நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது சிவகங்கை மாவட்டம் பெரிய கிளுகிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கந்தசாமி இவர் சிவகங்கை மாவட்டத்தில் சாத்தரசன்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் சாலை பணியை 2.5 கோடி மதிப்பில் மேற்கொண்டார். கடந்த ஓராண்டாக பல்வேறு கட்டங்களில் ஒப்பந்த தொகை பெறப்பட்டாலும் எஞ்சிய 18 லட்ச ரூபாய் தொகையை பெற நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் -யை சந்தித்து கேட்டு வந்துள்ளார் . அதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு அலைக்கழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கந்தசாமி சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார் . லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ஒரு லட்ச ரூபாயை கந்தசாமி மூலமாக இன்று உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் - யை சந்தித்து வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது இதனால் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது சிவகங்கை மாவட்டம் பெரிய கிளுகிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கந்தசாமி இவர் சிவகங்கை மாவட்டத்தில் சாத்தரசன்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் சாலை பணியை 2.5 கோடி மதிப்பில் மேற்கொண்டார். கடந்த ஓராண்டாக பல்வேறு கட்டங்களில் ஒப்பந்த தொகை பெறப்பட்டாலும் எஞ்சிய 18 லட்ச ரூபாய் தொகையை பெற நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் -யை சந்தித்து கேட்டு வந்துள்ளார் . அதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு அலைக்கழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கந்தசாமி சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார் . லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ஒரு லட்ச ரூபாயை கந்தசாமி மூலமாக இன்று உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் - யை சந்தித்து வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது இதனால் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
- மானாமதுரை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வசதி இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு சுற்றுவட்டார 18 கிராமங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கிராம மக்களால் வழங்கப்பட்ட பொருட்களை காணாமல் போய்விட்டதாகவும், ஸ்கேன் உள்பட மருத்துவ உபகரணங்கள் செயல்படாததால் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள் பலரும் பாதிப்படைந்து வருவதாகவும் இதனால் மாவட்ட ஆட்சியர் ஆரம்ப சுகாதார மையத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.1
- திருவாடானை முதலமைச்சர் விஜய் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி ஆதரவு தெரிவித்தார்கள்1
- அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்பட வேண்டும் என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை சபாநாயகரிடம் வழங்கினர்.1
- அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் வாழ்த்து பதாகைகளும் வைத்திருந்தனர் இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜோசப் விஜய் பதவி ஏற்பிற்காக கட்சி நிர்வாகிகள் வைத்திருந்த வாழ்த்துப் பேனர்கள் உள்பட அரசியல் கட்சி பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்று போலீசார் அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். இதனையடுத்து தவெக நிர்வாகிகள் தாங்கள் வைத்த பதாகைகளை தாங்களே அகற்றினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவையடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது3
- தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி *தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி* தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் பாலசுந்தராசு நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் மகனும் மாநில இளைஞரணி தலைவருமான வியாங்கோ பாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு நினைவிடத்தில் மாலை அணிவித்து "வீரவணக்கம் வீரவணக்கம்" என கோஷங்களை எழுப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தினர் இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் பாலா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள கன்னுடைய அய்யனார், சாத்த பிள்ளை அய்யனார் கோவிலில் சித்திரை மாத தேர் திருவிழா கண்ணைக் கவரும் வானவேடிக்கையுடன் மிக விமர்சையாக நடந்தது திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் கிராமத்தில் கண்ணுடைய ஐயனார், சாத்தப்பிள்ளை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இந்த நிலையில் அந்த கோவிலில் சித்திரை மாததேர் திருவிழா நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பர முறைப்படி பழமை மாறாமல் தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் அவர்கள் வீட்டு வாசலில் பசு மாட்டின் சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வராட்டியில் பாத்திரம் வைத்து பச்ச அரிசி மற்றும் பசும்பால் இட்டு பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக மே மாதம் 2 ஆம் தேதி காப்பு கட்டி அதன் பிறகு 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கண்ணுடைய அய்யனார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிராம சாவடியிலிருந்து சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது 6ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும் 7 ஆம் தேதி அன்னபட்சி மற்றும் கொள்ளு திண்ணி குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது. 8ஆம் தேதி இரவு காவு பிடித்து காவு எரிதல் 9 ஆம் தேதி இரவு சப்பாரத்தில் சுவாமிகள் வீதி உலா 10ஆம் பச்ச பட்டினியும் 11ம் தேதியான அதிகாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு தேர் வடம் பிடித்தலும் அதன் பிறகு முனியாண்டவர் வீதி உலா மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிகண்ணுடைய அய்யனார் மற்றும் சாத்த பிள்ளை அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர் வலம் வந்த பிறகு கண்ணை கவரும் மாணவேடிக்கை விமர்சையாக நடைபெற்றது1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், தேனியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தர்பூசணியில் அவரது முகத்தை வடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் வாழ்த்து வாசகங்களுடன், வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தினார்.1
- சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றவை கொண்டாடும் விதமாக சிவகங்கை அரண்மனை வாசலில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பேருந்து நிலையம் வரை தவெக வினர் பேரணியாக சென்று கொண்டாடி மகிழ்ந்தனர்.1