Shuru
Apke Nagar Ki App…
தொண்டி புதுக்குடி பகுதியைச் சேர்ந்த சரத்குமாருக்குச் சொந்தமான நாட்டுப் படகில், கண்ணன், முகேஷ், விக்னேஷ்வரன், குமார் மற்றும் கேசவன் ஆகிய 6 மீனவர்கள் இன்று வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் அவர்கள் விரித்த வலையில் 100 கிலோ எடையுள்ள அரியவகை கடல் ஆமை சிக்கியிருப்பது தெரியவந்தது. ஆமையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் வளையை அறுத்து பத்திரமாக கடலில் விட்டனர். இந்த செயலுக்காக மீனவர்கள் பாராட்டுக்களைப் பெற்றனர்.
அனல் ஆனந்த்
தொண்டி புதுக்குடி பகுதியைச் சேர்ந்த சரத்குமாருக்குச் சொந்தமான நாட்டுப் படகில், கண்ணன், முகேஷ், விக்னேஷ்வரன், குமார் மற்றும் கேசவன் ஆகிய 6 மீனவர்கள் இன்று வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் அவர்கள் விரித்த வலையில் 100 கிலோ எடையுள்ள அரியவகை கடல் ஆமை சிக்கியிருப்பது தெரியவந்தது. ஆமையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் வளையை அறுத்து பத்திரமாக கடலில் விட்டனர். இந்த செயலுக்காக மீனவர்கள் பாராட்டுக்களைப் பெற்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருவாடானை பகுதியில் இரண்டு சேவல்கள் ஒன்றை ஒன்று ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டன.1
- திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் பிரிண்டர்ஸ் மற்றும் டிராவல்ஸ் கடை வைத்திருப்பவர் செல்வன். இவர் நேற்று வழக்கம்போல் தனது சுற்றுலா வேனை கடையின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த டீசல் டேங்கின் மூடி சேதமடைந்த நிலையில் கிழே கிடந்ததோடு டீசலும் தரையில் சிந்தி இருந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த செல்வன் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காடசிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் அதிகாலை 4 மணியளவில் வேனிற்கு முன்பு வந்து நிறுத்தப்பட்ட ஒரு காரில் இருந்து இறங்கி வரும் மர்ம நபர் ஒருவர் வேனின் அடிப்பகுதியில் லாவகமாக நுழைந்து செல்லும் காட்சியும், பின்னர் வேனில் இருந்து கேனில் டீசலை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. வண்டியின் டீசல் டேங்கில் முழு அளவு டீசல் இருந்த நிலையில் இன்று பார்த்தபோது பாதிக்கும் குறைவான டீசலே இருந்துள்ளது. 30 - 40 லிட்டர் டீசல் வரை திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து செல்வன் மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் டீசல் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த பகுதியில் அதிகாலையில் மர்ம நபர்கள் காரில் வந்து டீசலை திருடிச்சென்ற சம்பவம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலை அருகே உள்ள வே.துறையூர், சிறுமருதூர் இடையே உள்ள கட்டிடத்தில் அரசு மதுபான கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேளாண் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள், வே. துறையூர் மதுரகாளியம்மன் கோவில் வழியாக சமயபுரம் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக அந்தப் பகுதியில் தொடர்ந்து மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதால் தினந்தோறும் பொதுமக்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகளும் மிகுந்த அச்சத்துடன் அந்த பாதையை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் அந்தப் பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஆகையால் மதுபான கடை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோடிக்கை மனு அளித்தனர். லால்குடி அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர்.1
- தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள சாயர்புரம் அருகே ஒரு பேருந்தில் இடமின்றி படிக்கட்டில் பயணம் செய்த கண்டக்டரின் புகைப்படம் வைரல் ஆகிவிட்டது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. பேருந்தில் இடமின்றி பயணிகள் படிக்கட்டில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை இந்த புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது. இது போக்குவரத்து வசதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது.1
- முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 11வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அவரது திருவுருவப்படத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், நகரத்தை தூய்மையாக வைக்க உதவி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு என்றும் தலைவணங்கி வணக்கம் செலுத்துவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் தூய்மை பணியாளர்களின் முன்னேற்றத்திற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் தங்களது தேவைகள் எதுவாயினும் செய்து தர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். இதில் நகராட்சி ஆணையாளர் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே நடந்த இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வல்லம் பகுதியைச் சேர்ந்த 26 வயது மேகலா, நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் விஷம் கொண்ட பாம்பு ஒன்று கடித்துள்ளது. வலியால் கத்திய மேகலாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பாம்பை அடித்து கொன்றுள்ளனர். உடனடியாக இருசக்கர வாகனத்தில் பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் அந்த நேரத்தில் மருத்துவர் இல்லை. செவிலியர்கள் மட்டுமே முதலுதவி செய்ததாக கூறப்படுகிறது. உடனே தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பாமல், 108 ஊழியர்களுக்கும் செவிலியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் 108 வாகனத்தில் அழைத்துச் செல்வதில் தாமதம் ஆனதாக உறவினர்கள் கூறுகின்றனர். தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உறவினர்கள், இரவு நேரத்திலும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும், உரிய சிகிச்சை வழங்கப்படாததால் ஏற்பட்ட இந்த உயிரிழப்புக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அரசாணைப்படி ஒரு அரசு மருத்துவமனையில் மருத்துவர் 3 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றல் ஆக வேண்டும். ஆனால் சில மருத்துவர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருப்பதால் இதுபோன்ற அவசர சிகிச்சைகளில் பிரச்சனை வருகிறது. எனவே மருத்துவர்களை உரிய நேரத்தில் இடமாற்றம் செய்து இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.1
- ராமநாதபுரம் மாவட்டம், திருவடனை வட்டத்தில் உள்ள சேன வயல் அய்யனார் கோவில் அருகே ஒரு ஊரணியில் சவடுமண் அள்ளுவதற்காக டிராக்டர் மற்றும் ஜேசிபி உடன் வந்த நபர்களை கிராம மக்கள் தடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள், அந்த நபர்கள் மல்லனூர் பகுதியில் அனுமதி வாங்கிவிட்டு இந்த பகுதியில் சவடுமண் எடுத்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த நபர்கள் சவடுமண் அள்ளுவதை நிறுத்தி, டிராக்டர் மற்றும் ஜேசிபி உடன் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. கிராம மக்கள் சவடுமண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த சம்பவம் நடந்தது.1
- இந்தி திணிப்பு மற்றும் மாநில கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில், திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னப்பா தமிழர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பாளர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திற்கு மாறக்கூடாது எனவும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது எனவும், தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் உரிமையை மாநில அரசே ஏற்க வேண்டும் எனவும், மேலும் கல்வி உரிமையை மாநிலத்திற்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.1
- தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனுவில், ஆதிதிராவிடர் (பறையர்) சமூக மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் அரசு கிராம நத்தம் புறம்போக்கு நிலம் மற்றும் பொதுப் பாதை ஆதிக்க சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆலய நுழைவாயிலை மறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவருக்கு வழங்கப்பட்ட நத்தம் நிலவரி திட்ட பட்டாவை உடனடியாக ரத்து செய்து சுவரை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போலி ஆவணங்கள் மூலம் சுமார் 60 சென்ட் அரசு நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்து நிலத்தை ஆதிதிராவிடர் மக்களுக்கு மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருவதாகவும், அரசு விரைந்து தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1