மகனை ஜீவசமாதி அடைய வைக்க திட்டம் : மதுரை நீதிமன்றத்தில் தாய் முறையீடு மதுரை: காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட மகனை சாமியாராக மாற்றி, அடைத்து வைத்து துன்புறுத்துவதாக தாய் ராஜம்மாள் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து காளையார் கோவில் போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை துவரிமானைச் சேர்ந்த ராஜம்மாளின் மகன் பரந்தாமன், 2011-ல் சிகிச்சைக்கு சென்று திரும்பும்போது காணாமல் போனார். தற்போது அவர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் சாமியார் கோலத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பல், அவரை ஜீவசமாதி அடையச் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தாய் புகார் கூறியுள்ளார். மகனை மீட்டு ஆஜர்ப்படுத்தக் கோரிய இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இளந்திரையன், பூர்ணிமா அமர்வு, காளையார் கோவில் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
மகனை ஜீவசமாதி அடைய வைக்க திட்டம் : மதுரை நீதிமன்றத்தில் தாய் முறையீடு மதுரை: காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட மகனை சாமியாராக மாற்றி, அடைத்து வைத்து துன்புறுத்துவதாக தாய் ராஜம்மாள் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து காளையார் கோவில் போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை துவரிமானைச் சேர்ந்த ராஜம்மாளின் மகன் பரந்தாமன், 2011-ல் சிகிச்சைக்கு சென்று திரும்பும்போது காணாமல் போனார். தற்போது அவர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் சாமியார் கோலத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பல், அவரை ஜீவசமாதி அடையச் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தாய் புகார் கூறியுள்ளார். மகனை மீட்டு ஆஜர்ப்படுத்தக் கோரிய இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இளந்திரையன், பூர்ணிமா அமர்வு, காளையார் கோவில் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
- 30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத ஆவின் நிர்வாகம்: தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சொத்துகள் ஜப்தி மதுரை, பிப்.18- மதுரை பால் பண்ணையில் நீண்டகாலமாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை 30 ஆண்டுகளாக வழங்காததால், தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவின் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மதுரை பால் பண்ணை நிர்வாகத்தில் 1985ஆம் ஆண்டு முதல் கேசுவல் தொழிலாளர்களாக பணியாற்றிய 23 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தொழிற்சாலை ஆய்வாளர் 23 தொழிலாளர்களுக்கும் பணிநிரந்தர உத்தரவு வழங்கினார். இதற்கு எதிராக நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்து, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகரான தொகையை வழங்க உத்தரவிட்டது. பின்னர் நிர்வாகம் மேற்கொண்ட மேல்முறையீடும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்களில் ஒருவரான வெங்கடாசலம் மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி பணப்பலன்களை பெற்றுக்கொண்ட நிலையில், மற்ற 19 தொழிலாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதுரை தொழிலாளர் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்தனர். தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், நிர்வாகம் மீண்டும் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடும் 12.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாததால் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 07.02.2026 அன்று மதுரை தொழிலாளர் நீதிமன்றம் ஆவின் பால்பண்ணை அலுவலகத்தில் உள்ள சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, இன்று (18.02.2026) அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அலுவலகத்தில் உள்ள ஏசி இயந்திரங்கள், கணினிகள், விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் . தெரிவித்ததாவது: “இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிலர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்; பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய கிராஜுவிட்டி, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வட்டி சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ளது,” என்றார். மேலும், பால் விநியோக சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய இயந்திரங்கள் ஜப்தி செய்யப்படாமல், அலுவலக பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே ஜப்தி செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். சுமார் ரூ.1.25 கோடி நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டால் ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த சம்பவம், அரசு நிறுவனமாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைப்பு தொழிலாளர்களின் உரிமைகளை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பாக மதுரை பொது மேலாளர் சிவகாமி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டுள்ளார்.2
- Post by Saba Saba1
- மதுரையில் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் டாக்டர் சரவணனை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர். ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய திமுக மீது குற்றச்சாட்டு. தங்கள் கோரிக்கைகளை பொதுச் செயலாளருக்கு எடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும், சமீபத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய விளம்பர நிகழ்வில் கூட இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை, இதனையடுத்து ஏராளமான ஆதிதிராவிட மக்கள் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் கஷ்டங்களை தெரிவித்தனர், ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட டாக்டர் பா.சரவணன் பந்தல்குடி பகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அம்மக்கள் திமுக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், டாக்டர் சரவணனை சந்தித்து பேசியது மன நிறைவை தருவதாகவும் தெரிவித்தனர், மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.1
- வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடல் அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன்க்கு சொந்தமான அரசு ஆரம்ப பள்ளி உள்ளது அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சமூக விரோதிகள் தவறு செய்யும் சூழல் உள்ளது இதைசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்1
- திண்டுக்கல், குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த திருநங்கை காசியம்மாள் என்பவர் குஜிலியம்பாறை, நொச்சிப்பட்டியை சேர்ந்த பொன்னரசி என்பவர் மீது புகார் அளித்தார். திருநங்கை காசியம்மாள் குறித்தும், காவல் நிலையத்திற்கு வருவது குறித்தும் பொன்னரசி சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இதனால் காசியம்மாவால் ஏமாற்றப்பட்ட பலர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இது குறித்து வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா விசாரணை மேற்கொண்டார். அப்போது பொன்னரசி, சென்னை சேர்ந்த முருகேசன், தஞ்சாவூரை சேர்ந்த சங்கர், மணிமாறன் சேர்ந்த ஏர்வாடியை சேர்ந்த பூமிநாதன் ஆகிய 5 பேர் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து ரகளை ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, கூலம்பட்டி,மேட்டுகாமன் பட்டி பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பூக்களை அதிகப்படியாக விவசாயம் செய்து, அதனை நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் மேட்டுகாமன் பட்டியலில் இருந்து நிலக்கோட்டை பிரிவு வரை உள்ள சாலை சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளதால் மார்க்கெட்டிற்கு பூக்களை வாகனங்களில் கொண்டு செல்லும் விவசாயிகள் கடும் சிரமத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளதால் துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை சீரமைத்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு இதனால் அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- தமிழகத்தில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுவதாகூறபட்டிருந்ததால்குழம்பும்சூழல் இருந்த நிலையில் தற்போது டாஸ்மாக் திறந்தால் மது பிரியர்கள் மகிழ்ச்சி1