logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் தாமதம் வாடகை பாக்கி மட்டும் கோடி கணக்கில் உள்ளதாக தகவல் தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் தாமதம் வாடகை பாக்கி மட்டும் கோடி கணக்கில் உள்ளதாக தகவல் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையம் பல்வேறு வணிக வளாகம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் அண்ணா பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இதில் பல கடைகள் வாடகைக்கு எடுத்தவர்கள் திரும்ப ஒப்படைத்து விட்டனர். ஆரம்பம் முதலே அண்ணா பேருந்து நிலையம் கடையில் பல்வேறு பிரச்சனைகளைத் தான் சந்தித்து வருகிறது. தற்போது அண்ணா பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகள் ஒவ்வொரு கடைக்காரரும் பல லட்சங்கள் பாக்கி வைத்துள்ளவர்களும் இருக்கின்றனர் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்தவர்களும் இருக்கிறார்கள் ஆனால் மாநகராட்சி வாடகைக்கு விடும் போது வாடகையை தவறாமல் செலுத்த வேண்டும் என்று உறுதிமொழி பெறுகின்றனர் ஆனால் எந்த ஒரு கடைக்காரரும் வாடகை ஒழுங்காக செலுத்துவது கிடையாது. அதுபோல மாநகராட்சி நிர்வாகம் கடைகளில் தான் வாடகைக்கு விட்டுள்ளது ஆனால் கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் கடையை பெயரளவுக்கு வைத்துக் கொண்டு இரு புறம் வாசல் கொண்ட கடைக்காரர்கள் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து தான் கடை வைத்துள்ளனர் ஆனால் மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது ஏதாவது புகார் என வந்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அண்ணா பேருந்து நிலையத்தில் கடை வாடகை பாக்கி மட்டும் கோடிக்கணக்கில் இருக்கிறது ஆனால் மாநகராட்சியில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஒரு மாதம் கூட சம்பளம் வழங்கியது கிடையாது நான்கு நாள் ஐந்து நாள் கழித்து தான் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள கடை வாடகை கெடுத்தவர்களிடம் பாக்கி தொகை இல்லாமல் வாடகை பாக்கிைய செலுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள மூன்று கடை ஒப்பந்தத்தை ரத்து செய்ய உதவி ஆணையர் அதற்கான கோப்புகள் தயார் செய்து மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவிற்கு அனுப்பி உள்ளார். உடனடியாக அந்த மூன்று கடைக்காரர்களும் அதிகாரத்தில் இருக்கும் நபரை சந்தித்து தங்களது கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தனர் உடனடியாக உதவி ஆணையரிடம் தொடர்பு கொண்டு அதிகாரத்தில் இருக்கும் நபர் நான் கோப்புகளை ஆணை எனக்கு அனுப்பி விட்டு நீங்கள் ஆணையரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று உதவி ஆணையர் கூறிவிட்டார். தற்போது இது தொடர்பாக ஆணையர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தான் கேள்விக்குறியாகவே உள்ளது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடங்கிப் போவாரா ஆணையர் இல்லை அந்த மூன்று கடைக்காரர்களின் உரிமத்தை ரத்து செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுபோல அண்ணா பேருந்து நிலையத்தில் இருபுறம் வாசல் உள்ள கடை ஒரு புறம் சுவர் எழுப்பி முழுமையாக அடைத்து விட வேண்டும் அப்போது தான் ஆக்கிரமிப்பு என்பது கட்டுப்படுத்த முடியும் மாநகராட்சி நிர்வாகம் அண்ணா பேருந்து நிலையத்தில் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் பாரபட்சமின்றி வாடகை பாக்கி வைத்துள்ள கடைக்காரர்களின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் கோரிக்கையாகவே உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள் முதல் சாதாரண பணியாளர்களை தன்னுடைய உறவினர் பெயரிலும் பினாமி பெயரிலும் அண்ணா பேருந்து நிலையத்தில் பல கடைகளை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

18 hrs ago
user_ஜெகஜீவன்
ஜெகஜீவன்
தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
18 hrs ago
de5eccb5-e13d-48c3-bc7e-ac5784ca0b89

தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் தாமதம் வாடகை பாக்கி மட்டும் கோடி கணக்கில் உள்ளதாக தகவல் தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் தாமதம் வாடகை பாக்கி மட்டும் கோடி கணக்கில் உள்ளதாக தகவல் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையம் பல்வேறு வணிக வளாகம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் அண்ணா பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இதில் பல கடைகள் வாடகைக்கு எடுத்தவர்கள் திரும்ப ஒப்படைத்து விட்டனர். ஆரம்பம் முதலே அண்ணா பேருந்து நிலையம் கடையில் பல்வேறு பிரச்சனைகளைத் தான் சந்தித்து வருகிறது. தற்போது அண்ணா பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகள் ஒவ்வொரு கடைக்காரரும் பல லட்சங்கள் பாக்கி வைத்துள்ளவர்களும் இருக்கின்றனர் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்தவர்களும் இருக்கிறார்கள் ஆனால் மாநகராட்சி வாடகைக்கு விடும் போது வாடகையை தவறாமல் செலுத்த வேண்டும் என்று உறுதிமொழி பெறுகின்றனர் ஆனால் எந்த ஒரு கடைக்காரரும் வாடகை ஒழுங்காக செலுத்துவது கிடையாது. அதுபோல மாநகராட்சி நிர்வாகம் கடைகளில் தான் வாடகைக்கு விட்டுள்ளது ஆனால் கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் கடையை பெயரளவுக்கு வைத்துக் கொண்டு இரு புறம் வாசல் கொண்ட கடைக்காரர்கள் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து தான் கடை வைத்துள்ளனர் ஆனால் மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது ஏதாவது புகார் என வந்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அண்ணா பேருந்து நிலையத்தில் கடை வாடகை பாக்கி மட்டும் கோடிக்கணக்கில் இருக்கிறது ஆனால் மாநகராட்சியில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஒரு மாதம் கூட சம்பளம் வழங்கியது கிடையாது நான்கு நாள் ஐந்து நாள் கழித்து தான் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள கடை வாடகை கெடுத்தவர்களிடம் பாக்கி தொகை இல்லாமல் வாடகை பாக்கிைய செலுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள மூன்று கடை ஒப்பந்தத்தை ரத்து செய்ய உதவி ஆணையர் அதற்கான கோப்புகள் தயார் செய்து மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவிற்கு அனுப்பி உள்ளார். உடனடியாக அந்த மூன்று கடைக்காரர்களும் அதிகாரத்தில் இருக்கும் நபரை சந்தித்து தங்களது கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தனர் உடனடியாக உதவி ஆணையரிடம் தொடர்பு கொண்டு அதிகாரத்தில் இருக்கும் நபர் நான் கோப்புகளை ஆணை எனக்கு அனுப்பி விட்டு நீங்கள் ஆணையரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று உதவி ஆணையர் கூறிவிட்டார். தற்போது இது தொடர்பாக ஆணையர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தான் கேள்விக்குறியாகவே உள்ளது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடங்கிப் போவாரா ஆணையர் இல்லை அந்த மூன்று கடைக்காரர்களின் உரிமத்தை ரத்து செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுபோல அண்ணா பேருந்து நிலையத்தில் இருபுறம் வாசல் உள்ள கடை ஒரு புறம் சுவர் எழுப்பி முழுமையாக அடைத்து விட வேண்டும் அப்போது தான் ஆக்கிரமிப்பு என்பது கட்டுப்படுத்த முடியும் மாநகராட்சி நிர்வாகம் அண்ணா பேருந்து நிலையத்தில் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் பாரபட்சமின்றி வாடகை பாக்கி வைத்துள்ள கடைக்காரர்களின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் கோரிக்கையாகவே உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள் முதல் சாதாரண பணியாளர்களை தன்னுடைய உறவினர் பெயரிலும் பினாமி பெயரிலும் அண்ணா பேருந்து நிலையத்தில் பல கடைகளை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • அயோத்தி நன்கொடை விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; நடித்துக் காட்டி ராகுல் காந்தி எதிர்ப்பு! அயோத்தி ராமர் கோவிலில் பெறப்பட்ட நன்கொடை கணக்குகள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து எழுந்துள்ள சர்ச்சை, தற்பொழுது தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இவ்விவகாரத்தைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சி எம்பி-க்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பக்தர்களின் நன்கொடைப் பணம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதையும் அதில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் திருட்டு முறைகேடுகளையும் சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடக பாணியில் நடித்துக் காட்டி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். பக்தர்கள் செலுத்தும் நன்கொடை உண்மையில் சரியான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு வெளிப்படையான விளக்கத்துடன் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டமும், ராகுல் காந்தியின் விசித்திரமான போராட்ட வடிவமும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    2
    அயோத்தி நன்கொடை விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்; நடித்துக் காட்டி ராகுல் காந்தி எதிர்ப்பு!
அயோத்தி ராமர் கோவிலில் பெறப்பட்ட நன்கொடை கணக்குகள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து எழுந்துள்ள சர்ச்சை, தற்பொழுது தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இவ்விவகாரத்தைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சி எம்பி-க்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பக்தர்களின் நன்கொடைப் பணம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதையும் அதில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் திருட்டு முறைகேடுகளையும் சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடக பாணியில் நடித்துக் காட்டி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
பக்தர்கள் செலுத்தும் நன்கொடை உண்மையில் சரியான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு வெளிப்படையான விளக்கத்துடன் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டமும், ராகுல் காந்தியின் விசித்திரமான போராட்ட வடிவமும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • கயத்தாறில் தமிழ் நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் மூவிஸ் சுந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு திமுக பேரூர் கழக செயலாளர் சுரேஷ் கண்ணன்,வருகை புரிந்த அனைவரையும் மாநில துணைத் செயலாளர் சீனிவாச ராகவன்,வரவேற்புரையாற்றினார், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது மாநில செயலாளர் மனோகர் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கயத்தாறு டு தேவர்குளம் சாலையை சீரமைக்க கோரியும், அய்யனார்ஊத்து கிராமத்தில் செயல் பட்டு வரும் கல்கோரியால் அப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்கள் அழிவும் பாதையில் உள்ளது.இதனால் விவசாயிகள் வானம் பார்த்த பூமியாக இருக்கும் இப்பகுதியில் அமையப்பட்டுள்ள கல்கோரியால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் கல்கோரியை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும்அதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை கண்டித்தும், கடந்த 25 -26ஆண்டு பயிர் காப்பீடு திட்டம், வழங்க வேண்டும் எனவும்,முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யவேண்டும், காட்டுப்பன்றி அழிவில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், இப்பகுதியில் உள்ள வேலிக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தவேண்டுமமாவட்ட செயலாளர் மாரீஸ்வரன் மாவட்ட தலைவர் பெரியசாமி ஒன்றிய செயலாளர் அப்துல் ரகுமான் நெல்லை மாவட்ட அவை தலைவர் கிருஷ்ணசாமி பாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜன் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், தமிழ் புலிகள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    3
    கயத்தாறில் தமிழ் நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 
கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் மூவிஸ் சுந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு திமுக பேரூர் கழக செயலாளர் சுரேஷ் கண்ணன்,வருகை புரிந்த அனைவரையும் மாநில துணைத் செயலாளர் சீனிவாச ராகவன்,வரவேற்புரையாற்றினார், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது மாநில செயலாளர் மனோகர் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கயத்தாறு டு தேவர்குளம் சாலையை சீரமைக்க கோரியும், அய்யனார்ஊத்து கிராமத்தில்  செயல் பட்டு வரும் கல்கோரியால் அப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்கள் அழிவும் பாதையில் உள்ளது.இதனால் விவசாயிகள் வானம் பார்த்த பூமியாக இருக்கும் இப்பகுதியில் அமையப்பட்டுள்ள கல்கோரியால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் கல்கோரியை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும்அதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை கண்டித்தும், கடந்த 25 -26ஆண்டு பயிர் காப்பீடு திட்டம்,  வழங்க வேண்டும் எனவும்,முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யவேண்டும், காட்டுப்பன்றி அழிவில்  இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், இப்பகுதியில் உள்ள வேலிக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தவேண்டுமமாவட்ட செயலாளர் மாரீஸ்வரன் மாவட்ட தலைவர் பெரியசாமி ஒன்றிய செயலாளர் அப்துல் ரகுமான் நெல்லை மாவட்ட அவை தலைவர் கிருஷ்ணசாமி பாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜன் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், தமிழ் புலிகள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கோவையில் உள்ள காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரியின் வேளாண்மைத்துறை மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் சார்பில் கிராமப்புற மதிப்பீட்டு நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு வேலாயுதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் தலைமை வகித்து மாணவர்களையும் விவசாயிகளையும் பாராட்டி, கிராம வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பின் அவசியத்தையும், கிராமப்புற மதீப்பீட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மூத்த விவசாயி முருகன் முன்னிலை வகித்தார். டாக்டர் நிவேதிதா தற்போதைய யுகத்தில் வேளாண்மையில் நவீன யுக்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார் நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, காலவரிசை, மேட்ரிக்ஸ், வள வரைபடம், வென் வரைபடம் மற்றும் சமூக வரைபடம் ஆகிய கருவிகளில் தங்களது கருத்துகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், . இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான திட்டமிடல் குறித்து நடைமுறை அனுபவத்தை வழங்கியது. குறிப்பிடத்தக்கது
    2
    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் கோவையில் உள்ள காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரியின் வேளாண்மைத்துறை மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் சார்பில் கிராமப்புற மதிப்பீட்டு நிகழ்ச்சி நடந்தது 
நிகழ்ச்சிக்கு வேலாயுதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் தலைமை வகித்து மாணவர்களையும் விவசாயிகளையும் பாராட்டி, கிராம வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பின் அவசியத்தையும், கிராமப்புற மதீப்பீட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மூத்த விவசாயி முருகன் முன்னிலை வகித்தார். டாக்டர் நிவேதிதா தற்போதைய யுகத்தில் வேளாண்மையில் நவீன யுக்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார் 
நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, காலவரிசை, மேட்ரிக்ஸ், வள வரைபடம், வென் வரைபடம் மற்றும் சமூக வரைபடம் ஆகிய கருவிகளில் தங்களது கருத்துகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், . இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான திட்டமிடல் குறித்து நடைமுறை அனுபவத்தை வழங்கியது. குறிப்பிடத்தக்கது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் *விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...* விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்
    1
    பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
*விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த  விருதுநகர்  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...*
விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார்  500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்
    user_Jeyaram
    Jeyaram
    சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!” சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார். மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார். உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
    1
    கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!”

சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார்.
மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார்.
இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார்.
உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத தனியார் பேருந்து  பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு  ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விடாமல் சென்ற தனியார்  பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஶ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் மாஸ்கோமணி.வழக்குறைஞர். இவர் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மதுரையில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அவர் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது சர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துனர் கூறியுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் ஏன் செல்லாது என மாஸ்கோ மணி கேட்டபோது, ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி பயணிகள் முன்னிலையில் நடத்துனர் அவமரியாதையாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாமல் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சார்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்து ஸ்டீயரிங் பழுதானதால், ஓட்டுநர் சரி செய்து எடுத்து வர 20 நிமிடம் தாமதம் ஆனதால் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துனர் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகார்தாரர் வழக்குறைஞர் என்பதால் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பேருந்து புறப்படும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என அறிவித்து விட்டதால் இதை சேவை குறைபாடாக கருத முடியாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தம் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத தனியார் பேருந்து 

பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு 



ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விடாமல் சென்ற தனியார்  பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஶ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் மாஸ்கோமணி.வழக்குறைஞர். இவர் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மதுரையில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அவர் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது சர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துனர் கூறியுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் ஏன் செல்லாது என மாஸ்கோ மணி கேட்டபோது, ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி பயணிகள் முன்னிலையில் நடத்துனர் அவமரியாதையாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாமல் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சார்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்து ஸ்டீயரிங் பழுதானதால், ஓட்டுநர் சரி செய்து எடுத்து வர 20 நிமிடம் தாமதம் ஆனதால் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துனர் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகார்தாரர் வழக்குறைஞர் என்பதால் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பேருந்து புறப்படும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என அறிவித்து விட்டதால் இதை சேவை குறைபாடாக கருத முடியாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தம் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.