logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சேலம் மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்! சேலம் மாநகர காவல் அறிவிப்பு... சேலம் மாநகர காவல் துறை சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாநகரப் பகுதிகளில் இரவு காவல் ரோந்து பணிகளை மேற்கொள்ளும் காவல் அதிகாரிகளின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி, சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் பரவாசுதேவன் தலைமையில், சேலம் டவுன் மற்றும் அன்னதானப்பட்டி காவல் சரகம் ஆய்வாளர் குமார், கொண்டலாம்பட்டி காவல் சரகம் ஆய்வாளர் பிரகாஷ், அம்மாபேட்டை காவல் சரகம் ஆய்வாளர் புவனேஸ்வரி, அஸ்தம்பட்டி காவல் சரகம் ஆய்வாளர் பாபு சுரேஷ் குமார், சூரமங்கலம் காவல் சரகம் ஆய்வாளர் சந்திரமோகன், மேலும் பொதுமக்கள் புகார் ஏதும் இருப்பின் அது குறித்து தகவல் தெரிவிக்க 83000-03368 மற்றும் 0427-22110002, 2221887, 9498181218, ஆகிய எங்களுக்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 hrs ago
user_Rajendran
Rajendran
salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
11 hrs ago
8f382603-8db9-4590-a0a3-a084190190bc

சேலம் மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்! சேலம் மாநகர காவல் அறிவிப்பு... சேலம் மாநகர காவல் துறை சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாநகரப் பகுதிகளில் இரவு காவல் ரோந்து பணிகளை மேற்கொள்ளும் காவல் அதிகாரிகளின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி, சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் பரவாசுதேவன் தலைமையில், சேலம் டவுன் மற்றும் அன்னதானப்பட்டி காவல் சரகம் ஆய்வாளர் குமார், கொண்டலாம்பட்டி காவல் சரகம் ஆய்வாளர் பிரகாஷ், அம்மாபேட்டை காவல் சரகம் ஆய்வாளர் புவனேஸ்வரி, அஸ்தம்பட்டி காவல் சரகம் ஆய்வாளர் பாபு சுரேஷ் குமார், சூரமங்கலம் காவல் சரகம் ஆய்வாளர் சந்திரமோகன், மேலும் பொதுமக்கள் புகார் ஏதும் இருப்பின் அது குறித்து தகவல் தெரிவிக்க 83000-03368 மற்றும் 0427-22110002, 2221887, 9498181218, ஆகிய எங்களுக்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சேலத்தில் தானியங்கி கேமரா மூலம் அபராதம்! கண்காணிப்பு அறையை திறந்து வைத்த காவல் ஆணையாளர்... சேலம் மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாத வாகனங்களை கண்காணித்து தானியங்கி கேமரா மூலம் அபராதம் பிரிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான கண்காணிப்பு அதை திறப்பு விழா காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஜோசி நிர்மல் குமார் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து தானியங்கி கேமராக்கள் செயல்படும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    சேலத்தில் தானியங்கி கேமரா மூலம் அபராதம்! கண்காணிப்பு அறையை திறந்து வைத்த காவல் ஆணையாளர்...
சேலம் மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாத வாகனங்களை கண்காணித்து தானியங்கி கேமரா மூலம் அபராதம் பிரிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான கண்காணிப்பு அதை திறப்பு விழா காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஜோசி நிர்மல் குமார் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து தானியங்கி கேமராக்கள் செயல்படும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    13 hrs ago
  • தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் – சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக, தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்ததை அறிவித்ததை அடுத்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
    2
    தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் – சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக, தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்ததை அறிவித்ததை அடுத்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    14 hrs ago
  • தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், வேலையின்மை மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சுரண்டல் வேண்டாம், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் தொழிற்சங்கங்களில் அனைத்து அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், வேலையின்மை மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சுரண்டல் வேண்டாம், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் தொழிற்சங்கங்களில் அனைத்து அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    9 hrs ago
  • ✨ உடல் சோர்வை மறந்து புத்துணர்ச்சி பெறுங்கள்! 💆‍♂️ தினசரி வேலைப்பளு, பயணம், மன அழுத்தம்... எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய இடைவெளி கொடுங்கள். 🌿 தரமான மசாஜ் சேவை 💰 கட்டணம்: ₹1500 மட்டும் 👨‍⚕️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மூலம் மட்டும் மசாஜ் 📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR Silks பின்புறம் 📞 முன்பதிவு / தொடர்புக்கு: 063854 43602 உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை இன்று கொடுங்கள்! 🌸 #ErodeMassageCenter #Erode #Massage #Wellness #Relax #StressRelief #BodyCare #MassageTherapy #TamilNadu #SelfCare #ErodeBusiness #HealthyLifestyle #RelaxRecharge #InstagramTamil #ThreadsTamil ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.
    1
    ✨ உடல் சோர்வை மறந்து புத்துணர்ச்சி பெறுங்கள்! 💆‍♂️

தினசரி வேலைப்பளு, பயணம், மன அழுத்தம்... எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய இடைவெளி கொடுங்கள்.

🌿 தரமான மசாஜ் சேவை
💰 கட்டணம்: ₹1500 மட்டும்
👨‍⚕️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மூலம் மட்டும் மசாஜ்
📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR Silks பின்புறம்

📞 முன்பதிவு / தொடர்புக்கு: 063854 43602

உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை இன்று கொடுங்கள்! 🌸

#ErodeMassageCenter #Erode #Massage #Wellness #Relax #StressRelief #BodyCare #MassageTherapy #TamilNadu #SelfCare #ErodeBusiness #HealthyLifestyle #RelaxRecharge #InstagramTamil #ThreadsTamil
ஈரோடு மசாஜ் சென்டர்
ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage)
உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு
அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள்.
எங்கள் சேவைகள்
- உடல் தளர்வு மசாஜ்
- முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ்
- மன அழுத்த நிவாரண மசாஜ்
- புத்துணர்ச்சி தரும் தெரபி
எங்கள் சிறப்பம்சங்கள்
✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும்
✔ அனுபவமிக்க தெரபிஸ்ட்
✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல்
✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள்
✔ தரமான சேவை
கட்டணம்
💰 ரூ. 1500 மட்டுமே
தொடர்புக்கு
📞 63854 43602
முகவரி
ஈரோடு பேருந்து நிலையம் அருகில்,
PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.
    user_ஈரோடு மசாஜ்
    ஈரோடு மசாஜ்
    Spa ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு•
    11 hrs ago
  • குடிநீர், சாலை வசதி கேட்டு காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு மழைக்காலத்தில் சகதியான சாலையால் அவதி – வீடுகள் மீது சாய்ந்து நிற்கும் மின்கம்பங்களால் அச்சம் குடிநீர் வசதியும், முறையான சாலை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறி, காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மொன்னையன் கொட்டாய் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக முறையான குடிநீர் வசதியும், சாலை வசதியும் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறுவதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுள்ளது வாகனங்கள் செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது மேலும், சாலையின் நடுவே சுமார் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது அதேபோல், 10 அடி ஆழத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள நிலையில், முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையிலும், மற்றொரு மின்கம்பம் வீட்டு மீது சாய்ந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது எனவே, அபாயகரமாக உள்ள மின்கம்பங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, பாதுகாப்பான மின்கம்பங்களை அமைக்க வேண்டும். மேலும், மழைக்காலத்திலும் பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் முறையான சாலை வசதியும், தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, மொன்னையன் கொட்டாய் கிராம மக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அடிப்படை வசதிகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் தங்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    1
    குடிநீர், சாலை வசதி கேட்டு காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மழைக்காலத்தில் சகதியான சாலையால் அவதி – வீடுகள் மீது சாய்ந்து நிற்கும் மின்கம்பங்களால் அச்சம்
குடிநீர் வசதியும், முறையான சாலை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறி, காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மொன்னையன் கொட்டாய் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் நீண்ட காலமாக முறையான குடிநீர் வசதியும், சாலை வசதியும் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறுவதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுள்ளது வாகனங்கள் செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது 
மேலும், சாலையின் நடுவே சுமார் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
அதேபோல், 10 அடி ஆழத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள நிலையில், முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையிலும், மற்றொரு மின்கம்பம் வீட்டு மீது சாய்ந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது
எனவே, அபாயகரமாக உள்ள மின்கம்பங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, பாதுகாப்பான மின்கம்பங்களை அமைக்க வேண்டும். மேலும், மழைக்காலத்திலும் பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் முறையான சாலை வசதியும், தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, மொன்னையன் கொட்டாய் கிராம மக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
அடிப்படை வசதிகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் தங்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியம், கிளாக்காடு ஊராட்சி கண்ணூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக விழாவையொட்டி தேமுதிகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.
    1
    கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. 
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியம், கிளாக்காடு ஊராட்சி கண்ணூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக 
விழாவையொட்டி தேமுதிகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது. பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், மத்திய ஒன்றிய செயலாளர் முயற்சி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.
    1
    பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், மத்திய ஒன்றிய செயலாளர் முயற்சி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    16 hrs ago
  • சேலத்தில் சிஐடியூ போக்குவரத்து பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சேலம் மாவட்ட பிரிவின் சார்பில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மெய்யனூர் பணிமனை முன்பு, சிஐடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம், வாரிசு வேலை, காலிப் பணியிடம் நிரப்புதல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
    1
    சேலத்தில் சிஐடியூ போக்குவரத்து பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சேலம் மாவட்ட பிரிவின் சார்பில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மெய்யனூர் பணிமனை முன்பு, சிஐடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம், வாரிசு வேலை, காலிப் பணியிடம் நிரப்புதல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.