Shuru
Apke Nagar Ki App…
சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு த.வெ.க வேட்பாளர் வேட்புமனு தாக்கல் இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் கருப்பையா ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) நகர வீதிகளில் மேளதாளத்துடன் விசில்( சின்னம்) சத்தத்துடன் மனுதாக்கல் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற காட்சி இன்று வாடிப்பட்டியில் வெயிலின் தாக்கம் குறைந்து மேக் மூட்டம் இருந்ததால் கட்சியினர் சற்று நிம்மதி
தங்க சுரேஷ்
சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு த.வெ.க வேட்பாளர் வேட்புமனு தாக்கல் இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் கருப்பையா ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) நகர வீதிகளில் மேளதாளத்துடன் விசில்( சின்னம்) சத்தத்துடன் மனுதாக்கல் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற காட்சி இன்று வாடிப்பட்டியில் வெயிலின் தாக்கம் குறைந்து மேக் மூட்டம் இருந்ததால் கட்சியினர் சற்று நிம்மதி
More news from Tamil Nadu and nearby areas
- மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் வேட்பாளர் நடிகர் சுந்தர் சி அவர்கள் இன்று காலை மதுரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார் மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வரும்பொழுது அங்கிருந்த மாநகராட்சி பணியாளர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் வந்த நடிகை குஷ்புவும் செல்பி எடுத்துக் கொண்டார்.1
- வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் இன்று தனது பிரச்சாரத்தை துவஙகினார் இந்நிலையில் MGR அவர்கள் தனது தந்தை V.P.பாலசுப்பிரமணியத்திற்கு கொடுத்த அம்பாசிட்டர் காரில் சென்டிமெண்ட்டாக பிரச்சாரத்தில் வலம் வந்து வேடசந்தூர் தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளர் V.P. B. பரமசிவம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்1
- சிவகங்கை அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளரும் சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில் நாதன், கட்சி நிர்வாகிகளுடன் சிவன்கோவிலில் வழிபாடு செய்தார் . பிறகு சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கழக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடையப்பன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.1
- 7வது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்...தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் நம்பிக்கை விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு போட்டியிடுகிறார். இந்நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே ஆறு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ள அவர் ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில் 7வது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமைச்சர் தென்னரசுவிற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பேராதரவோடு திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் மகத்தான வெற்றியை தான் பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாகவும் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.7
- நாம் தமிழர் கட்சி சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக டிஐஜி தரப்பு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் கூறுகையில் உச்சநீதிமன்றத்தில் நீதியை பெறுவோம் என்றார்.1
- உண்மை vs நேர்மை ஸ்ரீ கௌமாரியம்மன் பங்குனித் திருவிழா கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி1
- மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் இன்று (ஏப்.3) முருகனுக்கு கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது . திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்ககிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடியேந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி பகல் 12.00 மணிக்குமேல் 12:20 மணிக்குள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.1
- சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பாளர் கருணாஸ் ஐ ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது, சிவகங்கை தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் தேர்தலுக்குப் பிறகு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை எடுத்து கூறினார். உங்களிடம் வாக்கு கேட்க எந்த நம்பிக்கையில் எந்த தைரியத்தில் இங்கு வந்துள்ளோம் என்றால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய நம்பிக்கையில் கேட்கிறேன். மகளிர் உரிமை தொகை, கோடை கால சிறப்பு நிதி ரூ 5 ஆயிரம் 1.31 கோடி மக்களுக்கு வழங்கியுள்ளோம். காலை உணவு திட்டம், மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை புதுமைப்பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை எடுத்துரைத்தார் டெல்லி அரசு நமக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறார்களா? நம்ம கேக்குற நிதியை கொடுக்கிறார்களா? கல்விக்கு உள்ள நிதி வரவில்லை. ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்று எந்த திட்டமும் இல்லை மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாடு வருகிறார்கள் நிதியோ திட்டமோ வருகிறதா என்று கேள்வி எழுப்பினார். அதிமுக அடிமை கூட்டத்தை கூட்டிக்கொண்டு தமிழகம் வருகிறார்கள் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றவர் அதிமுகவை கடந்த தேர்தலில் பாஜகவிடம் அடகு வைத்தார்கள் இந்த முறை அதிமுகவை பாஜக வருடம் விற்று விட்டார்கள் என்று கிண்டல் அடித்தார் சுயமரியாதை உள்ளவர்கள் தாய்க் கழகம் நோக்கி வருகிறார்கள் என்றார் . அதிமுக வெற்றி பெற்றால் பாஜக டில்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழகத்தை ஆட்சி செய்வார்கள். எனவே மீண்டும் திமுக நல்லாட்சி தொடர 19 நாள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து ஏன் திமுக வரவேண்டும் ஏன் அதிமுக வரக்கூடாது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு தொண்டர்களை உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.1
- பிரதமர் மோடி சாலைவலம் பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சாலைவலத்தில் பங்கேற்பு.1