டு மாதங்கள் மூடப்படுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறையினர் அறிவிப்பு . கேரள மாநிலம் மூணார் அருகேயுள்ளது இராவிகுளம் தேசிய வன உயிரியல் பூங்கா ஆண்டுதோறும் அங்கு ஏராளமான சுற்றுல பயணிகள் சென்று வருவது வழக்கமாகும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வரையாடுகளைக் காண்பதற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் இனப்பெருக்க காலத்தில் பூங்கா அடைக்கப்படவது வழக்கமாகும். அதன்படி இந்தாண்டும் வரையாடுகளின் இனப்பெருக்க காலத்தையொட்டி பூங்கா அடைக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர் . பிப்ரவரி - 01 ஆம் தேதி முதல் மார்ச் - 31 வரை இரவிக்குளம் அடைப்படுவதாக வனத்துறையினர். தெரிவித்துள்ளனர். அதன்படி இரண்டு மாதக்காலம் பூங்காவிற்க்குள் சுற்றுலாபயணிகளுக்கு தற்காலிமாக அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த வருடம் 827 வரையாடுகள் காணப்பட்ட நிலையில் 144 வரையாடுகளின் குட்டிகள் பிறந்திருந்தது குறிப்பிடதக்கது. தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் கேரளாவில் இனப்பெருக்கத்தில் முக்கியத்துவம் பெறுவதால் தமிழகத்தைக் காட்டிலும் கேரளாவில் இவற்றில் இனப்பெருக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாதுகாக்கப்பட்ட உயிரினமான வரையாடுகளின் சரணாலயமாக விளங்கும் கேரளாவின் இரவிக்குளம் தேசிய பூங்கா முழுக்க முழுக்க வரையாடுகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய பூங்காவாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் தேசிய பூங்காவான இங்கு அச்சமின்றி சுற்றுலா பயணிகளுடன் வெகு சகஜமாக உரையாடுகள் சுற்றித் திரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.1
- தேனி வாசவி மஹாலில் வாசவி கிளப், வாசவீ கிளப் வனிதா பதவியேற்பு விழா நடந்தது தேனி பெரியகுளம் சாலையில் உள்ள வாசவி மஹாலில் தேனியில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் மற்றும் வாசவி கிளப் வனிதா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தலைவர்கள் சரவணன், ஷர்மிளா தலைமை வகிக்க, செயலாளர் பால நடராஜன், பொருளாளர்கள் ஹிந்ரஜீத் மற்றும் வைஷ்ணவி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க, சிறப்பு அழைப்பாளராக இன்டர்நேஷனல் மல்டிபிள் துணை தலைவர் லால்பகதூர் சாஸ்திரி, கேபினட் செயலாளர் லட்சுமி பாலகிருஷ்ணன், கேபினட் பொருளாளர் ஸ்ரீபிரியா சத்யநாராயணன், மாவட்டத் துணை ஆளுநர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட ஆளுநர் ஸ்ரீமதிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன் அடிப்படையில் வாசவி கிளப் புதிய தலைவராக சீனிவாசன் செயலாளராக மணிகண்டன் பொருளாளராக வாசகன் உள்ளிட்டோரும் வாசவி கிளப் வனிதா தலைவராக தன்யா பார்வதி செயலாளராக சௌமியா பொருளாளராக சப்னா உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக பதவியேற்று கொண்டனர் இதனை தொடர்ந்து தேவாரம் இமேஜ் ஹோமிற்க்கு போர்வைகள், ஏழை எளிய மற்றும் ஊனமுற்றவர்களுக்கு 5 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டது முன்னதாக வடபுதுபட்டியில் செயல்பட்டு வரும் அன்பு இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேனி அல்லிநகரம் ஆரிய வைசிய மகாசபை தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அபெக்ஸ் நண்பர்கள் என ஏராளமான வாழ்த்துரை வழங்கினர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் முன்னாள் தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார் இந்த நிகழ்வில் IPC அலுவலர்களாக சேகர் ராம்குமார் ராஜா மாவட்ட உதவி செய்தி தொடர்பாளர் சுவாதி ஸ்ரீ சரவணகுமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீவித்யா பாலாஜி மண்டல தலைவர் நாகராஜன் வட்டாரத் தலைவர்கள் சரவணன், நாகலாவன்யா மண்டல செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினர் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக வாசவி கிளப் வனிதா முன்னாள் தலைவர் சர்மிளா அனைவருக்கும் நன்றி கூறினார்1
- திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 9 பேர் கைது திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் பிரதீப் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி(35), தர்மராஜ்(52), சேவியர்ஆல்பர்ட்(22), மணிகண்டன்(19) யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ்(60), ஜான்பீட்டர்(42), மைக்கேல்ராஜ்(31), மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ்(54), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின்(23) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.3
- நிலக்கோட்டை: பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை வரலாறு காணாத உயர்வு - மல்லிகை கிலோ ரூ.10000க்கு விற்பனை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தைப்பொங்கல் பண்டிகை, தை அமாவாசை, சுபமுகூர்த்த நாட்கள் வருவதையொட்டி மற்றும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.10,000, முல்லை ரூ.3000, ஜாதிப்பூ ரூ.2500க்கு, கனகாம்பரம் ரூ.2000 என அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாகி வருகிறது விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- புதுக்கோட்டை மாவட்டத்தில் லேசான மழை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, விராலிமலை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பரவலான இடங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டின் உள்ளேயே முடங்கினர். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணியில் இருந்து தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது, லாரியை அதன் டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் மன்னார் குடியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பஸ் டிரைவர் சிக்கி கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- சுசீந்திரம் எட்டாம் கொடையை முன்னிட்டு நடைபெற்ற வில்லுப்பாட்டு1
- பெரியகுளம் அருகே A வாடிப்பட்டி ஊராட்சியில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்துக்கு புகார் அளித்ததை தொடர்ந்து தற்போது உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கழிவுநீர் அடைப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பின்றி கழிவுநீர் செல்லும் வகையில் பணிகளை மேற்கொண்டு உள்ளனர்1
- தேனி அருகே தாடிச்சேரியில் திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டி: தங்கம் தமிழ்செல்வன் எம்.பி தொடங்கி வைத்தார்! தேனி அருகே தாடிச்சேரியில் திமுகவின் தேனி வடக்கு மாவட்டம் தேனி வடக்கு ஒன்றியம் சார்பாக திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது இந்த கபடி போட்டியில் தாடிச்சேரி, சிவலிங்க நாயக்கன்பட்டி ,கோட்டூர் சீலையம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் பங்கேற்றனர்.இந்த விழாவின் இரண்டாம் நாள் கபடி போட்டியினை தேனி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளருமாகிய தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்று கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாடிய கபடி வீரர்கள் ஆடுகளத்தில் சிறப்பான முறையில் விளையாடினார்கள் இந்தப் போட்டியில் சிறப்பான முறையில் மூன்றாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 15,000 மற்றும் சுழல் கோப்பையும் இரண்டாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு 20,000 மற்றும் சுழல் கோப்பையும், முதல் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 25000 மற்றும் சுழல் கோப்பையும் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி வழங்கி சிறப்பித்தார்.மேலும் இந்த நிகழ்வில் தேனி வடக்கு ஒன்றிய விவசாய அமைப்பாளர் ரவி, கிளை செயலாளர்கள் தவசி, பாக்கியம், தேனி வடக்கு ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் போத்திராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருக ஜெகதீஸ் ,ஆதிதிராவிட நல குழு அணி அமைப்பாளர் பால்ராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பட்டிய அணி துணை அமைப்பாளர் தமிழரசன் ,திமுக பிரதிநிதிகள் சூரத் தேவன், ராஜவேல் சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள்,விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவிற்கு வருகை புரிந்த பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனீ வடக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது1