மின்வாரியத்தின் அலட்சியத்தால் தொடரும் உயிரிழப்புக்கள் வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி ; ஒருவர் கவலைக்கிடம். மின்வாரியத்தின் அலட்சியத்தால் தொடரும் உயிரிழப்புக்கள் வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி ; ஒருவர் கவலைக்கிடம். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 55) திருப்புவனத்தில் அரசு பேருந்து ஓட்டுனராக பணி செய்து வந்தார். இந்நிலையில் இன்று ஆதிநாராயணனின் தம்பி மகன் ஸ்ரீ கிருஷ்ணன் பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவரும் இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் மாட்டு தீவனம் அறுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்வயர் அறுந்து ஸ்ரீ கிருஷ்ணன் மீது விழுந்தது. சத்தம் கேட்டு அருகில் இருந்த ஆதி நாராயணன் மற்றும் ஆதிநாராயணனின் தந்தை சின்னத்தம்பி (79) இருவரும் கிருஷ்ணனை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் சம்பவ இடத்தில் மின்சாரம் தாக்கிய ஆதிநாரயணன் துடிதுடிக்க இறந்தார். உடனே இது பற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பலத்த காயம் அடைந்த ஸ்ரீ கிருஷ்ணா, சின்ன தம்பி இருவரையும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். வழியில் ஸ்ரீகிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார். இதில் முதியவர் சின்னத்தம்பி மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மின்வாரியத்தின் அலட்சியத்தால் தொடரும் உயிரிழப்புக்கள் வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி ; ஒருவர் கவலைக்கிடம். மின்வாரியத்தின் அலட்சியத்தால் தொடரும் உயிரிழப்புக்கள் வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி ; ஒருவர் கவலைக்கிடம். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 55) திருப்புவனத்தில் அரசு பேருந்து ஓட்டுனராக பணி செய்து வந்தார். இந்நிலையில் இன்று
ஆதிநாராயணனின் தம்பி மகன் ஸ்ரீ கிருஷ்ணன் பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவரும் இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் மாட்டு தீவனம் அறுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்வயர் அறுந்து ஸ்ரீ கிருஷ்ணன் மீது விழுந்தது. சத்தம் கேட்டு அருகில் இருந்த ஆதி நாராயணன் மற்றும் ஆதிநாராயணனின் தந்தை சின்னத்தம்பி (79) இருவரும் கிருஷ்ணனை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் சம்பவ இடத்தில்
மின்சாரம் தாக்கிய ஆதிநாரயணன் துடிதுடிக்க இறந்தார். உடனே இது பற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பலத்த காயம் அடைந்த ஸ்ரீ கிருஷ்ணா, சின்ன தம்பி இருவரையும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். வழியில் ஸ்ரீகிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார். இதில் முதியவர் சின்னத்தம்பி மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
- இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் கருப்பையா ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) நகர வீதிகளில் மேளதாளத்துடன் விசில்( சின்னம்) சத்தத்துடன் மனுதாக்கல் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற காட்சி இன்று வாடிப்பட்டியில் வெயிலின் தாக்கம் குறைந்து மேக் மூட்டம் இருந்ததால் கட்சியினர் சற்று நிம்மதி1
- சோழவந்தான் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன், ரவிச்சந்திரன் மு காளிதாஸ் பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்2
- தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அண்ணாவின் அறிவுறுத்தலின்படி நட்சத்திர பேச்சாளராக தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் தென் மாவட்டங்கள் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட போறேன். நட்சத்திர வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் நெருக்கடி குறித்த கேள்விக்கு: எல்லா இடத்திலும் நடக்காது ஏதோ ஒரு சில இடங்களில் நடக்கும் தேர்தல் கமிஷனரிடம் நிர்மல் குமார் புகார் அளித்துள்ளார் அவங்க நடவடிக்கை எடுப்பார்கள். அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது திமுக தேர்தல் அறிக்கை கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு: ஒருமுறை தேர்தல் வரும் போது இந்த மாதிரி அட்ராக்டிவ் வாக்குறுதிகள் கொடுப்பார்கள் ஆனால் முழுமையாக நிறைவேற்றினார்கள் என்பது ஒரு கேள்வி. ஊழல் அதிகமாக செய்வதால் நான் எங்களின் தலைவர் போல் தமிழக வெற்றி கழகம் போன்ற புதிய கட்சிகள் அரசியலுக்கு வரும் சூழல் உள்ளது. மக்களுக்கு இந்த முறை தெரியும், என்னென்ன செய்தார்கள் என்னென்ன செய்யவில்லை என்று. நான் என்ன சொல்லி வாக்கு சேகரிக்க போறேன் என்றால் கடந்த 70 வருடங்களாக நான்கு லட்சம் (sorry) ஐந்து லட்சம் கோடி கடந்த நான்கு வருடங்களில் மட்டும் ஐந்து லட்சத்து 60 (sorry) 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடன் உள்ளது. 70 வருடங்களில் 5 லட்சம் கடன் ஐந்து வருடத்திற்கு 6 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த ஒரு பாயிண்ட் போதும் நாட்டோட முன்னேற்றம் எந்த வகையில் உள்ளது என்று சொல்லி வாக்கு சேகரிக்க போறோம் அதனால் களம் எங்களுக்கு எளிமையாக இருக்க போகிறது. நாங்கள் அறிவித்த வாக்குறுதிக்கு எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் அரசியல் பணம் சம்பாதிக்கும் இடமாக மாறியதால் தான் நடிகர் விஜய் என்னை போன்ற நபர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். TN 2026 படம் தமிழக வெற்றி கழகத்தை தாக்கி கதைக்களம் இருப்பதாக பரவி வரும் கருத்து குறித்த கேள்விக்கு: சினிமா ஒரு கலை அதற்கு ஜாதி மதம் கிடையாது. தனிமனித தாக்குதல் அதில் இருக்கா என்பது முழுமையாக படம் வெளியே வந்தால் தான் தெரியும். நட்டியும் விஜய் சார் பிரண்டு தான் அதனால் தவறாக இருக்காது. விர்ச்சுவல் வாரியர்ஸ் சமூக வலைத்தளங்களில் கருத்து பரப்புவது குறித்த கேள்விக்கு: அனுமானத்தில் எது வேண்டுமானாலும் பேசலாம் முழு படம் பார்த்ததுக்கு பிறகு தான் தெரியும் அதனால் பார்த்து விட்டு சொல்லுங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ் எல்லாத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன் படம் வந்ததற்கு பிறகு நம் தலைவரையோ தமிழக வெற்றி கழகத்தையோ தவறாக பேசியிருந்தால் நடவடிக்கை எடுக்க முடியுமா நடவடிக்கை எடுப்போம் தலைவர் சொன்னதைப் போல் டீசண்டா அப்ரோச் பண்ணுவோம் என்பது தான் என்னோட கருத்து. பிரதான கட்சிகள் தங்களுக்குள் தான் போட்டியென மாறி மாறி சொல்வது குறித்த கேள்விக்கு: எல்லா கட்சியும் அவங்களை முன்னிலைப்படுத்தி தான் பேசுவார்கள் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது என்று தெரிய வேண்டும். எங்களுக்கும் திமுகவுக்கு தான் போட்டியான எங்கள் தலைவர் சொல்வதில் ஆணித்தனமான உண்மை உள்ளது.1
- மதுரை மாவட்டம், திருமங்கலம்.1
- திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் மதியம் சுமார் 12:30 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது கோடைகாலத்தில் கனமழை பெய்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று காலை முதல் அமமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சபரி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இதற்காக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் காலேஜ் விளக்கு பகுதியில் இருந்து பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வருகை தந்தனர் பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இதில் தமிழக வெற்றிக்கழக பெரியகுளம் நகர செயலாளர் தினேஷ், மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- சிவகங்கையில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, விஜய் தனியாக போட்டியிடவில்லை. தனித்து விடப்பட்டுள்ளார் என்றவர், விஜய் பிரச்சாரத்தின் போது காரில் மீது பாய்ந்தது தொண்டர்கள் அல்ல ரசிகர்கள். ரசிகர்களின் நடவடிக்கை அப்படித்தான் இருக்கும் என்றார். விஜய் வரவால் அரசியலில் தாக்கம் ஏற்படும் என கூறிய டி டி வி கூறியதற்கு, டிடிவி அரசியலுக்கு வரும்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவேன் என கூறினார். தொடர்ந்து மோடி மற்றும் பாஜகவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய டிடிவி, இப்போது தாமரை இலையில் படுத்து உறங்குகிறார். அதுபோலத்தான் என விமர்சனம் செய்தார். வாஜ்பாயின் பாஜகவிற்கும் நரேந்திர மோடியின் பாஜகவிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உள்ளன. வாஜ்பாய் மதத்தை வைத்து மக்களை பிரிக்கின்ற செயலை செய்யவில்லை. ஆதலால் கலைஞர் கருணாநிதியும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் வாஜ்பாய்க்கு ஆதரவளித்தனர் . அதிமுகவின் அடிப்படை விதியினை எடப்பாடி பழனிச்சாமி பின்பற்றவில்லை. தான் செய்த ஊழலை மறைப்பதற்காக அதிமுக கட்சியை பாஜகவுடன் எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்துவிட்டார் என குற்றம் சாட்டியவர், எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தலில் அதிமுக தொண்டர்கள் விடை கொடுப்பார்கள் என உறுதிப்பட தெரிவித்தார். தொடர்ந்து, எல்லா ஆட்சியிலும் போதை பொருள் பழக்கங்கள் உள்ளன என்றவர், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் வரும்போது சோம பானம் என அதனை கொண்டு வந்தாக கூறினார். சிவகங்கைத் தொகுதியை காரைக்குடியை விட அனைத்து நிலைகளிலும் உயர்த்தி காட்டுவேன். மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவேன் உள்ளிட்ட திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்துக்குப் பிறகு இரட்டை இலை போய்விட்டது. தற்போது ஒத்த இலை மட்டுமே உள்ளது. அதுவும் பிஜேபியின் தாமரையில் முடங்கிப் போய் கிடக்கிறது. எனவே தமிழக மக்கள் இரட்டை இலையும் பிஜேபியும் நிராகரித்து விட்டார்கள். இந்த தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஸ்டாலின் இரண்டாவது முறையாக பதவியேற்பார் என கருணாஸ் தெரிவித்தார்.1
- இன்று வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் மாணிக்கம் பேருந்து நிலையம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்கள் புடைசூழ தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் இதில் கட்சியின் நிர்வாகிகள் கொரியர் கணேசன் இராஜேஷ்கண்ணா இரவிச்சந்திரன் காளிதாஸ் அசோக் குமார் மற்றும் கூட்டணியின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் பாண்டி டயர் சரவணகுமார் அம்மா.ம.மு.க நிர்வாகிகள்.பா.ம.க.ஜான்பாண்டியன் மற்றும் கூட்டணியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்1