தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனுவில், ஆதிதிராவிடர் (பறையர்) சமூக மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் அரசு கிராம நத்தம் புறம்போக்கு நிலம் மற்றும் பொதுப் பாதை ஆதிக்க சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆலய நுழைவாயிலை மறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவருக்கு வழங்கப்பட்ட நத்தம் நிலவரி திட்ட பட்டாவை உடனடியாக ரத்து செய்து சுவரை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போலி ஆவணங்கள் மூலம் சுமார் 60 சென்ட் அரசு நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்து நிலத்தை ஆதிதிராவிடர் மக்களுக்கு மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருவதாகவும், அரசு விரைந்து தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனுவில், ஆதிதிராவிடர் (பறையர்) சமூக மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் அரசு கிராம நத்தம் புறம்போக்கு நிலம் மற்றும் பொதுப் பாதை ஆதிக்க சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆலய நுழைவாயிலை மறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவருக்கு வழங்கப்பட்ட நத்தம் நிலவரி திட்ட பட்டாவை உடனடியாக ரத்து செய்து சுவரை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போலி ஆவணங்கள் மூலம் சுமார் 60 சென்ட் அரசு நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்து நிலத்தை ஆதிதிராவிடர் மக்களுக்கு மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருவதாகவும், அரசு விரைந்து தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாகர்கோவில் சிறைச்சாலையில் விசாரணை கைதி சபரிவர்மன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதா நாகர்கோவில் சிறையில் இன்று விசாரணை நடத்தினார். இதற்கு முன்னதாக சிபிசிஐடி அலுவலகத்திற்கு சென்றும் விசாரணை நடத்தினார். தொடர்ந்து கைதிகள் அறையிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சிறையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.1
- தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் வனப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்யாததால், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைந்துள்ளது. முக்கியமாக மெயின் அருவியில் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து வருகின்றனர். இருந்தபோதிலும், சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து குளித்துச் செல்கின்றனர். இந்த சூழலால் அப்பகுதியில் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது.1
- விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில், மயானத்திற்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்தப் பாதை சேறும் சகதியுமாகவும், மற்ற நேரங்களில் மிகவும் மோசமான நிலையிலும் காணப்படுவதால், இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, முடியனூர் கிராம மயானத்திற்குச் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.2
- மதுரை வில்லாபுரம் பகுதியில் இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து அரை மணி நேரம் நடனம் ஆடிய மிகவும் அரிதான காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அரிய காட்சியைக் கண்ட மக்கள் வியப்புற்றுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் இது ஒரு அற்புதமான நிகழ்வு என்று கூறுகின்றனர். இந்த வீடியோ மதுரை தெற்கு பகுதியில் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.1
- மதுரை அலங்காநல்லூர் - பாலமேடு மெயின்ரோடு ரெங்கராஜபுரத்தில் அமைந்துள்ள கிரிப்டோ மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் அனுபவம் மிகுந்த மற்றும் மக்கள் சேவையாற்றும் மருத்துவர்களான Dr. PAUL (M.B.B.S), Dr. MURUGAPANDI (M.B.B.S., D.C.H), Dr. HARIKARAN (M.S. Ortho) மற்றும் Dr. DIVYA (M.S. O.G) ஆகியோர் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றனர்.1
- ராமநாதபுரம் மாவட்டம், திருவடனை வட்டத்தில் உள்ள ஆர் எஸ் மங்கலம் அண்ணா திடலுக்கு அருகே உள்ள கிளை நூலகம் தனியார் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ளது. இதனால் வாசகர்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், இந்த கிளை நூலகம் திறக்கப்படாததாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது மாடியில் இருப்பதால் வயதானவர்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் துரித நடவடிக்கை எடுத்து கிளை நூலகத்தை கீழ்தளத்தில் திறக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் அனைத்து வாசகர்களும் எளிதாக அணுக முடியும் என்று கருதப்படுகிறது.1
- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பெரும்பத்து தெருவைச் சேர்ந்த சண்முகநாதன் - சித்ரா தம்பதியினர், பிரசவத்திற்காக 25/7/2026 அன்று காலை ஸ்ரீவைகுண்டம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மறுநாள் 26/7/2026 அன்று இரவு 8:30 மணி அளவில் குழந்தையின் துடிப்பு மிகக் குறைவாக இருப்பதாகக் கூறி, உடனடியாகப் பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைவாகச் செல்லுமாறு மருத்துவரும் செவிலியரும் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீவைகுண்டம் 108 வாகனம் சாத்தான்குளத்திற்குச் சென்றிருப்பதாகவும், அது திரும்பி வர ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் ஆகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் திகைத்து நின்ற சண்முகநாதனுக்கு உதவ, தகவலின் பேரில் ஆறாம் பண்ணை ஜமாத் சார்பாக உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கர்ப்பிணி சித்ரா மற்றும் சண்முகநாதன் பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் புறப்பட்டுச் சென்ற பின்னரே சாத்தான்குளத்தில் இருந்து 108 வாகனம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளது. கடந்த 10 முதல் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு தனியாக ஆம்புலன்ஸ் வசதி இருந்த நிலையில், தற்சமயம் அது இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். அவசர சிகிச்சை பகுதியைக் கொண்ட ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்குத் தனியாக ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருக்கு, மக்கள் பணியில் ஸ்ரீவைகுண்டம் இ.சித்திரைவேல், ஊர்ப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.3
- தொண்டி புதுக்குடி பகுதியைச் சேர்ந்த சரத்குமாருக்குச் சொந்தமான நாட்டுப் படகில், கண்ணன், முகேஷ், விக்னேஷ்வரன், குமார் மற்றும் கேசவன் ஆகிய 6 மீனவர்கள் இன்று வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் அவர்கள் விரித்த வலையில் 100 கிலோ எடையுள்ள அரியவகை கடல் ஆமை சிக்கியிருப்பது தெரியவந்தது. ஆமையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் வளையை அறுத்து பத்திரமாக கடலில் விட்டனர். இந்த செயலுக்காக மீனவர்கள் பாராட்டுக்களைப் பெற்றனர்.1
- ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆதியூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.1