Shuru
Apke Nagar Ki App…
அம்பாசமுத்திரம் அருகே வெல்டிங் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை நெல்லை மாவட்டம் வி கே புரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் சரவணமாணிக்கம். சொந்தமாக வெல்டிங் கடை நடத்தி வருகிறார் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சரவண மாணிக்கம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வி கே புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
S.Maria selvam
அம்பாசமுத்திரம் அருகே வெல்டிங் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை நெல்லை மாவட்டம் வி கே புரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் சரவணமாணிக்கம். சொந்தமாக வெல்டிங் கடை நடத்தி வருகிறார் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சரவண மாணிக்கம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வி கே புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
More news from Tirunelveli and nearby areas
- மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர்ந்திட நெல்லை மாநகராட்சி 5வது வார்டு பாகம் எண் 27, 28 பாகத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் பிரச்சாரம் வீடு, வீடாக தெரு, தெருவாக வட்டச் செயலாளர் சு.பத்மராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.1
- டாஸ்மாக் கடையின் உட்புற நிலை குறித்து புகார் - Instagram ரீல்ஸில் குமரி மாவட்ட வாலிபரின் குமுறல் * கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுக் கடையின் உட்புற நிலை குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. * குறிப்பாக, ஒரு வாலிபர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. * அழகியமண்டபம் பகுதியில் இருந்து வேர் கிளம்பி செல்லும் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைக்கு உள்ளே செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது. * ஒருவர் மட்டும் நடந்து செல்லும் அளவுக்கு சந்து போல் அமைந்துள்ள அந்த நுழைவுப் பாதை குடிபிரியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. * மது வாங்கிய பிறகு, சிலர் அந்த குறுகிய பாதையின் உள்ளே உள்ள சுவரருகே நின்று மது அருந்தி விட்டு செல்லும் நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது. * இதனால் அந்தப் பகுதி முழுவதும் அசுத்தமாக மாறி, சாக்கடை போன்று காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். * அந்த இடத்தில் சுத்தம் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு மற்றும் நோய் பரவலுக்கான சூழல் உருவாகும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1
- Post by மா.சுடலைமணி1
- மக்காச்சோளம் அதன் குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆக அறிவிக்க வேண்டும் விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 15,000 எழுப்பீடு வழங்க வேண்டும் உழவு மற்றும் வண்டி காளை வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க வேண்டும் கடம்பா வடிகால் ஆக்கிரமிப்பை முழுவதும் அகத்திட வேண்டும் வாய்ப்பாட்டில் மாட்டுவண்டியில் வீட்டு உபயோகத்திற்கு மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியை வறட்சிதொகுதியாக அறிவிக்க வேண்டும்இவ்வாறு தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் தலைவர் ராஜேஷ் உழவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு2
- தூத்துக்குடி: டயபர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் டயபர் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென புகை மற்றும் தீ பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியேறினர். தகவல் அறிந்த உடனே தூத்துக்குடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ வேகமாக பரவாமல் தடுக்க தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை. மின்கசிவு அல்லது தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட ரசாயனப் பொருட்கள் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்ப கட்டத்தில் சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.1
- தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மேலும் இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்1
- விளாத்திகுளம் புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனியில் விவசாயிகளிடம் வசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூரில் விளாத்திகுளம் புதூர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் 2016ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது இதில் கந்தசாமிபுரம் மணியக்காரன் பட்டி மேலஅருணாசலபுரம் துரைச்சாமிபுரம் தவசி லிங்கபுரம் வண்ணிப்பட்டி காடல்குடி ரகுராமபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தநூற்றுக்கணக்கான விவசாயிகள் குழுக்களாக பதிவு செய்து இந்த பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி மூலமாக எட்டையாபுரம் கனரா வங்கியில் சுமார் 31 குழுக்களுக்கு விவசாய கடன் பெற்றுள்ளனர் விவசாயிகள் கனரா வங்கியில் வாங்கிய கடனை வங்கியில் நேரடியாக செலுத்தாமல் தங்களின் நிறுவன மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று கூறி மாதம் விவசாயிகளிடம் இருந்துவசூல் செய்து உரிய முறையில் வங்கியில் செலுத்தாமல் நிறுவனத்தின் சிஇஓபுதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரின் மனைவி பவித்ரா மற்றும் மணியக்காரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் பரமசிவம் மற்றும் கம்பெனியின் தலைவர் சல்லிரெட்டிப்பட்டிகிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மாதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுதா ராணி ஆகியோர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளனர் இதன் காரணமாக கடனை முறையாக செலுத்தாததால் விவசாயிகளுக்கு வங்கியின் சார்பில் நோட்டீஸ் மற்றும் சம்மன் அனுப்பப்பட்டு வழக்கும்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுமேலும் விவசாயத்திற்கான கடன்கள் நகை கடன் கல்விக் கடன் உள்ளிட்ட எந்தவித கடன்களும் வாங்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் மேலும் வங்கி மேற்கொள்ளும் சட்ட ரீதியாக நடவடிக்கைகளும் எதிர்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகிறார்கள் இது குறித்து கம்பெனி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டும் மூன்று ஆண்டுகளாக பணத்தை செலுத்தாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்கள் எனவே மோசடி செய்யப்பட்ட பணத்தை வங்கியில் செலுத்தவலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் 13 8 2025க்குள் 20 லட்சம் வங்கியில் செலுத்துவதாக ஒப்புக்கொண்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் இது குறித்து 21 8 2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் அவர்களிடம் 26/9/2025க்குள் விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய பணத்தை எட்டையாபுரம் கனரா வங்கியில் செலுத்தி விடுவதாக கம்பெனியின் சிஇஓ பவித்ரா தெரிவித்தும் இன்று வரை வங்கியில் செலுத்தவில்லை மேலும் கடந்த 25 8 2025 அன்று மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் தனிப்பிரிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றிலும் புகார் மனு அளிக்கப்பட்டது முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் எங்களை அழைத்து விசாரணை செய்து புகார் மனுவை மாவட்ட குற்ற பிரிவிற்கு அனுப்புவதாக தெரிவித்தனர் ஆனால் இன்று வரை எங்களிடம் எந்த விசாரணையும் நடைபெறவில்லை மேலும் எட்டயபுரம் கனரா வங்கியை நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது மேலும் வங்கி நிர்வாகம் விவசாயிகளை தொடர்ந்து தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் பணத்தை தாங்கள்தான் கட்ட வேண்டும் என்று தொந்தரவு செய்து வருகின்றனர் எனவே மேற்கண்ட புகார் மனுவை விசாரணை செய்து விவசாயிகளிடம் வசூல் செய்த வங்கி கடன்தொகையை வங்கியில் செலுத்தாமல் சுமார் ஒன்றரை கோடிக்கு மேல் மோசடி செய்த கம்பெனியின் சிஇஓ புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரர் என்பவரின் மனைவி பவித்ரா மற்றும் மணியக்காரன் பற்றி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மோகன் பரமசிவம் மற்றும் கம்பெனியின் தலைவர் செல்லி செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மாதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுதா ராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்கு சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகள் படத்தை வங்கியில் திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்க விவசாயிகளை வங்கியின் சட்டபூர்வ நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது1