logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் பிரிண்டர்ஸ் மற்றும் டிராவல்ஸ் கடை வைத்திருப்பவர் செல்வன். இவர் நேற்று வழக்கம்போல் தனது சுற்றுலா வேனை கடையின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த டீசல் டேங்கின் மூடி சேதமடைந்த நிலையில் கிழே கிடந்ததோடு டீசலும் தரையில் சிந்தி இருந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த செல்வன் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காடசிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் அதிகாலை 4 மணியளவில் வேனிற்கு முன்பு வந்து நிறுத்தப்பட்ட ஒரு காரில் இருந்து இறங்கி வரும் மர்ம நபர் ஒருவர் வேனின் அடிப்பகுதியில் லாவகமாக நுழைந்து செல்லும் காட்சியும், பின்னர் வேனில் இருந்து கேனில் டீசலை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. வண்டியின் டீசல் டேங்கில் முழு அளவு டீசல் இருந்த நிலையில் இன்று பார்த்தபோது பாதிக்கும் குறைவான டீசலே இருந்துள்ளது. 30 - 40 லிட்டர் டீசல் வரை திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து செல்வன் மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் டீசல் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த பகுதியில் அதிகாலையில் மர்ம நபர்கள் காரில் வந்து டீசலை திருடிச்சென்ற சம்பவம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 hrs ago
user_Usha arun News
Usha arun News
Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
3 hrs ago

திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் பிரிண்டர்ஸ் மற்றும் டிராவல்ஸ் கடை வைத்திருப்பவர் செல்வன். இவர் நேற்று வழக்கம்போல் தனது சுற்றுலா வேனை கடையின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த டீசல் டேங்கின் மூடி சேதமடைந்த நிலையில் கிழே கிடந்ததோடு டீசலும் தரையில் சிந்தி இருந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த செல்வன் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காடசிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் அதிகாலை 4 மணியளவில் வேனிற்கு முன்பு வந்து நிறுத்தப்பட்ட ஒரு காரில் இருந்து இறங்கி வரும் மர்ம நபர் ஒருவர் வேனின் அடிப்பகுதியில் லாவகமாக நுழைந்து செல்லும் காட்சியும், பின்னர் வேனில் இருந்து கேனில் டீசலை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. வண்டியின் டீசல் டேங்கில் முழு அளவு டீசல் இருந்த நிலையில் இன்று பார்த்தபோது பாதிக்கும் குறைவான டீசலே இருந்துள்ளது. 30 - 40 லிட்டர் டீசல் வரை திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து செல்வன் மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் டீசல் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த பகுதியில் அதிகாலையில் மர்ம நபர்கள் காரில் வந்து டீசலை திருடிச்சென்ற சம்பவம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • இந்தி திணிப்பு மற்றும் மாநில கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில், திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னப்பா தமிழர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பாளர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திற்கு மாறக்கூடாது எனவும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது எனவும், தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் உரிமையை மாநில அரசே ஏற்க வேண்டும் எனவும், மேலும் கல்வி உரிமையை மாநிலத்திற்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    1
    இந்தி திணிப்பு மற்றும் மாநில கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில், திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னப்பா தமிழர் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பாளர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திற்கு மாறக்கூடாது எனவும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது எனவும், தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் உரிமையை மாநில அரசே ஏற்க வேண்டும் எனவும், மேலும் கல்வி உரிமையை மாநிலத்திற்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    user_Msd
    Msd
    திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ராமநாதபுரம் மாவட்டம், திருவடனை வட்டத்தில் உள்ள ஆர் எஸ் மங்கலம் அண்ணா திடலுக்கு அருகே உள்ள கிளை நூலகம் தனியார் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ளது. இதனால் வாசகர்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், இந்த கிளை நூலகம் திறக்கப்படாததாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது மாடியில் இருப்பதால் வயதானவர்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் துரித நடவடிக்கை எடுத்து கிளை நூலகத்தை கீழ்தளத்தில் திறக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் அனைத்து வாசகர்களும் எளிதாக அணுக முடியும் என்று கருதப்படுகிறது.
    1
    ராமநாதபுரம் மாவட்டம், திருவடனை வட்டத்தில் உள்ள ஆர் எஸ் மங்கலம் அண்ணா திடலுக்கு அருகே உள்ள கிளை நூலகம் தனியார் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ளது. இதனால் வாசகர்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், இந்த கிளை நூலகம் திறக்கப்படாததாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது மாடியில் இருப்பதால் வயதானவர்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள் துரித நடவடிக்கை எடுத்து கிளை நூலகத்தை கீழ்தளத்தில் திறக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் அனைத்து வாசகர்களும் எளிதாக அணுக முடியும் என்று கருதப்படுகிறது.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ஊத்துக்காடு கிராமத்தில், நகராட்சி குப்பை வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. கம்பம் நகராட்சி, தனியார் தோட்டத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் குப்பைகளை கொட்ட முயன்றதை எதிர்த்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பைகள் கொட்டப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் துர்நாற்றம் ஏற்படும் எனக் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் உத்தமபாளையம் காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் நகராட்சிக்கான குப்பைகள் கொட்டப்படாது, பாதிப்பு ஏற்படாது என உறுதியளிக்கப்பட்ட பின்னரே குப்பைகளை கொட்ட அனுமதிக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, நகராட்சி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
    1
    தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ஊத்துக்காடு கிராமத்தில், நகராட்சி குப்பை வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. கம்பம் நகராட்சி, தனியார் தோட்டத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் குப்பைகளை கொட்ட முயன்றதை எதிர்த்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பைகள் கொட்டப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் துர்நாற்றம் ஏற்படும் எனக் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் உத்தமபாளையம் காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் நகராட்சிக்கான குப்பைகள் கொட்டப்படாது, பாதிப்பு ஏற்படாது என உறுதியளிக்கப்பட்ட பின்னரே குப்பைகளை கொட்ட அனுமதிக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, நகராட்சி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில், மயானத்திற்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்தப் பாதை சேறும் சகதியுமாகவும், மற்ற நேரங்களில் மிகவும் மோசமான நிலையிலும் காணப்படுவதால், இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, முடியனூர் கிராம மயானத்திற்குச் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
    2
    விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில், மயானத்திற்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்தப் பாதை சேறும் சகதியுமாகவும், மற்ற நேரங்களில் மிகவும் மோசமான நிலையிலும் காணப்படுவதால், இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, முடியனூர் கிராம மயானத்திற்குச் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    9 hrs ago
  • தொண்டி புதுக்குடி பகுதியைச் சேர்ந்த சரத்குமாருக்குச் சொந்தமான நாட்டுப் படகில், கண்ணன், முகேஷ், விக்னேஷ்வரன், குமார் மற்றும் கேசவன் ஆகிய 6 மீனவர்கள் இன்று வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் அவர்கள் விரித்த வலையில் 100 கிலோ எடையுள்ள அரியவகை கடல் ஆமை சிக்கியிருப்பது தெரியவந்தது. ஆமையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் வளையை அறுத்து பத்திரமாக கடலில் விட்டனர். இந்த செயலுக்காக மீனவர்கள் பாராட்டுக்களைப் பெற்றனர்.
    1
    தொண்டி புதுக்குடி பகுதியைச் சேர்ந்த சரத்குமாருக்குச் சொந்தமான நாட்டுப் படகில், கண்ணன், முகேஷ், விக்னேஷ்வரன், குமார் மற்றும் கேசவன் ஆகிய 6 மீனவர்கள் இன்று வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் அவர்கள் விரித்த வலையில் 100 கிலோ எடையுள்ள அரியவகை கடல் ஆமை சிக்கியிருப்பது தெரியவந்தது.

ஆமையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் வளையை அறுத்து பத்திரமாக கடலில் விட்டனர். இந்த செயலுக்காக மீனவர்கள் பாராட்டுக்களைப் பெற்றனர்.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. முகாமில் பங்கேற்ற தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துகொண்டனர். மருத்துவ துறை சார்பில் மருத்துவ காப்பீடு திட்டம், பொது மருத்துவம், தோல் நோய்க்கான சிகிச்சைகள், அரசு மானிய திட்டங்களுக்கு தேவைப்படும் ஆதார் பதிவு, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்டன. கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் கீழ் கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த முகாமில் பெருமளவில் தூய்மை பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பதிவு செய்து பயன் பெற்றனர்.
    1
    தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

முகாமில் பங்கேற்ற தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துகொண்டனர். மருத்துவ துறை சார்பில் மருத்துவ காப்பீடு திட்டம், பொது மருத்துவம், தோல் நோய்க்கான சிகிச்சைகள், அரசு மானிய திட்டங்களுக்கு தேவைப்படும் ஆதார் பதிவு, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்டன. கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் கீழ் கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த முகாமில் பெருமளவில் தூய்மை பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பதிவு செய்து பயன் பெற்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருவாடானை பகுதியில் இரண்டு சேவல்கள் ஒன்றை ஒன்று ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டன.
    1
    திருவாடானை பகுதியில் இரண்டு சேவல்கள் ஒன்றை ஒன்று ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டன.
    user_நம்ம ஊரு ஆடானை 2
    நம்ம ஊரு ஆடானை 2
    Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆதியூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
    1
    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆதியூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
    user_நம்ம ஊரு ஆடானை 2
    நம்ம ஊரு ஆடானை 2
    Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.