கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து சென்ற 8 பேர் பத்திரமாக இருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் *நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி 95 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்: 37 தமிழர்களின் கதி என்ன? கைலாஷ் - மானசரோவர் யாத்திரை சென்ற நிலையில் பரிதாபம்* காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி 95 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். இதில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை சென்ற தமிழர்கள் 37 பேர் உட்பட 105 இந்தியர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தும் அதன் அண்டை நாடான நேபாளமும் 1,389 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திபெத், நேபாளம் அடிக்கடி மழை வெள்ளம், நிலச்சரிவு, பனிச்சரிவுகளால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாகும். இந்நிலையில், நேற்று காலை சுமார் 9 மணி அளவில் நேபாளத்தின் போட்டே கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில் ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளம், திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா, தாடிங், நுவாகோட், சித்வான் மாவட்டங்கள் வழியாக கரைபுரண்டு ஓடி, பல பாலங்களையும், நீர்மின் திட்ட கட்டுமானங்களையும் சூறையாடியது. ஆற்றங்கரையை ஒட்டிய பல குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சேறும் சகதியும், பல இடிபாடுகளும், பாறை கற்களும் என கரைபுரண்டு ஓடிய வெள்ளம் திமுரே பகுதி வழியாக திரிசூலி ஆற்றில் கலந்தது. ஆற்றங்கரையை ஒட்டிய பல வீடுகள் சேற்றில் புதைந்தன. சில நொடிகளில் சர்வ நாசத்தை ஏற்படுத்திய இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 95 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் உறுதி செய்துள்ளன. இந்த வெள்ளத்தில், சுமார் 400 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 105 இந்தியர்களும் 37 வெளிநாடு வாழ் இந்தியர்களும் அடங்குவர். காணாமல் போன இந்தியர்களில் குறைந்தது 59 பேர் திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகச் சென்ற யாத்ரீகர்கள் என்று டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேரும் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக, காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் அவசரக்காலத் தொடர்பு எண்களை வெளியிட்டது. அதுமட்டுமின்றி, 44 ராணுவ வீரர்கள் உட்பட 80 பாதுகாப்புப் பணியாளர்கள் பல்வேறு இடங்களில் காணாமல் போயுள்ளதாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் பிரதிநிதிகள் சபையில் தெரிவித்தார். திடீர் வெள்ளத்தால் காத்மாண்டுவிலிருந்து சுமார் 125 கிமீ தொலைவில் அமைந்துள்ள ரசுவா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பை தொடர்ந்து உடனடியாக நேபாள ராணுவமும், காவல்துறையும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டன 14 ஹெலிகாப்டர் உட்பட டிரோன், மோப்ப நாய்கள் மூலம் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. பல்வேறு இடங்களில் சிக்கிக்கொண்ட 80க்கும் மேற்பட்டோரை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். 95 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. கோஷி ஆற்றில் ஏற்பட்ட இந்த அழிவுகரமான வெள்ளப்பெருக்கை தொடர்ந்து இந்தியாவில் பீகார், உபி மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டன. கங்கையின் கிளை ஆறுகளான கோஷி, கண்டக் ஆறுகள் நேபாளத்திலும் பீகாரிலும் ஓடுகின்றன. இமயமலையில் உருவாகும் இந்த ஆறுகள் திபெத் வழியாக நேபாளத்தை அடைந்து இந்திய சமவெளி பகுதிகளில் கலக்கிறது. இதனால் பீகாரிலும், உபியிலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். திடீர் வெள்ளப்பெருக்கால் புனித யாத்திரை சென்ற 57 தமிழர்கள் உட்பட 105 இந்தியர்கள் மாயமாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. மீட்பு பணியில் உதவ இந்தியாவும் தேசிய பேரிடர் மீட்பு படையினரையும் நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை விரைவாக மீட்கவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நேபாள அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் குறிப்பிடப்பட்டுள்ளது நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா நேபாளத்தில் நிவாரண பணிகளில் உதவுவதற்காக நிவாரணப் பொருட்களை விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைக்க இந்தியா ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கையின் ஒரு பகுதியாக மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அவசர உதவிகள் நேபாளத்திற்கு அனுப்பப்படும் என அவர்கள் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினர். * இந்திய-நேபாள எல்லையில் எல்லைப் படை எச்சரிக்கை அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, 1,751 கிமீ நீளமுள்ள இந்தியா-நேபாள சர்வதேச எல்லையில் உள்ள தனது அனைத்து பிரிவுகளையும் சஷாஸ்த்ர சீமா பால் (எஸ்எஸ்பி) எனப்படும் எல்லை பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது. எல்லைப் பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள, தயார் நிலையில் உள்ள 7 குழுக்கள் உட்பட மொத்தம் 18 குழுக்கள் அப்படைப்பிரிவிலிருந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் உள்ள காகரா, கர்னாலி மற்றும் மகாகாளி நதிப் படுகைகளை ஒட்டியுள்ள பாதிப்புக்குள்ளாகக்கூடிய மாவட்டங்களும் இந்த துணை ராணுவப் படையினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். நேபாள மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அறிக்கையின்படி, நுவாகோட் மற்றும் ரசுவா மாவட்டங்களில் அமைந்துள்ள, மொத்தம் 354 மெகாவாட் திறன் கொண்ட செயல்பாட்டில் உள்ள 8 நீர்மின் திட்டங்களும், கட்டுமானத்தில் உள்ள 5 திட்டங்களும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. நுவாகோட் பகுதியில் உள்ள பெட்ராபதியையும், ரசுவா பகுதியில் உள்ள ரசுவாகாதி எல்லைப் பகுதியையும் இணைக்கும் 42 கிமீ நீளமுள்ள சாலையை வெள்ளம் அடித்துச் சென்றதாக காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட பாலங்களும் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவலின்படி, காட்டாற்று வெள்ளத்தால் 291 வெளிநாட்டினர் மற்றும் 93 நேபாள நாட்டினர் உட்பட மொத்தம் 384 பேர் காணாமல் போயுள்ளனர். இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களைத் தவிர, மற்ற சுற்றுலாப் பயணிகள் அமெரிக்கா, மலேசியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் இமயமலையில் பாதிப்பு நேபாளம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கிய இமயமலைப் பகுதி, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக, உலகின் பிற பகுதிகளை விட இப்பகுதி வேகமாக வெப்பமடைந்து வருவதே இதற்குக் காரணம். இப்பகுதியில் வெப்ப அலைகள், கனமழை மற்றும் பனிப்பாறைகள் உருகுதல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்து குஷ் இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாகவும், குறிப்பாக உலகளாவிய வெப்பநிலை உயர்வு மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக 2000ம் ஆண்டு முதல் பனி இழப்பு விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் காத்மாண்டுவைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கண்டறிந்தனர். * இந்தியர்களை மீட்க நடவடிக்கை வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு விரைவான மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குவதற்காக, நேபாள அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். நேபாள அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளது. நேபாளத்திலும் திபெத் எல்லையிலும் நிமிடத்தில் அனைத்தையும் சர்வநாசம் செய்த காட்டாற்று வெள்ளக்காட்சிகளின் சிசிடிவி காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைத்தது. நேபாளத்தில் நுழையும் முன்பாக திபெத்-நேபாள எல்லையில் கிரிசாங் துறைமுகத்தை காட்டாற்று வெள்ளம் சூறையாடிய வீடியோ காட்சிகளை சீன அரசு செய்தி நிறுவனமான சின்குவா வெளியிட்டது. சீனா-நேபாள வர்த்தகத்தின் முக்கிய இடமாக கருதப்படும் கிரிசாங் துறைமுகத்தில் சீனா பல கோடி முதலீடு செய்து பிரமாண்ட கட்டிடத்தை கட்டி உள்ளது. மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இப்பகுதியில் நேற்று காலை பல ஊழியர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வெள்ள அபாய எச்சரிக்கையை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உயிர் பிழைக்க தப்பி ஓடினர். சிலர் கார்களில் தப்ப முயன்றனர். அந்த சமயத்தில் சினிமாக்களில் வரும் கிராபிக் காட்சிகளைப் போல காட்டாற்று வெள்ளம் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரமாண்ட கட்டிடத்தையும் அங்கிருந்த மக்கள் அனைவரையும் சூறையாடிச் சென்றது. வெள்ள நீருடன் சேறும் சகதியும் பாறைக் கற்களும் அந்த இடத்தையே தரைமாட்டமாக்கின. கிரிசாங் பகுதியில் பெரிய அளவில் சேதமும், உயிரிழப்புகளும் நடந்திருப்பதாக சீன அதிபர் ஜின்பிங் கவலை தெரிவித்துள்ளார். இதே போல நேபாளத்தில் மலைகளுக்கு நடுவே குறுகலான ஆற்றுப்பகுதியில் இருபுறமும் குடியிருப்பு கட்டிடங்களையும், கார்களையும் வாரி சுருட்டி வெள்ளம் பாய்ந்து சென்ற வீடியோக்களும் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இரும்பு பாலங்களும், கான்கிரீட் பாலங்களும் கண நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இது புவி வெப்பமாவதின் பயங்கர விளைவுகளை கண்முன் காட்டும் விதமாக இருந்தது. * வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எப்படி? நேபாளத்தில் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ரசுவா பகுதியில் பெய்த மழையினால் ஏற்படவில்லை என அந்நாட்டு நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட ஆரம்பக்கட்ட அறிக்கைகளின்படி, திபெத்-ரசுவாகாதி எல்லைப் பகுதியிலிருந்து 20 கிமீ தொலைவில், நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் இருந்த நிலையற்ற பனிமலைப் பாறை பகுதிகளில் ஏற்பட்ட பாறைச் சரிவு காரணமாகவே இந்தத் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பாறைச் சரிவு மற்றும் நேபாள-திபெத் எல்லையில் அமைந்துள்ள லெண்டே ஆற்றில் ஏற்பட்ட நீர்வரத்து அதிகரிப்பு ஆகியவற்றால், திமுரே பகுதியில் போட்டே கோஷி ஆறு வழியாக இந்த காட்டாற்று வெள்ளம் திரிசூலி ஆற்றில் கலந்ததாக நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நேபாளப் பகுதியில் உள்ள பனிப்பாறையிலிருந்து விழுந்த பனி மற்றும் பாறைச் சரிவு ஆற்றை மறித்து, பின்னர் திடீரென நீரோட்டத்தை கீழ்நோக்கிப் பாயச் செய்ததே கடும் வெள்ளப்பெருக்குக்கு காரணமாக அமைந்ததாக நிபுணர்கள் கூறி உள்ளனர் வெப்பமடைந்து வரும் இமயமலைப் பகுதியில், முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த பேரிடர் உணர்த்துவதாக அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் இதேபோன்ற திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, மலைப்பகுதியில் நிலவிய அதிக வெப்பம் காரணமாக திபெத்தில் இருந்த பனிப்பாறை ஏரி நிரம்பி வழிந்ததே வெள்ளத்திற்கு காரணமாக இருப்தது. வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன், இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. * உதவி எண்கள் அறிவிப்பு தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களோ, தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். உதவி எண்கள் விவரம்: இந்தியாவிற்குள் 18003093793, வெளிநாடு +91 8069009900 (மிஸ்ட் கால்), தொடர்புக்கு +91 8069009901, தமிழ்நாடு இல்லம் டெல்லி 9289516712 (கட்டுப்பாட்டு அறை) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சுற்றுலா இடங்களை ஆராயுங்கள் * தமிழர்கள் சென்ற 2 பஸ்கள் மாயம் தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 57 பயணிகளும் கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் செயல்படும் சூப்பர் யாத்திர ஏஜென்சி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் பயணம் மேற்கொண்டோர் திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இதில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் உட்பட 17 பேர் கும்பகோணத்தில் இருந்து கடந்த 23ம் தேதி சென்னை விமான நிலையம் புறப்பட்டு சென்றனர். மற்றவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு தனியாக சென்றுவிட்டனர். இவர்கள் காத்மாண்டுவில் இறங்கி, அங்கிருந்து 3 பஸ்களில் நேபாளம்-சீனா எல்லை அருகே சென்று கொண்டிருந்தபோது வெள்ளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பஸ்களும் சிக்கி உள்ளன அதில் ஒரு பஸ்சில் பயணம் செய்த 20 பேர் தப்பி கரை ஒதுங்கி உள்ளனர். மீதமுள்ள 2 பஸ்சில் பயணம் செய்த 37 பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை. தற்போது சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற ஏஜென்சியை அவர்களது உறவினர்கள் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். நேபாளத்தில் பல பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து சென்ற 8 பேர் பத்திரமாக இருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

- திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் தரிசனம்! சென்னை, ஆக.27:- திருவொற்றியூர் திருத்தலங்களில் ஒன்றான பட்டினத்தார் திருக்கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீர் தரிசனம் மேற்கொண்டார். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு அவர் அவ்வப்போது வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் பட்டினத்தார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தது ஆன்மீக பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.1
- நேபாளில் வெள்ளம் கோரத்தாண்டவம்..... சோகம் நிறைந்த மக்கள்....1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் தனியார் கம்பனி கேட்டில் நாய் சிக்கியது தீ அணைப்பு வீரர்கள் நாயை மீட்டனர் *திருப்பத்தூர் மாவட்டம்* *தேவலாபுரத்தில் தொழிற்சாலை கேட்டில் சிக்கிய நாய் - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 26) தனியார் தொழிற்சாலை ஒன்றின் இரும்பு கேட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் உதவியுடன் கட்டர் மூலம் கேட் கம்பியை அறுத்து நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.1
- காணாமல் போன மலைகள் குறித்து அமைச்சர் பேச்சு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் என குறிப்பிட்டது மக்களிடையே அதிர்ச்சி காணாமல் போன மலைகள்” ,மலை வளங்கள் அழிக்கப்பட்டு வருவது குறித்து அமைச்சர் புகைப்படங்களுடன் கூடிய ஆதாரங்களை சுட்டிக்காட்டி விளக்கமாகப் பேசினார். அப்போது, மலைகள் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான புகைப்படங்களை சட்டசபையில் காண்பித்து, அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தது சமூக வலைத்தளங்களில் பரவியது . இதில், #திருப்பத்தூர் மாவட்டம் – #ஆம்பூர் எனக் குறிப்பிட்டு அமைச்சர் பேசியது திருப்பத்தூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் பகுதியில் மலை வளங்கள் மற்றும் இயற்கைச் சூழல் தொடர்பாக அமைச்சர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது கவனம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் குறிப்பிட்ட புகைப்படங்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.1
- லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நந்தி மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்1
- மறைந்த அ.தி.மு.க. நிர்வாகி பாபு படத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்ட பொறுப்பாளர் சி.பி.மூவேந்தன் மலர்தூவி அஞ்சலி! சென்னை, ஆக.26:- ஆர்.கே.நகர் 42-வது வட்டம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் மறைந்த வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட முன்னாள் அம்மா பேரவை செயலாளர் இ.பாபுவின் திருவுருவப் படத்திறப்பு விழா கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கே.பாலசுப்பிரமணி தலைமை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான டி.ஜெயக்குமார், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட பொறுப்பாளரும், கழக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளருமான டாக்டர் சி.பி.மூவேந்தன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மறைந்த இ.பாபுவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் நேதாஜி கணேசன், ஜனார்த்தனன், சந்தனசிவா, எஸ்.எம்.மாரிமுத்து, ஏ.டி.அரசு, லட்சுமி சிவகுமார், பி.ஜெகன், கவுனர்கான், ஓ.ஏ.ரவிராஜன், வண்ணை கணபதி, பவானி வெங்கடேசன், பகுதி துணை செயலாளர், லயன் ஈ.சண்முகவினாயகம், வட்ட கழக செயலாளர்கள் ஜெசிபிஎஸ் சுரேஷ், எம். சீனிவாசன், வி.எஸ். புருஷோத்தமன், ஆர்.சிவகுமார், கே.எஸ்.மூர்த்தி,லிங்கேசன், அருண்பிரசாத், மற்றும் நிர்வாகிகள் டி.ஹரிதாஸ், ஏ.ஆர். ஏழுமலை, வேலுமேஸ்திரி, ஜி.ராஜசேகரன், எம்.ஜெய்சங்கர், டி.கேப்ரியல், இரா.முரளிமுருகன், எம். கண்ணியப்பன், ஜீவிதா, ஜி.எச்.ரமேஷ், மனோகரன், நாகலிங்கம், சங்கீதா, விஜி, சி.பாலு,எல்.பெரியசாமி, ஆர்.விஸ்வநாதன், எம். ஹரிகிருஷ்ணன், தா.மணிமாறன், மற்றும் மறைந்த பாபுவின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.1