logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தென்காசியில் தேநீர் கடைக்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்! தென்காசி, ஐடிஐ இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனியார் தேநீர் கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஊழியரைத் தாக்கி கடைப்பொருட்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது |காயமடைந்த ஊளழியர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ர் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது

3 hrs ago
user_M SURESH
M SURESH
Mechanical Engineering கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
3 hrs ago

தென்காசியில் தேநீர் கடைக்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்! தென்காசி, ஐடிஐ இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனியார் தேநீர் கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஊழியரைத் தாக்கி கடைப்பொருட்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது |காயமடைந்த ஊளழியர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ர் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது

More news from தமிழ்நாடு and nearby areas
  • கும்பகோணம் அருகே திருபுவனம் டாஸ்மாக் குடோன் முன்பு டெலிவரி தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு டாஸ்மாக் குடோனில் டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றி வரும் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி, போனஸ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டாஸ்மாக் குடோன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெலிவரி சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவர் சி.ஜெயபால் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்த தொழிலை செய்து வரும் எங்களது வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. நவீன கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகிறோம். மதுபான பெட்டிகளை கடையில் கொண்டு போய் இறக்குவதற்கு ஒரு பெட்டிக்கு பத்து ரூபாயும், கடைக்குள் அடுக்கி வைப்பதற்கு ஐந்து ரூபாயும் வழங்க வேண்டும். டிரான்ஸ்போர்ட் ஓட்டுநர்களுக்கு தினக்கூலியாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை கால போனஸ் மற்றும் பி.எஃப், இ.எஸ்.ஐ உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களை முறையாக வழங்க வேண்டும் என்றனர்.
    1
    கும்பகோணம் அருகே திருபுவனம் டாஸ்மாக் குடோன் முன்பு டெலிவரி தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு டாஸ்மாக் குடோனில் டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றி வரும் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி, போனஸ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டாஸ்மாக் குடோன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெலிவரி சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவர் சி.ஜெயபால் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்த தொழிலை செய்து வரும் எங்களது வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. நவீன கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகிறோம். மதுபான பெட்டிகளை கடையில் கொண்டு போய் இறக்குவதற்கு ஒரு பெட்டிக்கு பத்து ரூபாயும், கடைக்குள் அடுக்கி வைப்பதற்கு ஐந்து ரூபாயும் வழங்க வேண்டும். டிரான்ஸ்போர்ட் ஓட்டுநர்களுக்கு தினக்கூலியாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை கால போனஸ் மற்றும் பி.எஃப், இ.எஸ்.ஐ உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களை முறையாக வழங்க வேண்டும் என்றனர்.
    user_Ramesh sarangan
    Ramesh sarangan
    கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • தஞ்சை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் ,கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் ஆட்டோ சங்கத்தின் 39-வது ஆயுத பூஜை விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கௌரவத் தலைவர் நமது சாக்கோட்டை க.அன்பழகன் Ex.MLA அவர்கள் விழாவில் கலந்து கொண்டு பூஜையை தொடங்கி வைத்து ஓட்டுனர்களை வாழ்த்தி உரையாற்றினார்.இந்நிகழ்வில் ஆட்டோ சங்கத் தலைவர் மனோகரன் அவர்கள், செயலாளர் சேகர் அவர்கள், பொருளாளர் ஜேம்ஸ் அவர்கள், மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர்.
    2
    தஞ்சை மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் ,கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் ஆட்டோ சங்கத்தின் 39-வது ஆயுத பூஜை விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கௌரவத் தலைவர் நமது சாக்கோட்டை க.அன்பழகன் Ex.MLA அவர்கள் விழாவில் கலந்து கொண்டு பூஜையை தொடங்கி வைத்து ஓட்டுனர்களை வாழ்த்தி உரையாற்றினார்.இந்நிகழ்வில் ஆட்டோ சங்கத் தலைவர் மனோகரன் அவர்கள், செயலாளர் சேகர் அவர்கள், பொருளாளர் ஜேம்ஸ் அவர்கள், மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர்.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • அரசு மக்களின் பக்கம் தான் இருக்க வேண்டும்.. ஆனால் அந்த அரசே மக்களை அடித்து துன்புறுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த போராட்டத்தை அரசு மக்களின் பக்கம் தான் இருக்க வேண்டும்.. ஆனால் அந்த அரசே மக்களை அடித்து துன்புறுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த போராட்டத்தை கருத்தில் கொண்டு உடனடியாக ஒன்றிய கல்வி அமைச்சரை பதவி விலக வைக்க வேண்டும்!! மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்
    1
    அரசு மக்களின் பக்கம் தான் இருக்க வேண்டும்.. ஆனால் அந்த அரசே மக்களை அடித்து துன்புறுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த போராட்டத்தை
அரசு மக்களின் பக்கம் தான் இருக்க வேண்டும்.. ஆனால் அந்த அரசே மக்களை அடித்து துன்புறுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த போராட்டத்தை கருத்தில் கொண்டு உடனடியாக ஒன்றிய கல்வி அமைச்சரை பதவி விலக வைக்க வேண்டும்!! மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்
    user_ARULCHOZHAN V
    ARULCHOZHAN V
    Teacher College குத்தாலம், மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் 72 குண்டுகள் முழங்கஅனுசரிப்பு அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு அக்டோபர் 21 ஆம் நாள், ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. 1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் 'ஹாட் ஸ்பிரிங்ஸ்' (Hot Springs) என்ற இடத்தில், சீன இராணுவத்தினரின் திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் (CRPF) வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். மேலும், அரியலூர் மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் 72 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் வீரத் தியாகத்திற்குப் பெருமை சேர்க்கப்பட்டது. நடப்பாண்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 188 காவலர்கள் வீரமணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    1
    ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள்  72 குண்டுகள் முழங்கஅனுசரிப்பு

அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
அக்டோபர் 21 ஆம் நாள், ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. 
1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் 'ஹாட் ஸ்பிரிங்ஸ்' (Hot Springs) என்ற இடத்தில், சீன இராணுவத்தினரின் திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் (CRPF) வீரமரணம் அடைந்தனர். 
அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், 
அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. 
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். 
மேலும், அரியலூர் மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 
இந்நிகழ்ச்சியில் 72 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் வீரத் தியாகத்திற்குப் பெருமை சேர்க்கப்பட்டது. 
நடப்பாண்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 188 காவலர்கள் வீரமணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • மேலப்பிடாகை கடைவீதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி விவசாய சங்கத்தினர் சாலைமறியல் மேலப்பிடாகை கடைவீதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்... டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்திட வேண்டும்,கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும், சம்பா,தாளடி பயிருக்கு கூட்டுறவு கடன் நிபந்தனை இன்றி வழங்கிட வேண்டும் சம்பா, தாளடி பயிர்களை பாதுகாக்க காவிரி நீரை உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி பெற்றிட தமிழக அரசு நீதிமன்றத்தை அணுகிட வேண்டியும்,இவ்வாண்டு குறுவை பயிர் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்கிட கோரியும் இடதுசாரி விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் மேலப்பிடாகை கடை வீதியில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் தமிழக விவசாய சங்க ஒன்றிய செயலாளரகள் ஹாஜா அலாவுதின்,கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் லதா கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வம், சிபிஎம் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த திருக்குவளை வட்டாட்சியர் உதயகுமார், கீழையூர் காவல் ஆய்வாளர் பேபி ஆகியோர் போராட்டக்காரரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுடைய கோரிக்கையை தமிழக அரசு உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என கூறியதும் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் நாகை - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    1
    மேலப்பிடாகை கடைவீதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி விவசாய சங்கத்தினர் சாலைமறியல் 
மேலப்பிடாகை கடைவீதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்...
டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்திட வேண்டும்,கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும், சம்பா,தாளடி பயிருக்கு கூட்டுறவு கடன் நிபந்தனை இன்றி வழங்கிட வேண்டும் சம்பா, தாளடி பயிர்களை பாதுகாக்க காவிரி நீரை  உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி பெற்றிட தமிழக அரசு நீதிமன்றத்தை அணுகிட வேண்டியும்,இவ்வாண்டு குறுவை பயிர் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்கிட கோரியும் இடதுசாரி விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் மேலப்பிடாகை கடை வீதியில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் தமிழக விவசாய சங்க ஒன்றிய செயலாளரகள் ஹாஜா அலாவுதின்,கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் லதா  கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வம், 
சிபிஎம் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர்  வெங்கட்ராமன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த திருக்குவளை வட்டாட்சியர் உதயகுமார், கீழையூர் காவல் ஆய்வாளர்  பேபி ஆகியோர் போராட்டக்காரரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுடைய கோரிக்கையை தமிழக அரசு உயர்  அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என கூறியதும் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால்  நாகை - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    35 min ago
  • சிதம்பரம் இன்னர் வீல் சார்பில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி கடலூர் மாவட்டம் சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் தற்போது உள்ள மழை காலங்கள் உள்ளதால் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறனர் அதனை அறிந்த இன்னர் வீல் சங்கம் சார்பாக தெருவோரம் உள்ள சிறு குரு வியாபாரிகளுக்கு குடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது சங்கத் தலைவி அனிதா தீபக் குமார் மற்றும் வேதா சிவப்பிரகாசம் இந்திரா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இணைந்து பொதுமக்களுக்கு குடைகள் வழங்கினார்கள்
    1
    சிதம்பரம் இன்னர் வீல் சார்பில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் தற்போது உள்ள மழை காலங்கள் உள்ளதால் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறனர் அதனை அறிந்த இன்னர் வீல் சங்கம் சார்பாக தெருவோரம் உள்ள சிறு குரு வியாபாரிகளுக்கு குடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது சங்கத் தலைவி அனிதா தீபக் குமார் மற்றும் வேதா சிவப்பிரகாசம் இந்திரா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இணைந்து பொதுமக்களுக்கு குடைகள் வழங்கினார்கள்
    user_Chidambaram Repoter
    Chidambaram Repoter
    பத்திரிகையாளர் சிதம்பரம், கடலூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • பல தலைமுறையாக வாழும் இடத்திற்கு சிங்கிள் பைசா கூட கொடுக்க மாட்டோம் - கோயில் அதிகாரிகளுக்கு உ.வாசுகி எச்சரிக்கை திருச்சேறை கிராம மக்கள் வருவாய் அதிகாரியிடம் மனு கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருச்சேறை கிராமத்தில் 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் 300-க்கும் மேற்பட்ட ஏழை மக்களின் வீட்டு அடிமனைகளை போலி ஆவணங்கள் மூலம் 04.05.2024 அன்று ஸ்ரீ சாரநாத பெருமாள் கோவிலுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட 266 பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும், சட்டவிரோதமாக பட்டா வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கும்பகோணம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை முடிவின்படி அரசுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், "வீட்டை இடிப்போம், மின் இணைப்பை துண்டிப்போம், குடிநீரை நிறுத்துவோம்" என மிரட்டி, அடிமனை பயனாளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என சித்தரித்து சட்டவிரோதமாக நோட்டீஸ் அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வரும் திருச்சேறை ஸ்ரீ சாரநாத பெருமாள் கோவில் செயல் அலுவலர் மற்றும் கணக்கரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருச்சேறை கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க செயலாளர் டி.என்.ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்க தலைவர் ஜி.ராமமூர்த்தி, பொருளாளர் ஆர்.ரவி, துணைத் தலைவர்கள் துரை, ரவி, பழனி, சங்கர், துணைச் செயலாளர்கள் பெருமாள், சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி துவக்கி வைத்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சின்னை.பாண்டியன், சிஐடியு மாநில துணைத் தலைவர் சி.ஜெயபால், விவசாய சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஏ.செல்வம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிவேல், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உ.வாசுகி பேசிய போது நாட்டின் பல பகுதிகளில் ஏழை, எளிய நடுத்தர மக்களை அப்புறப்படுத்தும் அரசியலும், புல்டோசரை கொண்டு அவர்கள் குடியிருப்பை இடித்து தரைமட்டமாக்கும் செயல்களையும் அதிகாரிகளும் அரசுகளும் செய்து வருகின்றன. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக அந்த நடவடிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. குறிப்பாக சென்னையில் கே.பி.பார்க் பகுதியில் சாதாரண மக்களை அப்புறப்படுத்திவிட்டு 9 அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் மீண்டும் அவர்களுக்கு அந்த இடத்தை கொடுக்க மறுத்து, பல லட்சம் ரூபாய் கேட்டதாக தெரிய வந்ததை அடுத்து, நமது இயக்கம் தலையிட்டு இப்போது அனைவருக்கும் வீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சேறை கிராம மக்கள் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் இடத்திற்கு ஒருபோதும் சிங்கிள் பைசா கூட கொடுக்க மாட்டோம். குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். போலியாக பட்டா பெற்ற சாரநாத பெருமாள் கோயில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருபோதும் சாமி பெயரில் பட்டா கேட்டது கிடையாது. ஆனால் திருச்சேறை பகுதியில் இது போன்ற சம்பவத்தை அதிகாரிகள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கோயில் நிர்வாகம் போலியாக பெற்ற பட்டாக்களை ரத்து செய்து, காலங்காலமாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம், தேவைப்பட்டால் முதலமைச்சரை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார். இந்த போராட்டத்தில் திருச்சேறை கோபுரவாசல், கடைவீதி, கீழவீதி, தெற்குத்தெரு, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கேப்டன் லெட்சுமி தெரு, ஆயக்கார தெரு, மேலக்கடைவீதி, ஓரான்தோப்பு, மருத்துவர் தெரு, உடையார் கோவில், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு, வருவாய் அதிகாரி சக்திதேவி மற்றும் திருச்சேறை கிராம நிர்வாக அலுவலர் நித்யா ஆகியோரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
    1
    பல தலைமுறையாக வாழும் இடத்திற்கு சிங்கிள் பைசா கூட கொடுக்க மாட்டோம் - கோயில் அதிகாரிகளுக்கு உ.வாசுகி எச்சரிக்கை திருச்சேறை கிராம மக்கள் வருவாய் அதிகாரியிடம் மனு

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருச்சேறை கிராமத்தில் 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் 300-க்கும் மேற்பட்ட ஏழை மக்களின் வீட்டு அடிமனைகளை போலி ஆவணங்கள் மூலம் 04.05.2024 அன்று ஸ்ரீ சாரநாத பெருமாள் கோவிலுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட 266 பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும், சட்டவிரோதமாக பட்டா வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கும்பகோணம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை முடிவின்படி அரசுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,
"வீட்டை இடிப்போம், மின் இணைப்பை துண்டிப்போம், குடிநீரை நிறுத்துவோம்" என மிரட்டி, அடிமனை பயனாளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என சித்தரித்து சட்டவிரோதமாக நோட்டீஸ் அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வரும் திருச்சேறை ஸ்ரீ சாரநாத பெருமாள் கோவில் செயல் அலுவலர் மற்றும் கணக்கரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருச்சேறை கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு சங்க செயலாளர் டி.என்.ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்க தலைவர் ஜி.ராமமூர்த்தி, பொருளாளர் ஆர்.ரவி, துணைத் தலைவர்கள் துரை, ரவி, பழனி, சங்கர், துணைச் செயலாளர்கள் பெருமாள், சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தை அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி துவக்கி வைத்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சின்னை.பாண்டியன், சிஐடியு மாநில துணைத் தலைவர் சி.ஜெயபால், விவசாய சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஏ.செல்வம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிவேல், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உ.வாசுகி பேசிய போது 
நாட்டின் பல பகுதிகளில் ஏழை, எளிய நடுத்தர மக்களை அப்புறப்படுத்தும் அரசியலும், புல்டோசரை கொண்டு அவர்கள் குடியிருப்பை இடித்து தரைமட்டமாக்கும் செயல்களையும் அதிகாரிகளும் அரசுகளும் செய்து வருகின்றன. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக அந்த நடவடிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
குறிப்பாக சென்னையில் கே.பி.பார்க் பகுதியில் சாதாரண மக்களை அப்புறப்படுத்திவிட்டு 9 அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் மீண்டும் அவர்களுக்கு அந்த இடத்தை கொடுக்க மறுத்து, பல லட்சம் ரூபாய் கேட்டதாக தெரிய வந்ததை அடுத்து, நமது இயக்கம் தலையிட்டு இப்போது அனைவருக்கும் வீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், திருச்சேறை கிராம மக்கள் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் இடத்திற்கு ஒருபோதும் சிங்கிள் பைசா கூட கொடுக்க மாட்டோம். குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். போலியாக பட்டா பெற்ற சாரநாத பெருமாள் கோயில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருபோதும் சாமி பெயரில் பட்டா கேட்டது கிடையாது. ஆனால் திருச்சேறை பகுதியில் இது போன்ற சம்பவத்தை அதிகாரிகள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கோயில் நிர்வாகம் போலியாக பெற்ற பட்டாக்களை ரத்து செய்து, காலங்காலமாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம், தேவைப்பட்டால் முதலமைச்சரை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் திருச்சேறை கோபுரவாசல், கடைவீதி, கீழவீதி, தெற்குத்தெரு, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கேப்டன் லெட்சுமி தெரு, ஆயக்கார தெரு, மேலக்கடைவீதி, ஓரான்தோப்பு, மருத்துவர் தெரு, உடையார் கோவில், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு, வருவாய் அதிகாரி சக்திதேவி மற்றும் திருச்சேறை கிராம நிர்வாக அலுவலர் நித்யா ஆகியோரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
    user_Ramesh sarangan
    Ramesh sarangan
    கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • தென்காசியில் தேநீர் கடைக்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்! தென்காசி, ஐடிஐ இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனியார் தேநீர் கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஊழியரைத் தாக்கி கடைப்பொருட்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது |காயமடைந்த ஊளழியர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ர் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது
    1
    தென்காசியில் தேநீர் கடைக்குள் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்! 
தென்காசி, ஐடிஐ இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனியார் தேநீர் கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஊழியரைத் தாக்கி கடைப்பொருட்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது 
|காயமடைந்த ஊளழியர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
ர் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது
    user_M SURESH
    M SURESH
    Mechanical Engineering கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.