Shuru
Apke Nagar Ki App…
தேர்தல் பணிக்காக துனை ராணுவ படையினர் அணிவகுப்பு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக துனை ராணுவ படையினர் அணிவகுப்பு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தருமபுரி கோட்டாச்சியர் திருமதி காயத்ரி கொடியசைத்து இப்பேரணியை துவக்கிவைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி செந்தில் நகர், இலக்கியம்பட்டி, அரசு மருத்துவமனை, நேதாஜி சாலைவழியாக நான்கு ரோடு வரை சென்று மாவட்ட விளையாட்டு மைதானம் சென்று நிறைவடைந்தது இப்பேரணியில் கமேண்டோ தலைமையிலான துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்
G Krishnan
தேர்தல் பணிக்காக துனை ராணுவ படையினர் அணிவகுப்பு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக துனை ராணுவ படையினர் அணிவகுப்பு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தருமபுரி கோட்டாச்சியர் திருமதி காயத்ரி கொடியசைத்து இப்பேரணியை துவக்கிவைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி செந்தில் நகர், இலக்கியம்பட்டி, அரசு மருத்துவமனை, நேதாஜி சாலைவழியாக நான்கு ரோடு வரை சென்று மாவட்ட விளையாட்டு மைதானம் சென்று நிறைவடைந்தது இப்பேரணியில் கமேண்டோ தலைமையிலான துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் யு.கே.ஜி. முடித்த முதல் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கும் பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் அவார்டு வழங்கும் விழா நடைப்பெற்றது.1
- ஊத்தங்கரை அருகே பல வருடங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலக்கலைப்பு விவசாயி சக்திவேல் பேட்டி. பெரியகவுண்டனூர் கிராமத்தில் லஞ்சம் கேட்டு கொடுக்காததால் விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் இருந்த மின் கம்பிகளை முன்னறிவிப்பு இன்றி துண்டித்த ஏ.டி சத்தியநாராயணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியகவுண்டனூர், எளச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை விவசாயி கணபதி இவர் இலவச மின்சாரத்திற்கு முறையாக 2011 ஆம் வருடம் மனு அளித்து 50 ஆயிரம் பணம் கட்டி காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். விவசாயி கணபதி உடல்நிலை குறைவால் திடீர் என்று இறந்ததினால் அவருடைய மகன் சக்திவேல் தன்னுடைய தந்தை பெயரில் இருந்த விவசாய நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றி தன்னுடைய தந்தை அரசுக்கு கட்டிய பணத்தின் வாரியாக இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும் என பலமுறை ஏ.டி யை அணுகியுள்ளார். ஆனால் அவருக்கு தனக்கு தனியாக பணம் தர வேண்டும் கம்ப்பத்திற்கு பணம், ஜெ.சி.பி, வாடகை, கம்பம் ஏற்றி வர வண்டி வாடகை, வேலை செய்ய வரும் மின்சார பணியாளர்களுக்கு கூலி, மொத்தம் 2 இலட்சம் கொடுத்துள்ளேன் செய்தேன். அதுமட்டுமின்றி மீட்டருக்கு பணம் கட்டியுள்ளேன். இவ்வளவும் பெற்று கொண்டு மின்சாரம் வழங்க வில்லை. மீண்டும் ஒன்றை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏ.டி சத்தியநாராயணன் மற்றும் எல்.ஐ, கனகராஜ் பணம் வேண்டும் என கேட்டார், நான் பணம் தர மறுத்ததால் விவசாயம் நிலத்தில் உள்ள கம்பத்தில் இருந்த மின் கம்பிகளை முன்னறிவிப்பின்றி திடீரென துண்டித்து விட்டனர். பணத்தையும் பெற்றுக் கொண்டு மீட்டர் வைக்காமல் அலையவிடுகின்றனர். இதனால் விவசாய நிலத்தில் உள்ள பூ செடி, பச்சை மிளகாய், தென்னங் கன்றுகள், தண்ணீர் இல்லாமல் காய்ந்து 2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து மாவட்ட நிர்வாகம் மின்சாரத்துறை ஊத்தங்கரை ஏ.டி, யை அழைத்து விசாரித்து என்னுடைய விவசாய நிலத்திற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கண்ணீர் மல்க தெரிவித்தார். இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர்கோயில் பகுதியில் பெங்களூர் சென்னை ரயில்வே மார்க்கத்தின் அருகில் புதர் போல் இருந்த மஞ்சுபுல் தீப்பற்றி எரிவதை அறிந்த அப்பகுதி மக்கள் ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ரயில் தண்டவாளத்தின் அருகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் தண்டவாளத்தின் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது மேலும் அதே பகுதியில் ஏற்கனவே தண்டவாளத்தின் மீது கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது மற்றொரு முறை இதே போன்று சமூக விரோதிகளால் தண்டவாளம் அருகில் உள்ள மஞ்சுபுல் தீயிட்டு கொளுத்தியது போன்ற தொடர் சமூக விரோத செயல்கள் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் ரயில்வே காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாகவும், பெற்றோர்களையும் தரக்குறைவாக பேசி வருவதாக கூறி ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 மாதங்களாக விஜயதாரணி என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பின்னர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாக குழந்தைகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து கேட்க வரும் பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 மாதங்களில் இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் உள்ள மற்ற பள்ளிக்கு அனுப்பி உள்ளதாகவும். கூறப்படுகிறது. தலைமை ஆசிரியையின் நடவடிக்கையால் தற்போது 13 குழந்தைகள் மட்டுமே பயின்று வருவதாகவும், இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், மேலும் கடந்த வாரம் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவரை அடித்து கை வீங்கியதாகவும் அந்த மாணவன் தங்கள் பெற்றோரிடம் கூறியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை வாரத்தில் இருமுறை அடித்தும், தகாத வார்த்தையால் திட்டி வருகிறார். மேலும் அவர் அடித்த குழந்தைகளை பெற்றோர்களிடம் சொல்ல கூடாது என அவர்களுக்கு ரூ.50 பணம் தருகிறேன் என குழந்தைகளிடம் கூறியுள்ளார். என்று கண்ணீர் மல்க கூறினார்கள். பேட்டி :1) ஞானசுந்தரி 2)கோமதி 3) தனசுந்தரி பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள், 4) ஜோதி,காலை உணவு தயாரிப்பாளர்.1
- நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர் நேற்று (மார்ச் 10) அவ்வழியாக சென்று கொண்டிருந்த பள்ளி மாணவி மீது விழுந்ததில் மாணவிக்கு காயங்கள் ஏற்பட்டன. மீண்டும் இதுபோல விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் இது போன்ற பேனர்களை உடனடியாக அகற்ற காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்1
- Post by Lingaraju mc6
- தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம், புதிய புரட்சி கழகம் இனைந்து, நடத்திய மகளிர் தின கொண்டாட்டம், பெண்களுக்கு, புடவை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது, தருமபுரியில் புதிய புரட்சி கழகம், மற்றும் தமிழ்நாடு பெளத்த அறநெறியாளர் சங்கம் சார்பில், தருமபுரி அருகே உள்ள, நாயகன் கொட்டாய் கிராமத்தில், மகளீர் தின கொண்டாட்டம் நடைபெற்றது, மகளீர் தினத்தையொட்டி, புதிய புரட்சி கழக மாநில இளைஞரணி துணை செயலாளர், சுரேஸ் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில், பங்கேற்று பெளத்த அறநெறியாளர் சங்க, தலைவர் தினகரன், பொதுச்செயலாளர், பொன் சசிகுமார், பெளத்த அறநெறி பற்றியும் மகளீர் பெருமை குறித்து பேசினார், பின்னர் நடைபெற்ற, மகளீர் தின விழா, கேக் வெட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, இனிப்புடன் கூடிய புடவைகள் வழங்கப்பட்டன, மேலும் இந்நிகழ்ச்சியில், புதிய புரட்சி கழக நிர்வாகிகள், தலித்குமார், பாவை அஜித், M சுரேஷ், கோவிந்தசாமி, முருகன்,பிரகாஷ், உள்ளிட்ட, நிர்வாகிகள், 100க்கும் மேற்பட்ட, பெண்கள் பங்கேற்று சிறப்பித்தனர்,1
- திருப்பத்தூர் மாவட்டம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் மாநில மாநாடு திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வினை இந்த அமைப்பின் மண்டல செயலாளர் புனித வெள்ளி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த மகளிர் மாநாட்டில் மகளிரை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அடித்தட்டு மட்டத்திலிருந்து தன் சுய திறமையை பயன்படுத்தி சொந்த உழைப்பில் முன்னேறிய மகளிரையும் திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையில் மாநில மற்றும் உலக அரங்கில் சாதனை புரிந்த வீராங்கனைகளை பெருமைப்படுத்தும் விதமாகவும் உள்ளாட்சித் துறையில் நல்லாட்சி புரிந்த ஒன்றிய மற்றும் நகர மன்ற தலைவர்களையும் பெருமைப்படுத்தியும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் கையுறை முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்தும் மகளிரை பெருமைப்படுத்தும் விதமாக விழா நடைபெற்றது இந்த விழாவினை ஐக்கிய சட்ட உரிமைகள் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா சங்கர் வரவேற்புரையாற்றினார் இந்நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பாளர்கள் திருநாவுக்கரசு டிவிஎஸ் சம்பத்குமார் மாவட்ட பொறுப்பாளர்கள் வெங்கடேசன் ஞானசேகரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பின் தலைவர் ராஜ்கமல் மற்றும் அமைப்பின் நிறுவன பொதுச் செயலாளர் A நாகராஜன் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் இறுதியில் வந்திருந்த அனைத்து மகளிர் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோருக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது1
- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எடப்பாடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு... சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்பாடி நகரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் இன்று முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்தினர்... எடப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, கடைவீதி, மேட்டுதெரு, கவுண்டம்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது.நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுத்து சென்றனர்... தேர்தல் காலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கை உறுதி செய்யவும் இந்த அணிவகுப்பு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்...1