மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நாளை மறுநாள் ( ஏப்.23) நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய உள்ள நுண் பார்வையாளர்கள் (Micro Observer)வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலை-1, நிலை-2, நிலை-3 மற்றும் காவல்துறையினர் ஆகியோர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் சமர்த் வர்மா,(188 - மேலூர் மற்றும் 189- மதுரை கிழக்கு) வேத் பதி மிஸ்ரா, (190- சோழவந்தான், 197- உசிலம்பட்டி) அந்தரா ஆச்சார்யா, அவர்கள்(191- மதுரை வடக்கு, 194- மதுரை தெற்கு) தினேஷ் குமார், (193- மதுரை மத்திய, 194- மதுரை மேற்கு) மிங்மா டி. ஷெர்பா, (195–திருப்பரங்குன்றம் மற்றும் 196–திருமங்கலம்) ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார்,மாநகர காவல் ஆணையாளர் அபிஷேக் தீக்சித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஏப்.21) காலை மூன்றாம்/இறுதி கட்ட சுழற்சி முறை (Randomization) மேற்கொள்ளப்பட்டு, அச்சிடப்படும் பணியினை பார்வையிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நாளை மறுநாள் ( ஏப்.23) நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய உள்ள நுண் பார்வையாளர்கள் (Micro Observer)வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலை-1, நிலை-2,
நிலை-3 மற்றும் காவல்துறையினர் ஆகியோர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் சமர்த் வர்மா,(188 - மேலூர் மற்றும் 189- மதுரை கிழக்கு) வேத் பதி மிஸ்ரா, (190- சோழவந்தான், 197- உசிலம்பட்டி) அந்தரா ஆச்சார்யா, அவர்கள்(191- மதுரை வடக்கு, 194- மதுரை தெற்கு) தினேஷ் குமார், (193- மதுரை மத்திய, 194- மதுரை மேற்கு)
மிங்மா டி. ஷெர்பா, (195–திருப்பரங்குன்றம் மற்றும் 196–திருமங்கலம்) ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார்,மாநகர காவல் ஆணையாளர் அபிஷேக் தீக்சித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஏப்.21) காலை மூன்றாம்/இறுதி கட்ட சுழற்சி முறை (Randomization) மேற்கொள்ளப்பட்டு, அச்சிடப்படும் பணியினை பார்வையிட்டனர்.
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- விருதுநகர் மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணி உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைய இருக்கிறது. அதனால் அமைச்சர் தங்கம் தென்னரசு மல்லாங்கிணறு பகுதிகளுக்குட்பட்ட திம்மன்பட்டி, சூரம்பட்டி, வலையங்குளம், முடியனூர், கோவில்பட்டி, அயன்ரெட்டியாபட்டி பகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் , மல்லாங்கிணறு பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்தது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார். அப்போது காரியாபட்டி, வெற்றிலை முருகன் பட்டியை சேர்ந்த அதிமுகவினர் 5-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டானம் ரோடு பெரிய பள்ளிவாசலில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம், ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியின் 'கை' சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின் போது ஜமாத் தலைவர் மஹபூப் பாட்சா,மற்றும் நிர்வாகிகள்,ஜமாத்தார்கள் , கூட்டணி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- மானாமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இத்திருக் கோயிலில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். இன்று தொடங்கிய சித்திரைத் திருவிழா வரும் மே 1-ஆம் தேதி வரை 11 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் மற்றும் பக்தர்களுக்கான ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.1
- *நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தவன் இல்லை. இந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானமும் வேதனையும் எல்லோருக்குமே நன்றி தெரியும். அவையெல்லாம் கடந்து வந்து இன்று மீண்டும் நான்காவது முறையாக உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் என்று கூறி சமுதாய மக்களிடையே வாக்கு சேகரித்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் சமுதாய சங்கங்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் அனைத்து செட்டியார் பேரவை சங்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அவர் தான் போடிநாயக்கனூருக்கு 15 ஆண்டுகளாக செய்த பணிகளை கூறி வாக்கு சேகரித்தார். நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததில்லை மேலும் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானங்களும் வேதனைகளும் எல்லோரும் அறிவார்கள். அனைத்தையும் கடந்து வந்து இன்று திமுக ஸ்டாலின் அவர்களின் ஆதரவோடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன் தாங்கள் எனக்கு வாக்குகள் வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் போடிநாயக்கனூரில் கடந்த 1957 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவரும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு மலைச்சாலையை உருவாக்கி தந்த வருமான சுப்புராஜிற்கு மதுரை மையப்பகுதியில் சிலையை அமைத்து தரவும் நம் தேச பிதா உத்தமர் மகாத்மா காந்திக்கு போடிநாயக்கனூரில் சிலை இல்லாத நிலையில் அவருக்கும் சிலை அமைத்து தரவும் உரிய ஏற்பாடுகள் செய்வேன் என்றும் உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் சசிகலா மற்றும் மருத்துவர் அய்யா ராமதாஸ், ஸ்ரீ காந்திமதி அறிவித்த 120 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி இன்று பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில், வே. மலைக்கோட்டை தர்மா தலைமையில் பால்குடம் எடுத்து, மாவிளக்கு இட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.1
- தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய நடைபயணத்தில் கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர், : முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்.ப. சிதம்பரம், எம்.பி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.கார்த்திசிதம்பரம், எம்.பி: திமுக கூட்டணியின் தேமுதிக, SDPI, மனித நேய மக்கள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர நிர்வாகிகள்.கலந்து கொண்டனர், தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். கை சின்னத்திற்கு ஆதரவு: காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி அவர்களுக்கு 'கை' சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் ஏந்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டது, கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.1