Shuru
Apke Nagar Ki App…
சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றவை கொண்டாடும் விதமாக சிவகங்கை அரண்மனை வாசலில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பேருந்து நிலையம் வரை தவெக வினர் பேரணியாக சென்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
Devakottaigani news
சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றவை கொண்டாடும் விதமாக சிவகங்கை அரண்மனை வாசலில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பேருந்து நிலையம் வரை தவெக வினர் பேரணியாக சென்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றவை கொண்டாடும் விதமாக சிவகங்கை அரண்மனை வாசலில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பேருந்து நிலையம் வரை தவெக வினர் பேரணியாக சென்று கொண்டாடி மகிழ்ந்தனர்.1
- திருவாடானை முதலமைச்சர் விஜய் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி ஆதரவு தெரிவித்தார்கள்1
- TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.1
- அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்பட வேண்டும் என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை சபாநாயகரிடம் வழங்கினர்.1
- அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் வாழ்த்து பதாகைகளும் வைத்திருந்தனர் இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜோசப் விஜய் பதவி ஏற்பிற்காக கட்சி நிர்வாகிகள் வைத்திருந்த வாழ்த்துப் பேனர்கள் உள்பட அரசியல் கட்சி பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்று போலீசார் அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். இதனையடுத்து தவெக நிர்வாகிகள் தாங்கள் வைத்த பதாகைகளை தாங்களே அகற்றினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவையடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது3
- கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள கன்னுடைய அய்யனார், சாத்த பிள்ளை அய்யனார் கோவிலில் சித்திரை மாத தேர் திருவிழா கண்ணைக் கவரும் வானவேடிக்கையுடன் மிக விமர்சையாக நடந்தது திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் கிராமத்தில் கண்ணுடைய ஐயனார், சாத்தப்பிள்ளை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இந்த நிலையில் அந்த கோவிலில் சித்திரை மாததேர் திருவிழா நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பர முறைப்படி பழமை மாறாமல் தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் அவர்கள் வீட்டு வாசலில் பசு மாட்டின் சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வராட்டியில் பாத்திரம் வைத்து பச்ச அரிசி மற்றும் பசும்பால் இட்டு பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக மே மாதம் 2 ஆம் தேதி காப்பு கட்டி அதன் பிறகு 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கண்ணுடைய அய்யனார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிராம சாவடியிலிருந்து சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது 6ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும் 7 ஆம் தேதி அன்னபட்சி மற்றும் கொள்ளு திண்ணி குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது. 8ஆம் தேதி இரவு காவு பிடித்து காவு எரிதல் 9 ஆம் தேதி இரவு சப்பாரத்தில் சுவாமிகள் வீதி உலா 10ஆம் பச்ச பட்டினியும் 11ம் தேதியான அதிகாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு தேர் வடம் பிடித்தலும் அதன் பிறகு முனியாண்டவர் வீதி உலா மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிகண்ணுடைய அய்யனார் மற்றும் சாத்த பிள்ளை அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர் வலம் வந்த பிறகு கண்ணை கவரும் மாணவேடிக்கை விமர்சையாக நடைபெற்றது1
- தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் இளஞ்செழியன் நூதன முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தர்பூசணிப் பழத்தில் விஜயின் முகத்தையும், 'தமிழ்நாடு சிஎம் 2026' என்ற வாசகத்தையும் செதுக்கி அவர் தனது வாழ்த்தைப் பதிவு செய்தார்.1
- சிங்கம்புணரி அரசு மருத்துவமனை குடியிருப்பில் அரசமரம் முறிந்து விழுந்து பரபரப்பு – கை குழந்தைகளுடன் அலறியடித்து ஓடிய பணியாளர்கள்! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு மருத்துவமனை பணியாளர் குடியிருப்பின் மீது பழமையான அரசமரத்தின் பெரிய கிளை திடீரென முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டிற்குள் இருந்த பெண்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கை குழந்தைகளை தூக்கிக்கொண்டு பதற்றத்துடன் வெளியே ஓடியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பே மரக்கிளைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நடந்ததாக மருத்துவப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது குடியிருப்பு சேதமடைந்த நிலையில், மரத்தை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1