போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்தி, தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கடமலைக்குண்டு கிராமத்தில் தொடங்கி தங்கம்மாள்புரம் கிராமம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு இலக்கை நோக்கி ஓடினர். போட்டியில் கலந்துகொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, மருத்துவ முதலுதவி வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்று முதல் 5 இடங்களைப் பிடித்த நபர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்தி, தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கடமலைக்குண்டு கிராமத்தில் தொடங்கி தங்கம்மாள்புரம் கிராமம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு இலக்கை நோக்கி ஓடினர். போட்டியில் கலந்துகொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, மருத்துவ முதலுதவி வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்று முதல் 5 இடங்களைப் பிடித்த நபர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
- போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்தி, தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கடமலைக்குண்டு கிராமத்தில் தொடங்கி தங்கம்மாள்புரம் கிராமம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு இலக்கை நோக்கி ஓடினர். போட்டியில் கலந்துகொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குத் தேவையான குடிநீர் வசதி, மருத்துவ முதலுதவி வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்று முதல் 5 இடங்களைப் பிடித்த நபர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.1
- தேனி மாவட்டத்தின் 21-வது வார்டில் உள்ள சிவாஜி நகர் விரிவாக்கப் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றன. இப்பகுதியில் ரேஷன் கடையைத் தவிர குடிநீர், தெருவிளக்கு, பாதை மற்றும் சாக்கடை வசதிகள் என எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குப்பை வண்டி எதுவும் இப்பகுதிக்கு வந்ததே கிடையாது என்றும், இதனால் குப்பைகளை ஆங்காங்கே வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கொட்டி வந்ததால், வனத்துறையினர் தற்போது வைகுண்டசாமி மில் அருகில் வனப்பகுதி வழியாக வருகின்ற பாதையினை ஜேசிபி மூலம் குழி தோண்டி அடைத்துள்ளனர். இதனால் இப்பகுதி பள்ளி / கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நகருக்குள் வருவதற்கு மிகுந்த சிரமமடைகின்றனர். விஸ்வநாததாஸ் காலனி வழியாக வரக்கூடிய பாதையானது மிகவும் குறுகலாக உள்ளதால், பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் அவசர கால ஆம்புலன்ஸ் வரவேண்டும் என்றால் கூட வனத்துறை அலுவலகத்திலிருந்து வரும் வனப்பகுதி வழியாகத் தான் வரவேண்டும். ஆனால் இதனையும் அடைத்துள்ளதால் கடந்த இரண்டு வார காலமாக மருத்துவ அவசர காலங்களில் மிகுந்த சிரமமடைந்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி சிவாஜி நகர்பகுதி பொதுமக்கள் சார்பில் அடிப்படை வசதி கேட்டுமனு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வனத்துறை சார்பில் அடைக்கப்பட்ட பாதையினை திறந்து விட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.1
- மதுரை வில்லாபுரம் பகுதியில் இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து அரை மணி நேரம் நடனம் ஆடிய மிகவும் அரிதான காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அரிய காட்சியைக் கண்ட மக்கள் வியப்புற்றுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் இது ஒரு அற்புதமான நிகழ்வு என்று கூறுகின்றனர். இந்த வீடியோ மதுரை தெற்கு பகுதியில் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.1
- திண்டுக்கல் மாவட்டம் கசவணம்பட்டியில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோவில் திருவிழா உற்சவம் நடைபெறுகிறது.1
- மதுரை அலங்காநல்லூர் - பாலமேடு மெயின்ரோடு ரெங்கராஜபுரத்தில் அமைந்துள்ள கிரிப்டோ மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் அனுபவம் மிகுந்த மற்றும் மக்கள் சேவையாற்றும் மருத்துவர்களான Dr. PAUL (M.B.B.S), Dr. MURUGAPANDI (M.B.B.S., D.C.H), Dr. HARIKARAN (M.S. Ortho) மற்றும் Dr. DIVYA (M.S. O.G) ஆகியோர் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்குகின்றனர்.1
- விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில், மயானத்திற்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இந்தப் பாதை சேறும் சகதியுமாகவும், மற்ற நேரங்களில் மிகவும் மோசமான நிலையிலும் காணப்படுவதால், இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, முடியனூர் கிராம மயானத்திற்குச் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.2
- திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் பிரிண்டர்ஸ் மற்றும் டிராவல்ஸ் கடை வைத்திருப்பவர் செல்வன். இவர் நேற்று வழக்கம்போல் தனது சுற்றுலா வேனை கடையின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த டீசல் டேங்கின் மூடி சேதமடைந்த நிலையில் கிழே கிடந்ததோடு டீசலும் தரையில் சிந்தி இருந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சியடைந்த செல்வன் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காடசிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் அதிகாலை 4 மணியளவில் வேனிற்கு முன்பு வந்து நிறுத்தப்பட்ட ஒரு காரில் இருந்து இறங்கி வரும் மர்ம நபர் ஒருவர் வேனின் அடிப்பகுதியில் லாவகமாக நுழைந்து செல்லும் காட்சியும், பின்னர் வேனில் இருந்து கேனில் டீசலை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. வண்டியின் டீசல் டேங்கில் முழு அளவு டீசல் இருந்த நிலையில் இன்று பார்த்தபோது பாதிக்கும் குறைவான டீசலே இருந்துள்ளது. 30 - 40 லிட்டர் டீசல் வரை திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து செல்வன் மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் டீசல் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த பகுதியில் அதிகாலையில் மர்ம நபர்கள் காரில் வந்து டீசலை திருடிச்சென்ற சம்பவம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ஊத்துக்காடு கிராமத்தில், நகராட்சி குப்பை வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. கம்பம் நகராட்சி, தனியார் தோட்டத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் குப்பைகளை கொட்ட முயன்றதை எதிர்த்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பைகள் கொட்டப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் துர்நாற்றம் ஏற்படும் எனக் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் உத்தமபாளையம் காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் நகராட்சிக்கான குப்பைகள் கொட்டப்படாது, பாதிப்பு ஏற்படாது என உறுதியளிக்கப்பட்ட பின்னரே குப்பைகளை கொட்ட அனுமதிக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, நகராட்சி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.1