Shuru
Apke Nagar Ki App…
வே. விக்னேஷ்
More news from தமிழ்நாடு and nearby areas
- காஞ்சி மாவட்ட விவசாயிகளுக்கு நேற்று செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மூலம் சூரிய சக்தி கொண்டு இயங்கும் மின் வேலி அமைப்பது பற்றி விவசாயிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப் பயிற்சியில் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் பயிர்களை பாதுகாக்கும் வழிகளை பற்றி செயல் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கரும்பு ஆலை மேலாண் இயக்குனர், கரும்பு மேலாளர் கரும்பு களப்பணி அதிகாரிகள் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதி வாழ் விவசாயிகள் காஞ்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜய் (வயது 22), நாகராஜ் (வயது 21) இவர்கள் இருவரும் நண்பராக உள்ளனர். நாளை கோயில் திருவிழாவிற்காக துணி எடுப்பதற்காக ஆம்பூர் பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு இரும்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு நிலையில் இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 3 விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 15-ககும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தங்க தாரகை, புரட்சி தலைவி அம்மா 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட கழகம், காஞ்சிபுரம் கிழக்கு பகுதி கழகம்,23 வது வார்டு சார்பில் திருவள்ளூவர் தெரு பகுதியில் கிழக்கு பகுதி கழக கைத்தறி பிரிவு செயலாளர் குமார் ஏற்பாட்டில் பகுதி கழக செயலாளர் பாலாஜி முன்னிலையில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் அம்மா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி,பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட கைத்தறி பிரிவு இணை செயலாளர் கோபால்,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன்,பகுதி கழக துணை செயலாளர் கபாலி, உத்திரமேரூர் நகர செயலாளர் ஜெய விஷ்ணு,பகுதி கழக இணை செயலாளர் கோல்டு கணேஷ்,பகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்வகுமார், பகுதி அம்மா பேரவை செயலாளர் வினோத் பாபு சிங்,பகுதி அம்மா பேரவை தலைவர் காஞ்சி ராஜா, பகுதி கழக இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கே. ஸ்ரீதர்,பகுதி வர்த்தக அணி செயலாளர் ராஜா,வட்ட செயலாளர்கள் சம்பத் தனபால், சிவகுமார் ,மோத்திலால், ஆர்.டி.சேகர்,அம்மா பாலு,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி,மற்றும் வட்ட நிர்வாகிகள் சந்திரசேகர்,ராதா பூபதி, சக்திவேல், பாலமுருகன்,தம்பிகா, சந்தானம், ராமசாமி, மகளிரணி நீலாவதி, மாதவி உள்ளிட்டோர் உள்ளனர்1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில் 5- ஆம் ஆண்டுமாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.1
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக துனை ராணுவ படையினர் அணிவகுப்பு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தருமபுரி கோட்டாச்சியர் திருமதி காயத்ரி கொடியசைத்து இப்பேரணியை துவக்கிவைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி செந்தில் நகர், இலக்கியம்பட்டி, அரசு மருத்துவமனை, நேதாஜி சாலைவழியாக நான்கு ரோடு வரை சென்று மாவட்ட விளையாட்டு மைதானம் சென்று நிறைவடைந்தது இப்பேரணியில் கமேண்டோ தலைமையிலான துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்1
- Post by Lingaraju mc6
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர்கோயில் பகுதியில் பெங்களூர் சென்னை ரயில்வே மார்க்கத்தின் அருகில் புதர் போல் இருந்த மஞ்சுபுல் தீப்பற்றி எரிவதை அறிந்த அப்பகுதி மக்கள் ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ரயில் தண்டவாளத்தின் அருகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் தண்டவாளத்தின் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது மேலும் அதே பகுதியில் ஏற்கனவே தண்டவாளத்தின் மீது கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது மற்றொரு முறை இதே போன்று சமூக விரோதிகளால் தண்டவாளம் அருகில் உள்ள மஞ்சுபுல் தீயிட்டு கொளுத்தியது போன்ற தொடர் சமூக விரோத செயல்கள் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் ரயில்வே காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்1