டாக்டர் டூ மினிஸ்டர்... காரைக்குடி தொகுதி மக்களின் பல்லாண்டு கால ஏக்கத்தை போக்கி அமைச்சராகியுள்ள டி.கே.பிரபு. தவெக சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் டி.கே.பிரபு, நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்று அமைச்சராகி இருக்கிறார். இது கட்சி பேதமின்றி காரைக்குடி தொகுதி மக்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.தேர்தல் முடிவுகள் ஏனென்றால்1952-ல் தொடங்கி இன்று வரை பல தேர்தல்களை சந்தித்த காரைக்குடிக்கு, இப்போது தான் முதல்முறையாக ஒரு அமைச்சர் கிடைத்துள்ளார். தற்போது அமைச்சராகி இருக்கும் காரைக்குடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வான டி.கே.பிரபு, 42 வயதான பல் மருத்துவர் ஆவார். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை என நான்கு தொகுதிகள் இருந்தாலும், சட்டமன்ற தேர்தல் நடக்க துவங்கிய காலத்தில் இருந்தே காரைக்குடிக்கு மட்டும் அமைச்சர் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தான் காரைக்குடி தொகுதிக்கு முதல்முறையாக அமைச்சர் கிடைத்துள்ளார். அமைச்சர் டி.கே.பிரபு தேவகோட்டை அருகே உள்ள இருமதி பகுதியை சேர்ந்தவர் ஆவார். காரைக்குடியில் பல் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரது குடும்பம் அரசியல் பின்னணி கொண்டது தான். இவர் தந்தை பெயர் துரை. கருணாநிதி, காங்கிரஸ் பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்த இவர் முன்னாள் ராணுவ வீரர். டி.கே.பிரபுவின் தாயார் சரஸ்வதி தேவகோட்டை முன்னாள் ஒன்றியத் தலைவர் ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். குடும்பமே அரசியலில் ஊறியிருந்தாலும் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றது ஒரு ஜாக்பாட் என்றால், மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கிடைத்திருப்பது அவருக்கு மட்டுமல்ல காரைக்குடிக்கே கிடைத்திருக்கும் ஒரு மெகா ஜாக்பாட்-ஆகவே பார்க்கப்படுகிறது.அரசியல் கட்டுரை 1952 முதல் 2021-ஆம் ஆண்டு வரை 16 தேர்தல்களைச் சந்தித்த காரைக்குடி தொகுதிக்கு, ஒரு அமைச்சர் கூட இல்லாமல் இருந்த நிலையில், பல ஆண்டுகள் ஏக்கத்தை பிரபு தீர்த்துள்ளதாக செட்டிநாடு மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். மேலும் காரைக்குடிக்கு அத்தியாவசியமான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறர்கள்.

- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சாரம், நில பிரச்சனைகள், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவாக பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.1
- தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.1
- முதல் முப்பது நிமிடங்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது. திரு ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு விஜய் ஆகியோருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் ஆதரவு, மோடி அரசை தெளிவாக பதற்றமடையச் செய்துள்ளது. இந்த காணொளி வெளியான முதல் முப்பது நிமிடங்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது.1
- தமிழ்நாட்டில் முதல்வராக விஜய் பதவியேற்று, அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார். அவர் முழு நம்பிக்கையுடன், கடவுள் பெயரில் அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவரது பதவியேற்பு சமூக வலைதளங்களில் வைரலாகி, மாநில அரசியலில் 'புதிய சகாப்தம்' எனக் கொண்டாடப்படுகிறது.1
- ஸ்பானிய டிவியில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த ஆனா டி அர்மாஸ், தனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'ஜான் விக்' போன்ற அதிரடிப் படங்களிலும், ஆஸ்கர் பரிந்துரை பெற்ற நாடகங்களிலும் ஜொலித்துள்ளார். இவர் தற்போது கலாச்சார ஐகானாகவும், முன்னணி பிராண்டுகளின் உலகளாவிய தூதுவராகவும் திகழ்கிறார்.1
- உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்த கேமராக்கள். - வாயை திறக்காமல் காரில் ஏறிய சம்பவம். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்கும் விழா நடைபெற்றது. இவ்விழா முடிவடையும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் வெளியேறிய போது தொலைக்காட்சி கேமராக்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி சூழ்ந்து கொண்டனர். இதனை துளியும் பொருட்படுத்தாமல் உதயநிதி ஸ்டாலின் மௌனம் காத்து தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.1
- தமிழக சட்டமன்றத்தில் பதவி ஏற்பு விழாவின்போது, முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வணக்கத்தை ஏற்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிகழ்வின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு மரியாதை செலுத்தாதது பதவியை அவமதிப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.1
- தர்மபுரி பாரதிபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழக போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் இவ்வாறு செய்தனர்.1