logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 11வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அவரது திருவுருவப்படத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், நகரத்தை தூய்மையாக வைக்க உதவி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு என்றும் தலைவணங்கி வணக்கம் செலுத்துவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் தூய்மை பணியாளர்களின் முன்னேற்றத்திற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் தங்களது தேவைகள் எதுவாயினும் செய்து தர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். இதில் நகராட்சி ஆணையாளர் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

2 hrs ago
user_Prabakaran Praba
Prabakaran Praba
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
2 hrs ago

முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 11வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அவரது திருவுருவப்படத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், நகரத்தை தூய்மையாக வைக்க உதவி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு என்றும் தலைவணங்கி வணக்கம் செலுத்துவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் தூய்மை பணியாளர்களின் முன்னேற்றத்திற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் தங்களது தேவைகள் எதுவாயினும் செய்து தர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். இதில் நகராட்சி ஆணையாளர் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 11வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அவரது திருவுருவப்படத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், நகரத்தை தூய்மையாக வைக்க உதவி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு என்றும் தலைவணங்கி வணக்கம் செலுத்துவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் தூய்மை பணியாளர்களின் முன்னேற்றத்திற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் தங்களது தேவைகள் எதுவாயினும் செய்து தர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். இதில் நகராட்சி ஆணையாளர் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 11வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அவரது திருவுருவப்படத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், நகரத்தை தூய்மையாக வைக்க உதவி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு என்றும் தலைவணங்கி வணக்கம் செலுத்துவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் தூய்மை பணியாளர்களின் முன்னேற்றத்திற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் தங்களது தேவைகள் எதுவாயினும் செய்து தர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். இதில் நகராட்சி ஆணையாளர் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில், மயானத்திற்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்தப் பாதை சேறும் சகதியுமாகவும், மற்ற நேரங்களில் மிகவும் மோசமான நிலையிலும் காணப்படுவதால், இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, முடியனூர் கிராம மயானத்திற்குச் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
    2
    விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில், மயானத்திற்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்தப் பாதை சேறும் சகதியுமாகவும், மற்ற நேரங்களில் மிகவும் மோசமான நிலையிலும் காணப்படுவதால், இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, முடியனூர் கிராம மயானத்திற்குச் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    14 hrs ago
  • போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்தி, தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கடமலைக்குண்டு கிராமத்தில் தொடங்கி தங்கம்மாள்புரம் கிராமம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு இலக்கை நோக்கி ஓடினர். போட்டியில் கலந்துகொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, மருத்துவ முதலுதவி வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்று முதல் 5 இடங்களைப் பிடித்த நபர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
    1
    போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்தி, தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கடமலைக்குண்டு கிராமத்தில் தொடங்கி தங்கம்மாள்புரம் கிராமம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு இலக்கை நோக்கி ஓடினர்.

போட்டியில் கலந்துகொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, மருத்துவ முதலுதவி வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்று முதல் 5 இடங்களைப் பிடித்த நபர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • மதுரை வில்லாபுரம் பகுதியில் இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து அரை மணி நேரம் நடனம் ஆடிய மிகவும் அரிதான காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அரிய காட்சியைக் கண்ட மக்கள் வியப்புற்றுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் இது ஒரு அற்புதமான நிகழ்வு என்று கூறுகின்றனர். இந்த வீடியோ மதுரை தெற்கு பகுதியில் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.
    1
    மதுரை வில்லாபுரம் பகுதியில் இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து அரை மணி நேரம் நடனம் ஆடிய மிகவும் அரிதான காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அரிய காட்சியைக் கண்ட மக்கள் வியப்புற்றுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் இது ஒரு அற்புதமான நிகழ்வு என்று கூறுகின்றனர். இந்த வீடியோ மதுரை தெற்கு பகுதியில் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    7 hrs ago
  • தேனி மாவட்டத்தின் 21-வது வார்டில் உள்ள சிவாஜி நகர் விரிவாக்கப் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றன. இப்பகுதியில் ரேஷன் கடையைத் தவிர குடிநீர், தெருவிளக்கு, பாதை மற்றும் சாக்கடை வசதிகள் என எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குப்பை வண்டி எதுவும் இப்பகுதிக்கு வந்ததே கிடையாது என்றும், இதனால் குப்பைகளை ஆங்காங்கே வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கொட்டி வந்ததால், வனத்துறையினர் தற்போது வைகுண்டசாமி மில் அருகில் வனப்பகுதி வழியாக வருகின்ற பாதையினை ஜேசிபி மூலம் குழி தோண்டி அடைத்துள்ளனர். இதனால் இப்பகுதி பள்ளி / கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நகருக்குள் வருவதற்கு மிகுந்த சிரமமடைகின்றனர். விஸ்வநாததாஸ் காலனி வழியாக வரக்கூடிய பாதையானது மிகவும் குறுகலாக உள்ளதால், பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் அவசர கால ஆம்புலன்ஸ் வரவேண்டும் என்றால் கூட வனத்துறை அலுவலகத்திலிருந்து வரும் வனப்பகுதி வழியாகத் தான் வரவேண்டும். ஆனால் இதனையும் அடைத்துள்ளதால் கடந்த இரண்டு வார காலமாக மருத்துவ அவசர காலங்களில் மிகுந்த சிரமமடைந்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி சிவாஜி நகர்பகுதி பொதுமக்கள் சார்பில் அடிப்படை வசதி கேட்டுமனு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வனத்துறை சார்பில் அடைக்கப்பட்ட பாதையினை திறந்து விட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
    1
    தேனி மாவட்டத்தின் 21-வது வார்டில் உள்ள சிவாஜி நகர் விரிவாக்கப் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றன. இப்பகுதியில் ரேஷன் கடையைத் தவிர குடிநீர், தெருவிளக்கு, பாதை மற்றும் சாக்கடை வசதிகள் என எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்பை வண்டி எதுவும் இப்பகுதிக்கு வந்ததே கிடையாது என்றும், இதனால் குப்பைகளை ஆங்காங்கே வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கொட்டி வந்ததால், வனத்துறையினர் தற்போது வைகுண்டசாமி மில் அருகில் வனப்பகுதி வழியாக வருகின்ற பாதையினை ஜேசிபி மூலம் குழி தோண்டி அடைத்துள்ளனர். இதனால் இப்பகுதி பள்ளி / கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நகருக்குள் வருவதற்கு மிகுந்த சிரமமடைகின்றனர்.

விஸ்வநாததாஸ் காலனி வழியாக வரக்கூடிய பாதையானது மிகவும் குறுகலாக உள்ளதால், பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் அவசர கால ஆம்புலன்ஸ் வரவேண்டும் என்றால் கூட வனத்துறை அலுவலகத்திலிருந்து வரும் வனப்பகுதி வழியாகத் தான் வரவேண்டும். ஆனால் இதனையும் அடைத்துள்ளதால் கடந்த இரண்டு வார காலமாக மருத்துவ அவசர காலங்களில் மிகுந்த சிரமமடைந்துள்ளனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி சிவாஜி நகர்பகுதி பொதுமக்கள் சார்பில் அடிப்படை வசதி கேட்டுமனு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வனத்துறை சார்பில் அடைக்கப்பட்ட பாதையினை திறந்து விட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • மதுரை அலங்காநல்லூர் - பாலமேடு மெயின்ரோடு ரெங்கராஜபுரத்தில் அமைந்துள்ள கிரிப்டோ மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் அனுபவம் மிகுந்த மற்றும் மக்கள் சேவையாற்றும் மருத்துவர்களான Dr. PAUL (M.B.B.S), Dr. MURUGAPANDI (M.B.B.S., D.C.H), Dr. HARIKARAN (M.S. Ortho) மற்றும் Dr. DIVYA (M.S. O.G) ஆகியோர் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
    1
    மதுரை அலங்காநல்லூர் - பாலமேடு மெயின்ரோடு ரெங்கராஜபுரத்தில் அமைந்துள்ள கிரிப்டோ மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் அனுபவம் மிகுந்த மற்றும் மக்கள் சேவையாற்றும் மருத்துவர்களான Dr. PAUL (M.B.B.S), Dr. MURUGAPANDI (M.B.B.S., D.C.H), Dr. HARIKARAN (M.S. Ortho) மற்றும் Dr. DIVYA (M.S. O.G) ஆகியோர் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
    user_GANESAN  S
    GANESAN S
    Photographer மதுரை தெற்கு, மதுரை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூர் அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவிகளை ஆசிரியை தேன் மரிய சுகந்தி மட்டையால் தாக்கினார். இதனால் காயமடைந்த மாணவிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மாணவிகள் மற்றும் பெற்றோர் இந்த சம்பவத்தைப் பற்றி கோபம் கொண்டுள்ளனர். ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூர் அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவிகளை ஆசிரியை தேன் மரிய சுகந்தி மட்டையால் தாக்கினார். இதனால் காயமடைந்த மாணவிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

மாணவிகள் மற்றும் பெற்றோர் இந்த சம்பவத்தைப் பற்றி கோபம் கொண்டுள்ளனர். ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ஊத்துக்காடு கிராமத்தில், நகராட்சி குப்பை வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. கம்பம் நகராட்சி, தனியார் தோட்டத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் குப்பைகளை கொட்ட முயன்றதை எதிர்த்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பைகள் கொட்டப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் துர்நாற்றம் ஏற்படும் எனக் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் உத்தமபாளையம் காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் நகராட்சிக்கான குப்பைகள் கொட்டப்படாது, பாதிப்பு ஏற்படாது என உறுதியளிக்கப்பட்ட பின்னரே குப்பைகளை கொட்ட அனுமதிக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, நகராட்சி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
    1
    தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ஊத்துக்காடு கிராமத்தில், நகராட்சி குப்பை வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. கம்பம் நகராட்சி, தனியார் தோட்டத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் குப்பைகளை கொட்ட முயன்றதை எதிர்த்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பைகள் கொட்டப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் துர்நாற்றம் ஏற்படும் எனக் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் உத்தமபாளையம் காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் நகராட்சிக்கான குப்பைகள் கொட்டப்படாது, பாதிப்பு ஏற்படாது என உறுதியளிக்கப்பட்ட பின்னரே குப்பைகளை கொட்ட அனுமதிக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, நகராட்சி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.