Shuru
Apke Nagar Ki App…
திருச்சி: சீமான் மீது மீண்டும் வழக்கு டிஐஜி தரப்பு வழக்கறிஞர் பேட்டி நாம் தமிழர் கட்சி சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக டிஐஜி தரப்பு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் கூறுகையில் உச்சநீதிமன்றத்தில் நீதியை பெறுவோம் என்றார்.
Usha arun News
திருச்சி: சீமான் மீது மீண்டும் வழக்கு டிஐஜி தரப்பு வழக்கறிஞர் பேட்டி நாம் தமிழர் கட்சி சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக டிஐஜி தரப்பு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் கூறுகையில் உச்சநீதிமன்றத்தில் நீதியை பெறுவோம் என்றார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- இன்று வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் மாணிக்கம் பேருந்து நிலையம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்கள் புடைசூழ தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் இதில் கட்சியின் நிர்வாகிகள் கொரியர் கணேசன் இராஜேஷ்கண்ணா இரவிச்சந்திரன் காளிதாஸ் அசோக் குமார் மற்றும் கூட்டணியின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் பாண்டி டயர் சரவணகுமார் அம்மா.ம.மு.க நிர்வாகிகள்.பா.ம.க.ஜான்பாண்டியன் மற்றும் கூட்டணியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்1
- சிவகங்கை அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளரும் சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில் நாதன், கட்சி நிர்வாகிகளுடன் சிவன்கோவிலில் வழிபாடு செய்தார் . பிறகு சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கழக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடையப்பன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.1
- தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அண்ணாவின் அறிவுறுத்தலின்படி நட்சத்திர பேச்சாளராக தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் தென் மாவட்டங்கள் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட போறேன். நட்சத்திர வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் நெருக்கடி குறித்த கேள்விக்கு: எல்லா இடத்திலும் நடக்காது ஏதோ ஒரு சில இடங்களில் நடக்கும் தேர்தல் கமிஷனரிடம் நிர்மல் குமார் புகார் அளித்துள்ளார் அவங்க நடவடிக்கை எடுப்பார்கள். அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது திமுக தேர்தல் அறிக்கை கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு: ஒருமுறை தேர்தல் வரும் போது இந்த மாதிரி அட்ராக்டிவ் வாக்குறுதிகள் கொடுப்பார்கள் ஆனால் முழுமையாக நிறைவேற்றினார்கள் என்பது ஒரு கேள்வி. ஊழல் அதிகமாக செய்வதால் நான் எங்களின் தலைவர் போல் தமிழக வெற்றி கழகம் போன்ற புதிய கட்சிகள் அரசியலுக்கு வரும் சூழல் உள்ளது. மக்களுக்கு இந்த முறை தெரியும், என்னென்ன செய்தார்கள் என்னென்ன செய்யவில்லை என்று. நான் என்ன சொல்லி வாக்கு சேகரிக்க போறேன் என்றால் கடந்த 70 வருடங்களாக நான்கு லட்சம் (sorry) ஐந்து லட்சம் கோடி கடந்த நான்கு வருடங்களில் மட்டும் ஐந்து லட்சத்து 60 (sorry) 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடன் உள்ளது. 70 வருடங்களில் 5 லட்சம் கடன் ஐந்து வருடத்திற்கு 6 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த ஒரு பாயிண்ட் போதும் நாட்டோட முன்னேற்றம் எந்த வகையில் உள்ளது என்று சொல்லி வாக்கு சேகரிக்க போறோம் அதனால் களம் எங்களுக்கு எளிமையாக இருக்க போகிறது. நாங்கள் அறிவித்த வாக்குறுதிக்கு எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் அரசியல் பணம் சம்பாதிக்கும் இடமாக மாறியதால் தான் நடிகர் விஜய் என்னை போன்ற நபர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். TN 2026 படம் தமிழக வெற்றி கழகத்தை தாக்கி கதைக்களம் இருப்பதாக பரவி வரும் கருத்து குறித்த கேள்விக்கு: சினிமா ஒரு கலை அதற்கு ஜாதி மதம் கிடையாது. தனிமனித தாக்குதல் அதில் இருக்கா என்பது முழுமையாக படம் வெளியே வந்தால் தான் தெரியும். நட்டியும் விஜய் சார் பிரண்டு தான் அதனால் தவறாக இருக்காது. விர்ச்சுவல் வாரியர்ஸ் சமூக வலைத்தளங்களில் கருத்து பரப்புவது குறித்த கேள்விக்கு: அனுமானத்தில் எது வேண்டுமானாலும் பேசலாம் முழு படம் பார்த்ததுக்கு பிறகு தான் தெரியும் அதனால் பார்த்து விட்டு சொல்லுங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ் எல்லாத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன் படம் வந்ததற்கு பிறகு நம் தலைவரையோ தமிழக வெற்றி கழகத்தையோ தவறாக பேசியிருந்தால் நடவடிக்கை எடுக்க முடியுமா நடவடிக்கை எடுப்போம் தலைவர் சொன்னதைப் போல் டீசண்டா அப்ரோச் பண்ணுவோம் என்பது தான் என்னோட கருத்து. பிரதான கட்சிகள் தங்களுக்குள் தான் போட்டியென மாறி மாறி சொல்வது குறித்த கேள்விக்கு: எல்லா கட்சியும் அவங்களை முன்னிலைப்படுத்தி தான் பேசுவார்கள் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது என்று தெரிய வேண்டும். எங்களுக்கும் திமுகவுக்கு தான் போட்டியான எங்கள் தலைவர் சொல்வதில் ஆணித்தனமான உண்மை உள்ளது.1
- மதுரை மாவட்டம், திருமங்கலம்.1
- பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று காலை முதல் அமமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சபரி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இதற்காக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் காலேஜ் விளக்கு பகுதியில் இருந்து பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வருகை தந்தனர் பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து பின் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இதில் தமிழக வெற்றிக்கழக பெரியகுளம் நகர செயலாளர் தினேஷ், மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா சக்கராப்பள்ளியில் திருக்கருகாவூர் கற்பரச்சாம்பிகை கோவிலின் இணை கோவிலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமான தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தின் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு அதிகாலை நடைபெற்றது. அய்யம்பேட்டை செளராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் சுவாமி எழுந்தருள கோவிலில் இருந்து ஏழூர் பல்லக்கு புறப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த சுமார் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் சாமி தரிசனமும்,கோபுர தரிசனமும் செய்தனர்.2
- சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பாளர் கருணாஸ் ஐ ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது, சிவகங்கை தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் தேர்தலுக்குப் பிறகு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை எடுத்து கூறினார். உங்களிடம் வாக்கு கேட்க எந்த நம்பிக்கையில் எந்த தைரியத்தில் இங்கு வந்துள்ளோம் என்றால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய நம்பிக்கையில் கேட்கிறேன். மகளிர் உரிமை தொகை, கோடை கால சிறப்பு நிதி ரூ 5 ஆயிரம் 1.31 கோடி மக்களுக்கு வழங்கியுள்ளோம். காலை உணவு திட்டம், மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை புதுமைப்பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை எடுத்துரைத்தார் டெல்லி அரசு நமக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறார்களா? நம்ம கேக்குற நிதியை கொடுக்கிறார்களா? கல்விக்கு உள்ள நிதி வரவில்லை. ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்று எந்த திட்டமும் இல்லை மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாடு வருகிறார்கள் நிதியோ திட்டமோ வருகிறதா என்று கேள்வி எழுப்பினார். அதிமுக அடிமை கூட்டத்தை கூட்டிக்கொண்டு தமிழகம் வருகிறார்கள் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றவர் அதிமுகவை கடந்த தேர்தலில் பாஜகவிடம் அடகு வைத்தார்கள் இந்த முறை அதிமுகவை பாஜக வருடம் விற்று விட்டார்கள் என்று கிண்டல் அடித்தார் சுயமரியாதை உள்ளவர்கள் தாய்க் கழகம் நோக்கி வருகிறார்கள் என்றார் . அதிமுக வெற்றி பெற்றால் பாஜக டில்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழகத்தை ஆட்சி செய்வார்கள். எனவே மீண்டும் திமுக நல்லாட்சி தொடர 19 நாள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து ஏன் திமுக வரவேண்டும் ஏன் அதிமுக வரக்கூடாது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு தொண்டர்களை உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.1
- மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் வேட்பாளர் நடிகர் சுந்தர் சி அவர்கள் இன்று காலை மதுரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார் மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வரும்பொழுது அங்கிருந்த மாநகராட்சி பணியாளர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் வந்த நடிகை குஷ்புவும் செல்பி எடுத்துக் கொண்டார்.1
- சேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள, தனியார் வணிக வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு அணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை, எவ்வாறு கையாள்வது என்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி இன்று வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் வணிக வளாகத்தில் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சேலம் தீயணைப்புத்துறை ஊழியர்கள் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1