logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

டாஸ்மாக் ஊழலில் மாற்றம்? டாஸ்மாக் கடைகளில் MRP-க்கு அதிகமாக ஒரு ரூபாய் வாங்கினாலும், போலீசில் புகார் கொடுத்து கைது செய்யலாம். புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு அதிரடி முடிவு.

1 hr ago
user_Natarajan Pitchaimani
Natarajan Pitchaimani
Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
1 hr ago
4b235cd4-779a-4c8e-bcde-abf5f1498975

டாஸ்மாக் ஊழலில் மாற்றம்? டாஸ்மாக் கடைகளில் MRP-க்கு அதிகமாக ஒரு ரூபாய் வாங்கினாலும், போலீசில் புகார் கொடுத்து கைது செய்யலாம். புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு அதிரடி முடிவு.

More news from Dindigul and nearby areas
  • தமிழக சட்டசபையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெரியசாமி பதவியேற்றார். முன்னாள் தமிழக அமைச்சரான அவர், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
    1
    தமிழக சட்டசபையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெரியசாமி பதவியேற்றார். முன்னாள் தமிழக அமைச்சரான அவர், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    9 hrs ago
  • தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் இளஞ்செழியன் நூதன முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தர்பூசணிப் பழத்தில் விஜயின் முகத்தையும், 'தமிழ்நாடு சிஎம் 2026' என்ற வாசகத்தையும் செதுக்கி அவர் தனது வாழ்த்தைப் பதிவு செய்தார்.
    1
    தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் இளஞ்செழியன் நூதன முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தர்பூசணிப் பழத்தில் விஜயின் முகத்தையும், 'தமிழ்நாடு சிஎம் 2026' என்ற வாசகத்தையும் செதுக்கி அவர் தனது வாழ்த்தைப் பதிவு செய்தார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சிங்கம்புணரி அரசு மருத்துவமனை குடியிருப்பில் அரசமரம் முறிந்து விழுந்து பரபரப்பு – கை குழந்தைகளுடன் அலறியடித்து ஓடிய பணியாளர்கள்! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு மருத்துவமனை பணியாளர் குடியிருப்பின் மீது பழமையான அரசமரத்தின் பெரிய கிளை திடீரென முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டிற்குள் இருந்த பெண்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கை குழந்தைகளை தூக்கிக்கொண்டு பதற்றத்துடன் வெளியே ஓடியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பே மரக்கிளைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நடந்ததாக மருத்துவப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது குடியிருப்பு சேதமடைந்த நிலையில், மரத்தை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    சிங்கம்புணரி அரசு மருத்துவமனை குடியிருப்பில் அரசமரம் முறிந்து விழுந்து பரபரப்பு – கை குழந்தைகளுடன் அலறியடித்து ஓடிய பணியாளர்கள்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு மருத்துவமனை பணியாளர் குடியிருப்பின் மீது பழமையான அரசமரத்தின் பெரிய கிளை திடீரென முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டிற்குள் இருந்த பெண்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கை குழந்தைகளை தூக்கிக்கொண்டு பதற்றத்துடன் வெளியே ஓடியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பே மரக்கிளைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நடந்ததாக மருத்துவப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது குடியிருப்பு சேதமடைந்த நிலையில், மரத்தை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் வாழ்த்து பதாகைகளும் வைத்திருந்தனர் இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜோசப் விஜய் பதவி ஏற்பிற்காக கட்சி நிர்வாகிகள் வைத்திருந்த வாழ்த்துப் பேனர்கள் உள்பட அரசியல் கட்சி பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்று போலீசார் அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். இதனையடுத்து தவெக நிர்வாகிகள் தாங்கள் வைத்த பதாகைகளை தாங்களே அகற்றினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவையடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது
    3
    அன்னவாசல்  பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். 
அன்னவாசல்  பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். 
தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் வாழ்த்து பதாகைகளும் வைத்திருந்தனர் 
இந்தநிலையில்  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜோசப் விஜய் பதவி ஏற்பிற்காக கட்சி நிர்வாகிகள் வைத்திருந்த வாழ்த்துப் பேனர்கள் உள்பட அரசியல் கட்சி பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்று போலீசார் அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். 
இதனையடுத்து தவெக நிர்வாகிகள் தாங்கள் வைத்த பதாகைகளை தாங்களே அகற்றினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவையடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேனியில் நடைபெற்ற 2026 மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் பிடித்தன. வெற்றியாளர்களுக்கு தேசியப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
    1
    தேனியில் நடைபெற்ற 2026 மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் பிடித்தன. வெற்றியாளர்களுக்கு தேசியப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள கன்னுடைய அய்யனார், சாத்த பிள்ளை அய்யனார் கோவிலில் சித்திரை மாத தேர் திருவிழா கண்ணைக் கவரும் வானவேடிக்கையுடன் மிக விமர்சையாக நடந்தது திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் கிராமத்தில் கண்ணுடைய ஐயனார், சாத்தப்பிள்ளை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இந்த நிலையில் அந்த கோவிலில் சித்திரை மாததேர் திருவிழா நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பர முறைப்படி பழமை மாறாமல் தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் அவர்கள் வீட்டு வாசலில் பசு மாட்டின் சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வராட்டியில் பாத்திரம் வைத்து பச்ச அரிசி மற்றும் பசும்பால் இட்டு பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக மே மாதம் 2 ஆம் தேதி காப்பு கட்டி அதன் பிறகு 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கண்ணுடைய அய்யனார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிராம சாவடியிலிருந்து சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது 6ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும் 7 ஆம் தேதி அன்னபட்சி மற்றும் கொள்ளு திண்ணி குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது. 8ஆம் தேதி இரவு காவு பிடித்து காவு எரிதல் 9 ஆம் தேதி இரவு சப்பாரத்தில் சுவாமிகள் வீதி உலா 10ஆம் பச்ச பட்டினியும் 11ம் தேதியான அதிகாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு தேர் வடம் பிடித்தலும் அதன் பிறகு முனியாண்டவர் வீதி உலா மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிகண்ணுடைய அய்யனார் மற்றும் சாத்த பிள்ளை அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர் வலம் வந்த பிறகு கண்ணை கவரும் மாணவேடிக்கை விமர்சையாக நடைபெற்றது
    1
    கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள கன்னுடைய அய்யனார், சாத்த பிள்ளை அய்யனார் கோவிலில் சித்திரை மாத தேர் 
திருவிழா கண்ணைக் கவரும்  வானவேடிக்கையுடன்  மிக விமர்சையாக நடந்தது

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் கிராமத்தில் கண்ணுடைய ஐயனார், சாத்தப்பிள்ளை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது.
இந்த நிலையில் அந்த கோவிலில் சித்திரை மாததேர் திருவிழா  நடந்தது.
தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பர முறைப்படி பழமை மாறாமல் தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் அவர்கள் வீட்டு வாசலில் பசு மாட்டின் சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வராட்டியில் பாத்திரம் வைத்து பச்ச அரிசி மற்றும் பசும்பால் இட்டு  பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர்.
முன்னதாக மே மாதம் 2 ஆம் தேதி காப்பு கட்டி அதன் பிறகு 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கண்ணுடைய அய்யனார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது.
அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிராம சாவடியிலிருந்து சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது 6ஆம் தேதி   இரவு யானை வாகனத்திலும் 7 ஆம் தேதி அன்னபட்சி   மற்றும் கொள்ளு திண்ணி குதிரை  வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது.
8ஆம் தேதி  இரவு காவு பிடித்து காவு எரிதல் 9 ஆம் தேதி  இரவு சப்பாரத்தில் சுவாமிகள் வீதி உலா 10ஆம் பச்ச பட்டினியும்
11ம் தேதியான  அதிகாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு தேர் வடம் பிடித்தலும் அதன் பிறகு முனியாண்டவர் வீதி உலா மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிகண்ணுடைய அய்யனார் மற்றும் சாத்த பிள்ளை அய்யனார் பக்தர்களுக்கு  காட்சியளித்தனர்.
தேர் வலம் வந்த பிறகு கண்ணை கவரும் மாணவேடிக்கை  விமர்சையாக நடைபெற்றது
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனில் மூழ்கியிருந்தனர். போதிய இருக்கை வசதியின்றி, அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனில் மூழ்கியிருந்தனர். போதிய இருக்கை வசதியின்றி, அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • தேனி வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை முதல் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதால், கோவில் அருகே ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது பக்தர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் பொழுதுபோக்காய் அமையும்.
    1
    தேனி வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை முதல் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதால், கோவில் அருகே ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது பக்தர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் பொழுதுபோக்காய் அமையும்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது சிவகங்கை மாவட்டம் பெரிய கிளுகிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கந்தசாமி இவர் சிவகங்கை மாவட்டத்தில் சாத்தரசன்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் சாலை பணியை 2.5 கோடி மதிப்பில் மேற்கொண்டார். கடந்த ஓராண்டாக பல்வேறு கட்டங்களில் ஒப்பந்த தொகை பெறப்பட்டாலும் எஞ்சிய 18 லட்ச ரூபாய் தொகையை பெற நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் -யை சந்தித்து கேட்டு வந்துள்ளார் . அதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு அலைக்கழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கந்தசாமி சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார் . லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ஒரு லட்ச ரூபாயை கந்தசாமி மூலமாக இன்று உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் - யை சந்தித்து வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது இதனால் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
    1
    நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம்  ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது
சிவகங்கை மாவட்டம் பெரிய கிளுகிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கந்தசாமி இவர் சிவகங்கை மாவட்டத்தில் சாத்தரசன்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் சாலை பணியை 2.5 கோடி மதிப்பில்  மேற்கொண்டார். கடந்த ஓராண்டாக பல்வேறு கட்டங்களில் ஒப்பந்த தொகை பெறப்பட்டாலும் எஞ்சிய 18 லட்ச ரூபாய் தொகையை பெற நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் -யை சந்தித்து கேட்டு வந்துள்ளார் . அதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு அலைக்கழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கந்தசாமி சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார் . லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ஒரு லட்ச ரூபாயை கந்தசாமி மூலமாக இன்று உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் - யை சந்தித்து வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது இதனால் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.