வரலாற்று நூல்களை வெளியிட்டு மாவட்ட கலெக்டர் வாழ்த்துரை பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2 வரலாற்று நூல்களை வெளியிட்டு மாவட்ட கலெக்டர் வாழ்த்துரை தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அறம் இலக்கிய அமைப்பு மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய வரலாற்று நூல் வெளியீட்டு விழாவிற்க்கு மாவட்ட ஆட்சியர் சதிஷ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராணி வரவேற்று பேசினார். கூட்டுறவு சர்க்கரைஆலை செயலாட்சியர் ரவி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள்-1001 என்ற வரலாற்று நூலை ஆட்சியர் வெளியிட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா பெற்றுக் கொண்டார். சோழன் வென்ற ஈழம் என்ற நூலை முன்னாள் தருமபுரி எம்.பி. மருத்துவர் செந்தில் வெளியிட சமூக ஆர்வலர் ரவிசொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் சதிஷ், தமிழ்நாடு அரசு வரலாற்றுக்கு அதிக முக்கித்துவம் கொடுத்து,கீழடி,பொருநை போன்ற அருங்காட்சியகங்களை உருவாக்கி வரலாற்று தடயங்களை பாதுகாத்து வருகிறது. சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்றைய காலம் வரை தொடர்ச்சியான தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. நூலாசிரியர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வரலாற்று தரவுகளின் அடிப்படையில் இந்த இரு நூல்களையும் உருவாக்கியுள்ளார், இராஜேந்திர சோழன் பற்றி ஆயிரம் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குறியதாகும் வருங்கால மாணவர்கள் இவரது பணிகளை முன்மாதிரியாக கொண்டு வெற்றி பெற வாழ்த்தினார். முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பேசுகையில் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் இக் கல்லூரியின் முன்னாள் மாணவர், இவர் கடந்த ஆறு மாதங்களில் ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார், முக்கியமாக இராஜேந்திர சோழனின் கங்கையும்-கடாரமும்,மற்றும் அரிய தகவல்கள் -1001 போன்ற நூல்கள் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படும் வகையில் மகவும் சிறப்பாக உள்ளன. இதன் மூலம் வரலாற்று களஞ்சியங்களை எளிதாக மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என பாராட்டினார். கல்லூரி மூத்த ஆசிரியர்கள் ரவி, உத்திரபதி, தீர்த்தலிங்கம், லோகநாதன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் வே.சிவக்குமார் வெற்றிஞானசேகரன், சம்பத், சுதாகர்,, சாய்ராம், பாபு, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். அறம் இலக்கிய அமைப்பு தலைவர் மற்றும் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார், அறம் இலக்கிய அமைப்பு செயலாளர் ராசு நன்றியுரையாற்றினார். இவ் விழாவில் பொதுமக்கள், எழுத்தாளர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

- அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி அதிகாலை பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காள பைரவர் அருள்பெற்றனர் தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது இங்கு மாதம்தோறும் தேஸ் பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர் இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டுசந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார் காலபைரவர்தேய்பிறை அஸ்டமி விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது1
- கொட்டும் மலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அரூர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் போக்குவரத்து காவல்துறை, சட்டம் ஒழுங்கு காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இன்று சனிக்கிழமை காலை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர் இந்த பேரணி அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடங்கி அரூர் பைபாஸ் ரோடு வழியாக சென்று மீண்டும் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முடிவடைந்தது கொட்டும் மழை சாரலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து இந்த பேரணியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.1
- ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 09.01.2026 மதியம் 3 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 235 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஜயன் தலைமை வகித்தார். பர்கூர் எம்எல்ஏ மதியழகன் 235 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் கதிரவன். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ். மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி,ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம் குமரேசன் ரஜினி செல்வம்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.1
- தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ் கராத்தே அசோசியேசன் & வேர்ல்டு சோ கியோகுஷின் கராத்தே சார்பாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநில அளவிலான லோ-கிக் கராத்தே கராத்தே போட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. சேலம், ஈரோடு, நாமக்கல் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி , சென்னை, கோயம்புத்தூர் ,வேலூர், திருச்சி ஆகிய மாவட்டத்திலிருந்து 100 மேற்பட்ட கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் மாநில அளவில் நடைபெற்ற லோ-கிக் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் தலைமை பயிற்சியாளர் சின்னுசாமி, யுனிவர்சல் பள்ளியின் தாளாளர் சீனிவாசன்,அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி செல்வக்குமரன், மருத்துவர்கள் கோகுலகிருஷ்ணன், ஸ்ரீபாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களில் தமிழர் மரபு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ராஜம்மாள் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். திரைப்பட நடிகர்கள் பிக் பாஸ் புகழ் ஆரி, அதுல்யா ரவி, பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் விக்னேஷ், நாட்டுப்புற கலை பாடல் பாடகர் அந்தோணி தாசன் கலைக்குழு உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சுமார் 10,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழர் மரபு சமத்துவ பொங்கல் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியினை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே எஸ் ஆர் கல்வி நிறுவன அதிகாரிகள் முதல்வர்கள் ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்1
- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திமுக சாா்பில், வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் பளிங்கு கல்லால் ஆன முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 3 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் மருத்துவரணி மாநில துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி, மு.பெ.கிரி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகரச் செயலா் எ.தயாளன், ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சி.ஆா்.பெருமாள், கே.ஆா்.பழனி, எ.சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா் #TamilNadu #chiefminister #DMK #minister #e.v.Velu #vandavasi #Tiruvannamalai #public #arumalur1
- பாலக்கோடு சார் பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ வைரல் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது, சக்திவேல் என்பவர் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். தேமுதிகவை சேர்ந்த தருமபுரி மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, பத்திர எழுத்தராக உள்ளார். இவர் கடந்த வாரம் பத்திர பதிவு செய்ய பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளார். இவரது ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர், ராஜதுரை சமர்ப்பித்த ஆவணத்தில் வாரிசு சான்றிழதல் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால், வருவாய்த்துறை இணையதளத்தில் சரி பார்த்ததில் ராஜதுரை சமர்பித்த வாரிசு சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்தது, இதனால் இவரது பத்திர பதிவை நிராகரித்தார், ஆனால் ராஜதுரை சார்பதிவாளரை ஆவணத்தை பதிவு செய்யுமாறு மிரட்டி உள்ளார். பத்திரம் பதிவு செய்ய மறுத்ததால், கோபமடைந்த ராஜதுரை பத்திரப்பதிவாளர் சக்திவேல், ஆவணம் பதிவு செய்ய தன்னிடம் பணம் கேட்பதாக சமூக வலைதளங்களில் பொய்யாக தன் மீது அவதூறு பரப்பி, தவறாக விமர்சனம் செய்து வருவதாகவும், தனது பெயருக்கும், பணிக்கும் குந்தகம் ஏற்படுத்தி வரும் ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஜதுரை மிரட்டும் வீடியோ ஆதாரத்துடன் பாலக்கோடு காவல் நிலையத்தில் சார்பதிவாளர் சக்திவேல் புகார் அளித்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சார்பதிவாளரை மிரட்டும் தேமுதிக நிர்வாகியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலிபத்திர பதிவுகளை தடுக்க சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.1
- சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ரஸ்க் கம்பெனி தீ விபத்து ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் காரைக்குடி செஞ்சை சண்முகா நகர் பகுதியில் வணிக பயன்பாட்டிற்கு என்று பதிவு செய்யாமல் வீட்டில் ரஸ்க் கம்பெனி செயல்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் ரஸ்க் கம்பெனியை பூட்டி சீல் வைத்தனர்.ஆனால் மாநகராட்சி சீல் வைத்தும் சட்ட விரோதமாக அதே தளத்தில், ரஸ்க் கம்பெனியில் பணிக்கு இருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மாலை ரஸ்க் கம்பெனியில் இருந்து, அதிக (புகை வந்த நிலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, இதில் ரஸ்க் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்தது.இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். மேலும் ரஸ்க் கம்பெனி பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதற்காக வட மாநில இளைஞர்கள் தங்கி இருந்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- முள்ளங்கி விலை விவசாயிகள் கவலை தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி தற்போது நடைபெற்று வருகிறது விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக முள்ளங்கி விலை குறைந்துள்ளது விவசாயிடமிருந்து ஒரு கிலோ முள்ளங்கி 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வெளி மார்கெட்டுகளில் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகிறது இதனால் விவசாயிகளுக்கு முள்ளங்கி பயிரிட்டு மற்றும் அறுவடை செய்த செய்த அடிப்படை ஆதார விலை கூட கிடைக்காத நிலையில் பலரும் கால்நடைகளுக்கு உணவாக முள்ளங்கிகளை அளித்து வருவது கவலை அளிக்கும் நிகழ்வாக உள்ளது. அரசு ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.1