logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலையேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எர்த் மூவர்ஸ் வாகன உரிமையாளர்கள், தமிழ்நாடு முழுவதும் 22.06.2026 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 24.06.2026 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் முக்கிய நோக்கம் வாடிக்கையாளர்களுக்கான வாடகையை உயர்த்துவது குறித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவதுமாகும். இந்த வேலை நிறுத்தத்தின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில், வாகனங்களுக்கான லைஃப் டாக்ஸ் முறையை ரத்து செய்து பழைய முறையையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதும், வெளிமாநில வாகனங்கள் சங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவான கட்டணத்தில் இயங்கக்கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டது. மேலும், அரசு வேலை மற்றும் அரசு ஒப்பந்த வேலைகளில் 80% உள்ளூர் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அத்துடன் புதிய வாகனங்கள், உதிரிபாகங்கள் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து எர்த் மூவர்ஸ் வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான வாடகையை நிர்ணயம் செய்து, அதை அனைத்து மாவட்டங்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. தவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராவல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், அரசு ஒப்பந்தப் பணிகள், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பொதுப்பணித்துறை அனைத்திலும் தற்போதுள்ள பேக்கேஜ் முறையை ரத்து செய்து மீண்டும் பழைய முறையையே பின்பற்ற வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஏ. ஜான் தலைமை தாங்கினார். செயலாளர் முருகானந்தம், பொருளாளர் நாகராஜ், துணைத் தலைவர் சடையாண்டி மற்றும் இணைச் செயலாளர் ஜஸ்டின் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளான சின்னாளப்பட்டி, கொடைரோடு, நிலக்கோட்டை, காரமடை, ஒட்டன்சத்திரம், வடமதுரை, அய்யலூர், சாணார்பட்டி, கோபால்பட்டி ஆகிய இடங்களைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் பங்கேற்று தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

11 hrs ago
user_Natarajan Pitchaimani
Natarajan Pitchaimani
Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
11 hrs ago
3e1ae4ab-12d7-4da4-b83f-543f4fb1cf5b

டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலையேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எர்த் மூவர்ஸ் வாகன உரிமையாளர்கள், தமிழ்நாடு முழுவதும் 22.06.2026 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 24.06.2026 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் முக்கிய நோக்கம் வாடிக்கையாளர்களுக்கான வாடகையை உயர்த்துவது குறித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவதுமாகும். இந்த வேலை நிறுத்தத்தின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில், வாகனங்களுக்கான லைஃப் டாக்ஸ் முறையை ரத்து செய்து பழைய முறையையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதும், வெளிமாநில வாகனங்கள்

சங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவான கட்டணத்தில் இயங்கக்கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டது. மேலும், அரசு வேலை மற்றும் அரசு ஒப்பந்த வேலைகளில் 80% உள்ளூர் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அத்துடன் புதிய வாகனங்கள், உதிரிபாகங்கள் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து எர்த் மூவர்ஸ் வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான வாடகையை நிர்ணயம் செய்து, அதை அனைத்து மாவட்டங்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. தவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராவல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், அரசு ஒப்பந்தப் பணிகள், ஊரக வளர்ச்சித் துறை

f0d02337-8094-4d5a-b8f0-573844353aa9

மற்றும் பொதுப்பணித்துறை அனைத்திலும் தற்போதுள்ள பேக்கேஜ் முறையை ரத்து செய்து மீண்டும் பழைய முறையையே பின்பற்ற வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஏ. ஜான் தலைமை தாங்கினார். செயலாளர் முருகானந்தம், பொருளாளர் நாகராஜ், துணைத் தலைவர் சடையாண்டி மற்றும் இணைச் செயலாளர் ஜஸ்டின் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளான சின்னாளப்பட்டி, கொடைரோடு, நிலக்கோட்டை, காரமடை, ஒட்டன்சத்திரம், வடமதுரை, அய்யலூர், சாணார்பட்டி, கோபால்பட்டி ஆகிய இடங்களைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் பங்கேற்று தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலையேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எர்த் மூவர்ஸ் வாகன உரிமையாளர்கள், தமிழ்நாடு முழுவதும் 22.06.2026 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 24.06.2026 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் முக்கிய நோக்கம் வாடிக்கையாளர்களுக்கான வாடகையை உயர்த்துவது குறித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவதுமாகும். இந்த வேலை நிறுத்தத்தின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில், வாகனங்களுக்கான லைஃப் டாக்ஸ் முறையை ரத்து செய்து பழைய முறையையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதும், வெளிமாநில வாகனங்கள் சங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவான கட்டணத்தில் இயங்கக்கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டது. மேலும், அரசு வேலை மற்றும் அரசு ஒப்பந்த வேலைகளில் 80% உள்ளூர் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அத்துடன் புதிய வாகனங்கள், உதிரிபாகங்கள் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து எர்த் மூவர்ஸ் வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான வாடகையை நிர்ணயம் செய்து, அதை அனைத்து மாவட்டங்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. தவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராவல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், அரசு ஒப்பந்தப் பணிகள், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பொதுப்பணித்துறை அனைத்திலும் தற்போதுள்ள பேக்கேஜ் முறையை ரத்து செய்து மீண்டும் பழைய முறையையே பின்பற்ற வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஏ. ஜான் தலைமை தாங்கினார். செயலாளர் முருகானந்தம், பொருளாளர் நாகராஜ், துணைத் தலைவர் சடையாண்டி மற்றும் இணைச் செயலாளர் ஜஸ்டின் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளான சின்னாளப்பட்டி, கொடைரோடு, நிலக்கோட்டை, காரமடை, ஒட்டன்சத்திரம், வடமதுரை, அய்யலூர், சாணார்பட்டி, கோபால்பட்டி ஆகிய இடங்களைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் பங்கேற்று தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
    3
    டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலையேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எர்த் மூவர்ஸ் வாகன உரிமையாளர்கள், தமிழ்நாடு முழுவதும் 22.06.2026 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 24.06.2026 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் முக்கிய நோக்கம் வாடிக்கையாளர்களுக்கான வாடகையை உயர்த்துவது குறித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவதுமாகும்.

இந்த வேலை நிறுத்தத்தின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில், வாகனங்களுக்கான லைஃப் டாக்ஸ் முறையை ரத்து செய்து பழைய முறையையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதும், வெளிமாநில வாகனங்கள் சங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவான கட்டணத்தில் இயங்கக்கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டது. மேலும், அரசு வேலை மற்றும் அரசு ஒப்பந்த வேலைகளில் 80% உள்ளூர் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அத்துடன் புதிய வாகனங்கள், உதிரிபாகங்கள் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து எர்த் மூவர்ஸ் வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான வாடகையை நிர்ணயம் செய்து, அதை அனைத்து மாவட்டங்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. தவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராவல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், அரசு ஒப்பந்தப் பணிகள், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பொதுப்பணித்துறை அனைத்திலும் தற்போதுள்ள பேக்கேஜ் முறையை ரத்து செய்து மீண்டும் பழைய முறையையே பின்பற்ற வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஏ. ஜான் தலைமை தாங்கினார். செயலாளர் முருகானந்தம், பொருளாளர் நாகராஜ், துணைத் தலைவர் சடையாண்டி மற்றும் இணைச் செயலாளர் ஜஸ்டின் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளான சின்னாளப்பட்டி, கொடைரோடு, நிலக்கோட்டை, காரமடை, ஒட்டன்சத்திரம், வடமதுரை, அய்யலூர், சாணார்பட்டி, கோபால்பட்டி ஆகிய இடங்களைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் பங்கேற்று தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • Post by Sangili.v
    1
    Post by Sangili.v
    user_Sangili.v
    Sangili.v
    Architect வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் எம்.வி. முத்தையா மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று (25.06.2026) ஒரு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர். அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வியின் அவசியம் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும் மாணவிகளுடன் இணைந்து இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் எம்.வி. முத்தையா மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று (25.06.2026) ஒரு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர். அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வியின் அவசியம் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும் மாணவிகளுடன் இணைந்து இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • சிங்கம்புணரி அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ சூலக்கரை காளியம்மன் கோவிலின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முதல் நாளான புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு யாகசாலையில் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை மற்றும் மகா கணபதி ஹோமம் தொடங்கின. அன்று மாலையில் மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை காலை 6 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, புனித கலச ஊர்வலம், கோபுர அபிஷேகம் மற்றும் மூலவர் அபிஷேகம் ஆகியவை பக்தர்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடந்தேறின. இவ்விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கருப்பூர் குலாலர் பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து செய்திருந்தனர்.
    1
    சிங்கம்புணரி அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ சூலக்கரை காளியம்மன் கோவிலின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முதல் நாளான புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு யாகசாலையில் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை மற்றும் மகா கணபதி ஹோமம் தொடங்கின. அன்று மாலையில் மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது.

விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை காலை 6 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, புனித கலச ஊர்வலம், கோபுர அபிஷேகம் மற்றும் மூலவர் அபிஷேகம் ஆகியவை பக்தர்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடந்தேறின. இவ்விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கருப்பூர் குலாலர் பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து செய்திருந்தனர்.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    49 min ago
  • தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், இந்தியாவின் உயரிய விருதான "கீர்த்தி சக்கரா" விருதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றுள்ளார். இந்த நிலையில், மீனாட்சி சுந்தரத்தின் சொந்த ஊரான காமயகவுண்டன்பட்டியில் அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவிப்பதற்காக இன்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தேனி மாவட்டம் தேனிக்கு வருகை தந்தார். அப்போது, இந்து மக்கள் கட்சியின் தொண்டரணி மாநிலத் துணைத் தலைவர் குரு அய்யப்பன் தலைமையில், கட்சித் தொண்டர்கள் நிறுவனத் தலைவருக்கு மாலை அணிவித்து அமோக வரவேற்பு அளித்தனர்.
    1
    தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், இந்தியாவின் உயரிய விருதான "கீர்த்தி சக்கரா" விருதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றுள்ளார்.

இந்த நிலையில், மீனாட்சி சுந்தரத்தின் சொந்த ஊரான காமயகவுண்டன்பட்டியில் அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவிப்பதற்காக இன்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தேனி மாவட்டம் தேனிக்கு வருகை தந்தார். அப்போது, இந்து மக்கள் கட்சியின் தொண்டரணி மாநிலத் துணைத் தலைவர் குரு அய்யப்பன் தலைமையில், கட்சித் தொண்டர்கள் நிறுவனத் தலைவருக்கு மாலை அணிவித்து அமோக வரவேற்பு அளித்தனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை சாலையில் நகராட்சி பணியாளர்களால் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை நோயாளிகள் என அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குப்பைகள் தேங்குவதால் துர்நாற்றம் பரவுவதோடு, பன்றிகள் மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்து, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியின் மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் அப்பகுதியை கடக்கும்போது மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. மேலும், சாலையின் எதிர்புறத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகளும் இந்த துர்நாற்றத்தால் கடுமையான சிரமத்துடன் சிகிச்சை பெறும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த துர்நாற்றத்தினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அவலநிலைக்கு உடனடியாக தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை சாலையில் நகராட்சி பணியாளர்களால் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை நோயாளிகள் என அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குப்பைகள் தேங்குவதால் துர்நாற்றம் பரவுவதோடு, பன்றிகள் மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்து, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியின் மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் அப்பகுதியை கடக்கும்போது மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.

மேலும், சாலையின் எதிர்புறத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகளும் இந்த துர்நாற்றத்தால் கடுமையான சிரமத்துடன் சிகிச்சை பெறும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த துர்நாற்றத்தினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அவலநிலைக்கு உடனடியாக தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று (ஜூன் 24) உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டன. முருகப்பெருமான் ஊஞ்சலில் எழுந்தருளிய பின்னர், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இந்த ஆனி ஊஞ்சல் திருவிழா ஜூன் 29 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. திருவிழாவின் நிறைவு நாளான ஜூன் 29 ஆம் தேதி, மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அன்றைய தினம் மாலையில் முருகப்பெருமான் சிம்மாசன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். இந்த உற்சவ திருவிழாவில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று (ஜூன் 24) உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டன. முருகப்பெருமான் ஊஞ்சலில் எழுந்தருளிய பின்னர், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இந்த ஆனி ஊஞ்சல் திருவிழா ஜூன் 29 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. திருவிழாவின் நிறைவு நாளான ஜூன் 29 ஆம் தேதி, மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அன்றைய தினம் மாலையில் முருகப்பெருமான் சிம்மாசன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். இந்த உற்சவ திருவிழாவில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    13 hrs ago
  • வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட குரும்பபட்டி கிராமத்தில் வசிக்கும் சுமார் 130 குடும்பத்தினர் தங்கள் ஊரின் முத்தாலம்மன் கோவில் திருவிழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர். ஜூன் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் செவ்வாய், புதன், வியாழன் என மூன்று நாட்கள் நடைபெற்று வரும் இந்தத் திருவிழாவில், இன்றைய நாளான புதன்கிழமை அன்று காலை மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்தல் போன்ற சடங்குகளுடன், தப்பாட்டம் மற்றும் பறை இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இளம் பெண்கள் அவரவர் சேர்ந்த நபர்களுடன், 'செட்டு சேலை பசங்க செட்டு' மற்றும் 'டீ செட்' போன்ற குழுக்களாகப் பிரிந்து, உற்சாகமாக விழாவில் பங்கேற்று வருகின்றனர். மேலும், இன்று இரவு ஒன்பது மணி அளவில் முத்தாலம்மன் என்னும் நாடகம் நடைபெறவுள்ளது.
    1
    வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட குரும்பபட்டி கிராமத்தில் வசிக்கும் சுமார் 130 குடும்பத்தினர் தங்கள் ஊரின் முத்தாலம்மன் கோவில் திருவிழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர். ஜூன் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் செவ்வாய், புதன், வியாழன் என மூன்று நாட்கள் நடைபெற்று வரும் இந்தத் திருவிழாவில், இன்றைய நாளான புதன்கிழமை அன்று காலை மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்தல் போன்ற சடங்குகளுடன், தப்பாட்டம் மற்றும் பறை இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இளம் பெண்கள் அவரவர் சேர்ந்த நபர்களுடன், 'செட்டு சேலை பசங்க செட்டு' மற்றும் 'டீ செட்' போன்ற குழுக்களாகப் பிரிந்து, உற்சாகமாக விழாவில் பங்கேற்று வருகின்றனர். மேலும், இன்று இரவு ஒன்பது மணி அளவில் முத்தாலம்மன் என்னும் நாடகம் நடைபெறவுள்ளது.
    user_Sangili.v
    Sangili.v
    Architect வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.