Shuru
Apke Nagar Ki App…
நடிகை குஷ்புவுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த நடிகர் சுந்தர்.சி. மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் வேட்பாளர் நடிகர் சுந்தர் சி அவர்கள் இன்று காலை மதுரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார் மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வரும்பொழுது அங்கிருந்த மாநகராட்சி பணியாளர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் வந்த நடிகை குஷ்புவும் செல்பி எடுத்துக் கொண்டார்.
சு.இரத்தினவேல்
நடிகை குஷ்புவுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த நடிகர் சுந்தர்.சி. மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் வேட்பாளர் நடிகர் சுந்தர் சி அவர்கள் இன்று காலை மதுரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார் மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வரும்பொழுது அங்கிருந்த மாநகராட்சி பணியாளர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் வந்த நடிகை குஷ்புவும் செல்பி எடுத்துக் கொண்டார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- இன்று வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் மாணிக்கம் பேருந்து நிலையம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்கள் புடைசூழ தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் இதில் கட்சியின் நிர்வாகிகள் கொரியர் கணேசன் இராஜேஷ்கண்ணா இரவிச்சந்திரன் காளிதாஸ் அசோக் குமார் மற்றும் கூட்டணியின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் பாண்டி டயர் சரவணகுமார் அம்மா.ம.மு.க நிர்வாகிகள்.பா.ம.க.ஜான்பாண்டியன் மற்றும் கூட்டணியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்1
- சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பாளர் கருணாஸ் ஐ ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது, சிவகங்கை தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் தேர்தலுக்குப் பிறகு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை எடுத்து கூறினார். உங்களிடம் வாக்கு கேட்க எந்த நம்பிக்கையில் எந்த தைரியத்தில் இங்கு வந்துள்ளோம் என்றால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய நம்பிக்கையில் கேட்கிறேன். மகளிர் உரிமை தொகை, கோடை கால சிறப்பு நிதி ரூ 5 ஆயிரம் 1.31 கோடி மக்களுக்கு வழங்கியுள்ளோம். காலை உணவு திட்டம், மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை புதுமைப்பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை எடுத்துரைத்தார் டெல்லி அரசு நமக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறார்களா? நம்ம கேக்குற நிதியை கொடுக்கிறார்களா? கல்விக்கு உள்ள நிதி வரவில்லை. ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்று எந்த திட்டமும் இல்லை மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாடு வருகிறார்கள் நிதியோ திட்டமோ வருகிறதா என்று கேள்வி எழுப்பினார். அதிமுக அடிமை கூட்டத்தை கூட்டிக்கொண்டு தமிழகம் வருகிறார்கள் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றவர் அதிமுகவை கடந்த தேர்தலில் பாஜகவிடம் அடகு வைத்தார்கள் இந்த முறை அதிமுகவை பாஜக வருடம் விற்று விட்டார்கள் என்று கிண்டல் அடித்தார் சுயமரியாதை உள்ளவர்கள் தாய்க் கழகம் நோக்கி வருகிறார்கள் என்றார் . அதிமுக வெற்றி பெற்றால் பாஜக டில்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழகத்தை ஆட்சி செய்வார்கள். எனவே மீண்டும் திமுக நல்லாட்சி தொடர 19 நாள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து ஏன் திமுக வரவேண்டும் ஏன் அதிமுக வரக்கூடாது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு தொண்டர்களை உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.1
- வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் இன்று தனது பிரச்சாரத்தை துவஙகினார் இந்நிலையில் MGR அவர்கள் தனது தந்தை V.P.பாலசுப்பிரமணியத்திற்கு கொடுத்த அம்பாசிட்டர் காரில் சென்டிமெண்ட்டாக பிரச்சாரத்தில் வலம் வந்து வேடசந்தூர் தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளர் V.P. B. பரமசிவம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்1
- நாம் தமிழர் கட்சி சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக டிஐஜி தரப்பு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் கூறுகையில் உச்சநீதிமன்றத்தில் நீதியை பெறுவோம் என்றார்.1
- உண்மை vs நேர்மை ஸ்ரீ கௌமாரியம்மன் பங்குனித் திருவிழா கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி1
- பிரதமர் மோடி சாலைவலம் பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சாலைவலத்தில் பங்கேற்பு.1
- மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் இன்று (ஏப்.3) முருகனுக்கு கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது . திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்ககிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடியேந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி பகல் 12.00 மணிக்குமேல் 12:20 மணிக்குள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மறைவட்டம் புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வாரம் முழுவதும் புனித வாரமாக அனுசரித்து வருகின்றனர். புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் உயிரிழந்த நாளக புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலய வளாகத்தில் இயேசுவின் பாடுகள் நினைவு கூறும் வகையில் சிலுவை பாதை நிகழ்வு நடைபெற்றது.பின்னர் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி பங்கு பணியாளர் அருட்திரு சுவாமிநாதன் மற்றும் உதவி பணியாளர் பென்சிகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இறுதியாக சிலுவை முத்தி செய்யும் சடங்கு மற்றும் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் புளியால் பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.1
- 🙏 சிறப்பு பொது சுகாதார பெருநகரம் பழனி4