logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மதுரை மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2026-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழு தலைவர்/வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2026-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழு தலைவர்/வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் இன்று (05.02.2026) மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வீரவசந்ததராயர் மண்டபம் ரூபாய் 1810 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலையின் உற்பத்தியை அதிகப்படுத்தும் விதமாக பண்டக சாலைக்குச் சொந்தமான அழகப்பன் நகரில் ரூ.23.00 இலட்சம் மதிப்பீட்டில் செக்கு எண்ணெய் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதை ஆய்வு செய்து பார்வையிட்டார். பின்னர் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூபாய் 190 கோடி மதிப்பீட்டில் கோரிப்பாளையம் சந்திப்பில் 2100 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டார். பின்னர் மதுரை வடக்கு வட்டம் மஸ்தான்பட்டியில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு வைகை பகுதிகளில், இதுவரை உள்ளடங்காத மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், கழிவு நீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ள கழிவு நீரேற்று நிலையம் (Underground Sewerage System) கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டார். தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஒத்தக்கடை, அரசு சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் அறையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசு சமூக நீதி விடுதிகள் -8 ஆதிதிராவிடர் நலத்துறை அரசு சமூக நீதி விடுதிகள்-17 மற்றும் கள்ளர் சீரமைப்பு அரசு சமூக நீதி விடுதிகள்- 3 என மொத்தம் 28 விடுதிகளில் தங்கி பயிலும் 512 மாணவ/மாணவியர்களுக்காக மூன்று வேளைகளிலும் உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு மாணவர்களிடம் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மதிப்பீட்டுக் குழு தலைவர்/வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் தெரிவித்ததாவது, பொதுமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கிணங்க பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் விரைவில் பாலத்தை கட்டி முடிப்பதற்காக ரூ.193 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது 72 % பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த பாலத்தில் மொத்தம் 39 ஸ்பேன்களில் 38 ஸ்பேன்கள் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 1 பணி 15 நாட்களில் நிறைவடைந்து விரைவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்கள். பணியாளர்கள் அனைவரும் இரவு பகலாக வேலை செய்து விரைவில் பணிகள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி மற்றும் கோவில்களில் நடைபெறும் திருப்பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்துள்ளோம். நெடுஞ்சாலைத்துறையை பொறுத்தவரை ரூ.400 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு செய்துள்ளோம். உங்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பீட்டுக்குழு உடனடியாக அறிக்கை கொடுத்தாலும் அதனை அடுத்த 2026-27 ஆம் நிதியாண்டில் பட்ஜெட்டில் 100 சதவீதம் சேர்ப்பார்கள். அதுதான் மதிப்பீட்டுக்குழுவின் முக்கியமான நோக்கமாகும் என மதிப்பீட்டுக் குழு தலைவர்/வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2026-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழு தலைவர்/வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன்,இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் திரு.இராம.கருமாணிக்கம் அவர்கள் (திருவாடானை), திரு.சதன் திருமலைக்குமார் அவர்கள் (வாசுதேவநல்லூர்), திரு.செல்லூர் கே.ராஜு அவர்கள் (மதுரை மேற்கு), திரு.ராஜா அவர்கள் (சங்கரன்கோவில்), சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் அவர்கள், துணை செயலாளர் திரு.க.பாலகிருஷ்ணன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க. அன்பழகன் அவர்கள், உசிலம்பட்டி சார் ஆட்சியர் திரு.உட்கர்ஷ்குமார் அவர்கள், திட்ட அலுவலர் (ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி அவர்கள, மாவட்ட வன அலுவலர் திரு.ரேவ்தி ரமன்,இ.வ.ப., அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

on 5 February
user_Karthik M S
Karthik M S
மதுரை தெற்கு, மதுரை, தமிழ்நாடு•
on 5 February
cb57db60-2731-41d1-9b46-d959555ae763

மதுரை மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2026-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழு தலைவர்/வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2026-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழு தலைவர்/வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் இன்று (05.02.2026) மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வீரவசந்ததராயர் மண்டபம் ரூபாய் 1810 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலையின் உற்பத்தியை அதிகப்படுத்தும் விதமாக பண்டக சாலைக்குச் சொந்தமான அழகப்பன் நகரில் ரூ.23.00 இலட்சம் மதிப்பீட்டில் செக்கு எண்ணெய் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதை ஆய்வு செய்து பார்வையிட்டார். பின்னர் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூபாய் 190 கோடி மதிப்பீட்டில் கோரிப்பாளையம் சந்திப்பில் 2100 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டார். பின்னர் மதுரை வடக்கு வட்டம் மஸ்தான்பட்டியில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு வைகை பகுதிகளில், இதுவரை உள்ளடங்காத மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், கழிவு நீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ள கழிவு நீரேற்று நிலையம் (Underground Sewerage System) கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டார். தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஒத்தக்கடை, அரசு சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் அறையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசு சமூக நீதி விடுதிகள் -8 ஆதிதிராவிடர் நலத்துறை அரசு சமூக நீதி விடுதிகள்-17 மற்றும் கள்ளர் சீரமைப்பு அரசு சமூக நீதி விடுதிகள்- 3 என மொத்தம் 28 விடுதிகளில் தங்கி பயிலும் 512 மாணவ/மாணவியர்களுக்காக மூன்று வேளைகளிலும் உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு மாணவர்களிடம் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மதிப்பீட்டுக் குழு தலைவர்/வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன்

7ab4086b-8673-4479-818d-7d191e388268

அவர்கள் தெரிவித்ததாவது, பொதுமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கிணங்க பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் விரைவில் பாலத்தை கட்டி முடிப்பதற்காக ரூ.193 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது 72 % பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த பாலத்தில் மொத்தம் 39 ஸ்பேன்களில் 38 ஸ்பேன்கள் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 1 பணி 15 நாட்களில் நிறைவடைந்து விரைவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்கள். பணியாளர்கள் அனைவரும் இரவு பகலாக வேலை செய்து விரைவில் பணிகள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி மற்றும் கோவில்களில் நடைபெறும் திருப்பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்துள்ளோம். நெடுஞ்சாலைத்துறையை பொறுத்தவரை ரூ.400 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு செய்துள்ளோம். உங்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பீட்டுக்குழு உடனடியாக அறிக்கை கொடுத்தாலும் அதனை அடுத்த 2026-27 ஆம் நிதியாண்டில் பட்ஜெட்டில் 100 சதவீதம் சேர்ப்பார்கள். அதுதான் மதிப்பீட்டுக்குழுவின் முக்கியமான நோக்கமாகும் என மதிப்பீட்டுக் குழு தலைவர்/வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2026-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழு தலைவர்/வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன்,இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் திரு.இராம.கருமாணிக்கம் அவர்கள் (திருவாடானை), திரு.சதன் திருமலைக்குமார் அவர்கள் (வாசுதேவநல்லூர்), திரு.செல்லூர் கே.ராஜு அவர்கள் (மதுரை மேற்கு), திரு.ராஜா அவர்கள் (சங்கரன்கோவில்), சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் அவர்கள், துணை செயலாளர் திரு.க.பாலகிருஷ்ணன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க. அன்பழகன் அவர்கள், உசிலம்பட்டி சார் ஆட்சியர் திரு.உட்கர்ஷ்குமார் அவர்கள், திட்ட அலுவலர் (ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி அவர்கள, மாவட்ட வன அலுவலர் திரு.ரேவ்தி ரமன்,இ.வ.ப., அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by Corp M
    4
    Post by Corp M
    user_Corp M
    Corp M
    பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • ஆலங்குளம் பகுதிகளில் நாதக வேட்பாளர் பல் மருத்துவர் பால்ராச் திறந்த வாகனத்தில் நின்று வாக்குகள் சேகரித்தார்
    1
    ஆலங்குளம் பகுதிகளில் நாதக வேட்பாளர் பல் மருத்துவர் பால்ராச் திறந்த வாகனத்தில் நின்று வாக்குகள் சேகரித்தார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர்.சாலையில் நடந்த விஜய் பிரச்சாரத்தில், 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு. அவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நன்றி சன் நெட்வொர்க்.
    1
    திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர்.சாலையில் நடந்த விஜய் பிரச்சாரத்தில், 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.
அவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நன்றி சன் நெட்வொர்க்.
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Photographer Palayamkottai, Tirunelveli•
    3 hrs ago
  • நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்வது வழக்கம். நேற்று நள்ளிரவு விக்ரமசிங்கபுரம் சங்கரலிங்கபுரம் பகுதியில் இரண்டு கரடிகள் நடமாட்டம் இருந்ததை பார்த்த அப் பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து வைரல் செய்துள்ளனர். மீண்டும் கரடிகள் நடமாட்டம் உள்ளதா இல்ல பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்
    1
    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்வது வழக்கம். நேற்று நள்ளிரவு விக்ரமசிங்கபுரம் சங்கரலிங்கபுரம் பகுதியில் இரண்டு கரடிகள் நடமாட்டம் இருந்ததை பார்த்த அப் பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து வைரல் செய்துள்ளனர். மீண்டும் கரடிகள் நடமாட்டம் உள்ளதா இல்ல பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா? விஜய் 34 ஆண்டுகாலமாக திரைத்துறையில் இருந்து விட்டு தன்னை இப்போது மதரீதியாக ஜோசப் விஜய் என அடையாளபடுத்துவதன் நோக்கம் என்ன? இது வரை கிருஸ்துவ பண்டிகை காலத்தில் அந்த மக்களுக்கு விஜய் வாழ்த்துக்களை தொவித்துள்ளாரா? விஜய்யின் தந்தை, தாய் மதத்திற்கு திரும்பிய நிலையில் தன்னை ஜோசப் விஜய் என்று அடையாள படுத்தி கொள்வதன் மூலம், பாஜக செய்யும் மத அரசியலை விட விஜய் மோசமாக அரசியல் செய்கின்றார். ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார். சிவகங்கை அருகே பனங்காடியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, விஜய்க்கு அதிகம் கூட்டம் வருவதால் பயனில்லை. அது ஓட்டாக மாறுகிறதா என்பது தான் முக்கியம் என்றும், கேரளாவை போல் இல்லாமல் தமிழகத்தில் சினிமா நட்சத்திரங்களை கான கூட்டம் கூடுவது இயல்பாகி போய் விட்டது. பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வருவதை சுட்டிக் காட்டி பேசுவது நகைச்சுவையானது என்றவர், முதலமைச்சர் ஸ்டாலின் 5 ஆண்டு கால சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து நிச்சயமாக சிவகங்கை தொகுதியில் வெற்றி பெறுவேன்என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து, திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா? என கேள்வி எழுப்பினார். ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார் என விமர்சனம் செய்தவர், சந்திரசேகர் மகன் அரசியலுக்கு வரும் போது, கருணாஸ் மகன் இயக்குநர் ஆகும் போது, திறமையும் தகுதியும் உள்ள உதயநிதி முதல்வராக அரசியலில் வருவதற்கு நிச்சயமாக முன் மொழிவேன் என உறுதி பட கருணாஸ் தெரிவித்தார்.
    1
    திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா?
விஜய் 34 ஆண்டுகாலமாக திரைத்துறையில் இருந்து விட்டு தன்னை இப்போது மதரீதியாக ஜோசப் விஜய் என அடையாளபடுத்துவதன் நோக்கம் என்ன?
இது வரை கிருஸ்துவ பண்டிகை காலத்தில் அந்த மக்களுக்கு விஜய் வாழ்த்துக்களை தொவித்துள்ளாரா?
விஜய்யின் தந்தை, தாய் மதத்திற்கு திரும்பிய நிலையில் தன்னை ஜோசப் விஜய் என்று அடையாள படுத்தி கொள்வதன் மூலம், பாஜக செய்யும் மத அரசியலை விட விஜய் மோசமாக அரசியல் செய்கின்றார்.
ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், 
நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார்.
சிவகங்கை அருகே பனங்காடியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது,
விஜய்க்கு அதிகம் கூட்டம் வருவதால் பயனில்லை. அது ஓட்டாக மாறுகிறதா என்பது தான் முக்கியம் என்றும்,
கேரளாவை போல் இல்லாமல் தமிழகத்தில் சினிமா நட்சத்திரங்களை கான கூட்டம் கூடுவது இயல்பாகி போய் விட்டது.
பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வருவதை சுட்டிக் காட்டி பேசுவது நகைச்சுவையானது என்றவர்,
முதலமைச்சர் ஸ்டாலின் 5 ஆண்டு கால சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து நிச்சயமாக சிவகங்கை தொகுதியில் வெற்றி பெறுவேன்என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து, திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா? என கேள்வி எழுப்பினார்.
ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், 
நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார் என விமர்சனம் செய்தவர், 
சந்திரசேகர் மகன் அரசியலுக்கு வரும் போது, கருணாஸ் மகன் இயக்குநர் ஆகும் போது, திறமையும் தகுதியும் உள்ள உதயநிதி முதல்வராக அரசியலில் வருவதற்கு நிச்சயமாக முன் மொழிவேன் என உறுதி பட கருணாஸ் தெரிவித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • Post by Corp M
    4
    Post by Corp M
    user_Corp M
    Corp M
    பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • வாசுதேவநல்லூர் பாஜக வேட்பாளராக ஆனந்தன் அய்யாசாமி அறிவிக்கப்பட்டதையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ண முரளி எ குட்டியப்பா தலைமையில் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது
    1
    வாசுதேவநல்லூர் பாஜக வேட்பாளராக ஆனந்தன் அய்யாசாமி அறிவிக்கப்பட்டதையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ண முரளி எ குட்டியப்பா தலைமையில் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.