Shuru
Apke Nagar Ki App…
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எடப்பாடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு... சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்பாடி நகரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் இன்று முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்தினர்... எடப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, கடைவீதி, மேட்டுதெரு, கவுண்டம்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது.நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுத்து சென்றனர்... தேர்தல் காலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கை உறுதி செய்யவும் இந்த அணிவகுப்பு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்...
Srianand
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எடப்பாடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு... சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்பாடி நகரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் இன்று முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்தினர்... எடப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, கடைவீதி, மேட்டுதெரு, கவுண்டம்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது.நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுத்து சென்றனர்... தேர்தல் காலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கை உறுதி செய்யவும் இந்த அணிவகுப்பு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்...
More news from Salem and nearby areas
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாகவும், பெற்றோர்களையும் தரக்குறைவாக பேசி வருவதாக கூறி ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூமணியூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 மாதங்களாக விஜயதாரணி என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பின்னர் பள்ளி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்து துன்புறுத்துவதாக குழந்தைகள் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து கேட்க வரும் பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 மாதங்களில் இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் உள்ள மற்ற பள்ளிக்கு அனுப்பி உள்ளதாகவும். கூறப்படுகிறது. தலைமை ஆசிரியையின் நடவடிக்கையால் தற்போது 13 குழந்தைகள் மட்டுமே பயின்று வருவதாகவும், இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், மேலும் கடந்த வாரம் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவரை அடித்து கை வீங்கியதாகவும் அந்த மாணவன் தங்கள் பெற்றோரிடம் கூறியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூலாம்பட்டி போலீசார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளை வாரத்தில் இருமுறை அடித்தும், தகாத வார்த்தையால் திட்டி வருகிறார். மேலும் அவர் அடித்த குழந்தைகளை பெற்றோர்களிடம் சொல்ல கூடாது என அவர்களுக்கு ரூ.50 பணம் தருகிறேன் என குழந்தைகளிடம் கூறியுள்ளார். என்று கண்ணீர் மல்க கூறினார்கள். பேட்டி :1) ஞானசுந்தரி 2)கோமதி 3) தனசுந்தரி பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள், 4) ஜோதி,காலை உணவு தயாரிப்பாளர்.1
- நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர் நேற்று (மார்ச் 10) அவ்வழியாக சென்று கொண்டிருந்த பள்ளி மாணவி மீது விழுந்ததில் மாணவிக்கு காயங்கள் ஏற்பட்டன. மீண்டும் இதுபோல விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் இது போன்ற பேனர்களை உடனடியாக அகற்ற காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்1
- தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம், புதிய புரட்சி கழகம் இனைந்து, நடத்திய மகளிர் தின கொண்டாட்டம், பெண்களுக்கு, புடவை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது, தருமபுரியில் புதிய புரட்சி கழகம், மற்றும் தமிழ்நாடு பெளத்த அறநெறியாளர் சங்கம் சார்பில், தருமபுரி அருகே உள்ள, நாயகன் கொட்டாய் கிராமத்தில், மகளீர் தின கொண்டாட்டம் நடைபெற்றது, மகளீர் தினத்தையொட்டி, புதிய புரட்சி கழக மாநில இளைஞரணி துணை செயலாளர், சுரேஸ் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில், பங்கேற்று பெளத்த அறநெறியாளர் சங்க, தலைவர் தினகரன், பொதுச்செயலாளர், பொன் சசிகுமார், பெளத்த அறநெறி பற்றியும் மகளீர் பெருமை குறித்து பேசினார், பின்னர் நடைபெற்ற, மகளீர் தின விழா, கேக் வெட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, இனிப்புடன் கூடிய புடவைகள் வழங்கப்பட்டன, மேலும் இந்நிகழ்ச்சியில், புதிய புரட்சி கழக நிர்வாகிகள், தலித்குமார், பாவை அஜித், M சுரேஷ், கோவிந்தசாமி, முருகன்,பிரகாஷ், உள்ளிட்ட, நிர்வாகிகள், 100க்கும் மேற்பட்ட, பெண்கள் பங்கேற்று சிறப்பித்தனர்,1
- Post by அன்பரசு1
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் யு.கே.ஜி. முடித்த முதல் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கும் பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் அவார்டு வழங்கும் விழா நடைப்பெற்றது.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பேட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தோலம்பதி கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆனந்தூர் பிரதான சாலையை கடந்த பலத்தலை முறைகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாவை மிகவும் குண்டு குளியுமாக இருப்பதால் இந்த சாலையை தார்சாலையாக மாற்றிட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றுள்ளது. ஆனால் தீடிரென அந்தப்பணிகளும் நிறுத்தப்படுள்ளதால் அந்த சாலையில் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வண்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை தார்சாலையாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் பல முறை அனுகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ராமன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கிடப்பில் போட்ட சாலைப்பணிகளை மீண்டும் செயல்படுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் புகார் மனுவினைக் கெடுத்தனர். இது குறித்து பேசிய கிராம மக்கள் மத்தூர் ஒன்றியம் தோலம்பதி கிராத்தில் வசித்து வரும் எங்களுக்கு முறையான சாலை வசதிகள் இன்றி வசித்து வருகிறோம். இந்த நிலையில் கரடுமுரடான சாலையை தார் சாலையாக மாற்றிடும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாசாலையாக மாற்றிட உரிய நிதியும் ஒதிக்கீடு செய்யபட்டும் அதற்கான பணிகளும் நடைப்பெற்ற நிலையில் தீடிரென அந்தபணியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடமும் கேட்டால் முறையான தகவல் ஏதும் இல்லை ஆகையால் கிடப்பில் போடப்பட சாலப்பணியை விரைவாக செயல்படுத்திட வேண்டும் இல்லையில் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டியும், குடும்ப அட்டை, அதார் அட்டைகளை அரசிடம் கொடுத்து விட்டு வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தொப்பம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வரும் முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் அப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளில் சிலருக்கு பாலியல் தொந்தரவு செய்தாகவும், அது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரிடம் பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (06.03.26) புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சிறுமிகளின் பெற்றோர்கள் 09.03.2026 பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததன் பேரில் பள்ளிக்கு சென்ற மணப்பாறை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவியா மற்றும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் குழந்தைகள் நல துறையைச் சேர்ந்த அலுவலர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ஆசிரியர் பாஸ்கர் பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதும் அந்த நிகழ்வை பள்ளியின் தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி யாரிடமும் சொல்லாமல் மறைத்த குற்றத்திற்காகவும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எடப்பாடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு... சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்பாடி நகரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் இன்று முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்தினர்... எடப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, கடைவீதி, மேட்டுதெரு, கவுண்டம்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது.நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுத்து சென்றனர்... தேர்தல் காலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கை உறுதி செய்யவும் இந்த அணிவகுப்பு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்...1